Profile cover photo
Profile photo
பரிவை சே.குமார்
நடப்பவை நல்லதாக அமையட்டும்...
நடப்பவை நல்லதாக அமையட்டும்...
About
பரிவை's posts

Post has attachment
'இளமை எழுதும் கவிதை நீ' என்னும் நாவலைத் திரைக்கதை வடிவில் வலையில் எழுதி அதைப் புத்தகமாகக் கொண்டு வந்தவர் அடுத்து 'திருமண ஒத்திகை' என்னும் தொடரை தனது தளத்தில் பாதிவரை எழுதி, பின் அதைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்க, அதற்கிடையே அந்தத் தொடர் பாக்யாவில் வரும் வாய்ப்பைப் பெற்றது. மேலும் குமுதத்தில் அடிக்கடி ஒரு பக்க கதைகள் எழுதி வருகிறார்.

Post has attachment
ஆமா... எந்த அண்ணாச்சிக்குப் பிறந்தநாள்ன்னுதானே கேக்குறேள்... யோசிக்கிறேள்... சை...தொடர்கதையை தொடர்ந்து எழுதிய பாதிப்புல ஐயர் ஆத்துப்பாஷைக்குள்ள போகுது மனசு... சரி வாங்க எப்பவும் போல நம்ம எழுத்துக்குள்ள இறங்குவோம்.

Post has attachment
'என்னைப் பற்றி நான்' எழுதுங்க அண்ணா என்று சொன்னபோது தொழில் நிமித்தமான பயணத்தில் இருப்பதால் விரைவில் அனுப்புகிறேன் என்று மின்னஞ்சல் அனுப்பினார். அதன் பின்னர் ஒருநாள் எழுதி அனுப்பி விட்டு பிடிச்சிருக்கான்னு பாருங்க என்றார். ஏறத்தாழ 15 பக்கங்கள்... வாசித்ததும் வியந்தேன்... என்னைப் பற்றி நான் என்பதை முழுவதும் உள்வாங்கி மூன்று தலைமுறைகளை நம் கண் முன் நிறுத்தி தன்னைப் பற்றி மிக விரிவாய் எழுதியிருக்கிறார்.

Post has attachment
கட்டிடம் முழுவதும் கருகல் வாடை நிரம்பியிருந்தது... ஆஹா... இன்னைக்கு நம்ம உயிர் பிழைச்சிக்கும்... உடமைகள்...? என்று யோசித்து வாசலுக்குப் போயி, எந்தத் தளத்துல.... எதனால தீ பிடிச்சதுன்னு விசாரிச்சா... எவனோ ஒருத்தன் சிகரெட்டைப் பிடிச்சிட்டு குப்பை போடுற வழியில அதை அணைக்காமல் தூக்கிப் போட, அது நேராக சேர்ந்திருந்த குப்பைகளில் விழுந்து அதனால் தீப் பிடித்திருக்கிறது... அட நாதாரிகளான்னு திட்டிட்டு லிப்டைப் பிடித்து மேலே ஏறி வந்து மனைவிக்கு விவரம் சொல்லி.... இல்லேன்னா அவர் தூங்க மாட்டாரே...

Post has attachment
இந்த வாரம் ஆராவாரமாய்... அருமையாய்... தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் ஏஞ்சலின் அக்கா. இவரின் வலைப்பூவில் கருத்து இடுவது... அதுவும் நான் எப்படி கருத்திடுவேன் என்பது உங்களுக்கே தெரியும்... வாசித்தேன் என்பதை தெரியப்படுத்த ஒரு வார்த்தை / ஒரு வரி கருத்து மட்டும்தான் இடுவேன். அப்படியான ஒரு நட்புத்தான் இவரிடம்... நான் மலையாளப் படங்கள் குறித்து பகிரும் போது என் தளம் வந்து கேட்டு படங்களைப் பார்த்த சிலரில் அக்காவும் ஒருவர் அவ்வளவே.

Post has attachment
சாண்டில்யன் அவர்கள் சேர, சோழ, பாண்டியர்களை விடுத்து ராஜபுதன வரலாற்றுக்குள் மூழ்கி முத்தெடுத்ததில் அவருக்கு கிட்டிய ஒரு சுவையான நிகழ்வே 'நாக தீபம்' புதினம். இதன் முன்னுரையில் 'கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய ராஜபுதன வரலாற்று ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ராணா அமரசிம்மன், ஜஹாங்கீருக்கு பணிந்து சமாதானம் செய்து கொண்ட சமயத்தில், மேவார் வம்சத்தில் பரம்பரையாக இருந்த

Post has attachment
ஒவ்வொருவரும் பதிவில் எதாவது ஒரு வகையில் தனித்துவமாய் இருக்க, நானெல்லாம் கதை, கவிதையின்னு மாவரைத்து அப்படி நான் அரைத்த மாவையும் சிலர் சப்தமில்லாமல் எடுத்து வடை சுட, இதென்னடா இது நம்ம மாவை வேற ஒருத்தன் சொல்லாமக் கொல்லாம எடுத்துட்டானேன்னு பொங்கி கதைகள் பகிர்வதை நிறுத்தியாச்சு. வேற ஒண்ணும் எழுதத் தோணாத நேரத்தில் எதாவது வித்தியாசமாய் ஆரம்பித்து வைப்போம் என ஆரம்பித்ததுதான் 'என்னைப் பற்றி நான்'. அதற்காக பலருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அந்தப் பலரில் முதலாவதா

Post has attachment
சுமையா ஒரு நாவலுக்கான கதை என்று சொன்னேன் அல்லவா... ஆம் இந்தியா - பாகிஸ்தானுக்குள் பயணிக்கும் கதை, நிறைய அரசியலையும் அறியாத தகவல்களையும் சொல்கிறது. சுமையா மட்டுமின்றி இதிலிருக்கும் இன்னும் சில கதைகளை விரிக்கலாம். தற்போது வேறொரு நாவலின் வேலையில் இருப்பதால் எப்படியும் சுமையாவை கண்டிப்பாக நாவலாய் விரிப்பார் என்று நம்பலாம்.

Post has attachment
'என்னைப் பற்றி நான்' என்று இந்த வாரம் தன்னைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார் பயணப் பகிர்வும் போட்டோக்களுமாக கலக்கும் வெங்கட் நாகராஜ் அண்ணன் அவர்கள். இவரின் புகைப்படங்கள் நம்மை ஈர்க்கும் என்றால் பயணப் பகிர்வுகள் நாம் பயணிக்காத இந்திய மாநிலங்களிடையேயும் அங்கிருக்கும் மக்களிடயேயும் நம்மையும் பயணிக்க வைக்கும் என்பதை இவரை வாசிக்கும் அனைவரும் அறிவோம்.

Post has attachment
ரகுமான் நடிப்பில் வந்த 'துருவங்கள் பதினாறு' நல்லவனாக காட்டப்பட்டவன்தான் வில்லனாவான் என்ற தமிழ் சினிமா வழக்கப்படி என்றாலும்... அடுத்தது என்ன... அடுத்தது என்ன என ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவலை வாசிப்பது போல நகரும் காட்சி அமைப்புக்கள் நம்மை படத்தோட இணைந்து பயணிக்க வைக்கிறது. ஒரு மழை இரவு... விபத்து... காணாமல் போகும் பெண்... போலீஸ் விசாரணை...
Wait while more posts are being loaded