Profile cover photo
Profile photo
Dheva Subbaiah
2,278 followers
2,278 followers
About
Dheva's interests
View all
Dheva's posts

திமுகவின் தற்போதைய தலைமை அறிஞர் அண்ணா என்ற பெருந்தகைக்குப் பின் திமுக என்னும் கம்பீரக்கப்பலில் வீற்றிருப்பது, அதிமுகவின் தலைமையோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்னும் பெரும் மக்கள் செல்வாக்கு மிகுந்த ஒருவரால் கட்டியமைக்கப்பட்ட பேரியக்கத்தினுள் வீற்றீருக்கிறது...

மக்கள் நலக்கூட்டணியினுள் இருக்கும் எல்லா கட்சித் தலைவர்களுமே இந்த இரண்டு பெருங்கட்சியைச் சார்ந்தே தங்களின் அரசியல் அடிகளை தமிழகத்திற்குள் எப்போதும் எடுத்து வைத்து வளர்ந்தவர்கள்...

தேமுதிமுக வின் தலைமை அடிப்படையில் சினிமா ரசிகர்களைக் கொண்டது, சினிமாவில் கொடிகட்டி கதாநாயகானகப் பறந்து அதன் அடிப்படையில் ஒரு கட்சி என்று தன் வசீகரத்தை மூலதனமாய் வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது...

காங்கிரஸ், பாஜக பற்றி நாம் விவாதிக்க ஒன்றுமில்லை இரண்டுமே தேசிய கட்சிகள்....

ஆனால்....

நாம் தமிழர் கட்சியின் தலைமை அப்படியானது அல்ல.....அது சாதரண குடும்பத்தை சேர்ந்த சாமானியனான சீமான் என்னும் தனிமனிதன் ஒருங்கிணைத்தது, ஈழத்து போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, அழக் கூட முடியாமல் தமிழகத்து தமிழன் பயந்து கிடந்த போது வெடித்துப் பிறந்தது...

2016 தேர்தலில் நாம் தமிழர் அமைப்பு வெல்லாமல் போகலாம் ஆனால்... அந்த கட்சி வாங்கப்போகும் வாக்குகளின் சதவீதம் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளையும் ஸ்தம்பிக்கச் செய்து தலை உயர்த்தி திரும்பிப் பார்க்க வைக்கும் என்பதற்கு ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட நேற்றைய கடலூர் மாநாடே சான்று....!

தமிழர் நிலம், தமிழர் ஆட்சி, தமிழர் நலம்.....இதுவன்றி வேறென்ன நமக்கு

-தேவா சுப்பையா...

+அத்திவெட்டி ஜோதிபாரதி +Krp Senthil

புது வருசம் பொறக்கறது எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை... ஆனா வாட்ஸப் குரூப்ஸ்ல புதுவருச வாழ்த்துக்கள்னு சொல்லி வீடியோவையும், போட்டோவையும் போட்டுத்தள்ளுவானுங்க பாருங்க...


அதை நினைச்சாதன் கொஞ்சம் கெதக்குன்னு இருக்கு.....!


-தேவா சுப்பையா..

கோடி ரூபாய் அன்பாய் கொடுக்க காத்திருக்கும் கடவுளிடம் போய் பத்து பைசா யாசகமாய் கொடுங்கள் என்று கெஞ்சினால் கடவுள் நம்மிடம்...

உனக்கு அறிவு இருக்கா...? என்றுதான் கேட்பார்.

ஆமாம் அறிவு இருக்கிறது என்று பதில் சொன்னால் அந்த அறிவு இருக்கிறது என்று எந்த அறிவு உனக்குச் சொன்னது என்று மீண்டும் நம்மிடம் கேட்பார்.

கடவுளின் கோபம் எப்போதும் நியாயமானதுதான்.. ராஜா சாரின் கோபத்தைப் போல..

லவ் யூ ஆல்வேய்ஸ் ராஜா சார்!!!!!

# வெயிட்டிங் ஃபார் தாரைத் தப்பட்டை #


-தேவா சுப்பையா...

பெரும்பாலான அரசியல்வாதிகள் பொதுமக்களின் முன்பு சட்டாம்பிள்ளைகளாக நின்று கொண்டு அதிகாரம் செய்வதும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதும் வழமையான ஒரு செயலாய் தமிழகத்தில் மாறி வெகு நாளாகி விட்டது. எந்த ஒரு பொது நிகழ்வாய் இருந்தாலும் தடபுடலாய் வெள்ளையும் சொள்ளையுமாய் தடாலடியாய் வந்து பெரியமனிதர் மனோபாவத்தில் பேசுவதும் இதை இதை இப்படித்தான் செய்யவேண்டும் என்று தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் பின் புல அதிகாரத்தை சாமனிய மக்களின் மீது ஏற்றுவதும் சர்வசாதரணமாக தமிழகத்தில் நிகழும் ஒரு நிகழ்வு.

அதன் ஒரு வடிவம் தான் கடலூரிலும் இன்னபிற பாதிப்புக்குட்பட்ட பகுதிகளிலும் ஆளுங்கட்சியினர் தங்களிடம் நிவாரணப் பொருட்களைக் கொடுக்கும் படி நிர்ப்பந்திக்கும் பெரியண்ணன் மனோபாவ வீடியோக்கள். இவர்கள் மக்களுக்கு ஊழியம் செய்ய வந்து மக்களுக்கு எஜமானர்களாய் மாறிப்போனவர்கள். சமூகத்திற்கு உதவி செய்ய அரசியல் கட்சி ஆரம்பித்து அதன் மூலம் நமக்காக பணியாற்ற வந்திருக்கிறார்களே என்று கொஞ்சம் அல்ல நிறையவே மக்கள் கொடுத்த மரியாதையை இவர்கள் தாங்களெல்லாம் தேவனின் தூதர்கள் அல்லது கடவுளர்கள் என்று கருதியே மக்கள் இத்தகு மரியாதையை செலுத்துகிறர்கள் என்று எண்ணி கண்ணை மூடிக் கொண்டு தங்களை புலிகளாய் நினைத்துக் கொண்ட பூனைகள்.

காலம் மாறிவிட்டது இப்போதைய இளையர்கள் முன்பு போல இல்லை, அறிவியல் வளர்ச்சியில் ஊடகப்பெருக்கம் மிகுந்திருக்கும் இந்நாளில் ஊடகங்கள் என்பது ஏதோ ஒரு தனியார் நிறுவனத்திற்கோ, அரசியல் கட்சிக்கோ, நடிகனுக்கோ அல்லது ஊரின் மிகப்பெரிய பணக்காரருக்கோ சொந்தமானது என்ற நிலை மாறிவிட்டது. ஓவ்வொரு தனிமனிதனும் இப்போது அடுத்த நொடியில் உலகத்தையே தொடர்பு கொள்ளக் கூடிய அளவுக்கு சக்திவாய்ந்த மிகப்பெரிய ஊடகமாய் மாறிப்போயிருக்கிறான். எந்த அதிகாரவர்க்கமும் இனி சாமனியனின் முகத்தருகே மூச்சு கூட விடமுடியாது.....

எல்லா அடவாடித்தனமும் வாட்ஸ்ப் ஏறி ஊர்சுற்றி விட்டு, ட்விட்டர் திண்ணையில் வெத்தலைபாக்கு போட்டு துப்பிவிட்டு, கூகிள் பஸ்ஸிலேறி வந்து பேஸ்புகில் வந்து கால் நீட்டிப் படுத்துக் கொண்டு பெரும் பேச்சு பேசும் அப்போது சட்டமும் நீதியும் இன்ன பிற நீதிமான்களும் அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களையும் அடாவடி செய்பவர்களையும் சும்மா விடமாட்டார்கள், பொதுமக்கள் காறி உமிழ்வார்கள். இது எல்லாவற்றுக்கும் மேலாக இனி வரப்போகும் தேர்தல்கள் வெறுமனே காசு வாங்கி விட்டு ஓட்டுப் போடும் கூட்டத்திற்கு சொந்தமானதாய் இருக்காது என்பதைத்தான் சமீபத்திய இயற்கைப் பேரிடரால் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சி அதிரடியாய் சொல்லி சென்றிருக்கும் செய்தி...!


# காலம் மாறிப்போச்சு...#


-தேவா சுப்பையா...
கையறு நிலை என்றால் என்னவென்று எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது சென்னையையும் கடலூரையும் துவம்சம் ஆக்கிச் சென்றிருக்கும் இந்தப் பெருமழை. செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் மூலமும் பேஸ்புக் மூலமும் தொடர்ச்சியாய் செய்திகளைப் பார்த்து அவ்வப்போது மழை பெய்யும் இப்பாலைவனத்து வானம் பார்த்து யா அல்லாஹ், சிவனே, ஜீசஸ் என்று பொத்தாம் படையாக விளித்து மழையை நிறுத்தி மக்களின் துயருக்கு ஒரு முற்றுப்புள்ளி வை என்று கை கூப்பி வேண்டிக் கொண்டிருந்த கடந்த மூன்று நாட்களும் அசுரத்தனமானவை...

தொடர்ச்சியாய் சென்னையிலிருக்கும் உறவுகளையும், நண்பர்களையும் அழைத்து, அழைத்து யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் விரக்தியின் உச்சத்தில் அமர்ந்திருந்த போது என்னை மிரளச் செய்த ஒரு விசயம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், இளைஞர்களும் பொது மக்களும் எடுத்த விஸ்வரூபம்தான். ஸ்டார் வேல்யூ கொண்ட அரசியல் கட்சிகளையும், அதன் தொண்டர்களையும், மேடையில் நரம்பு புடைக்க பேசி மக்களுக்கு உணர்வூட்டுகிறேன் பேர்வழி என்று மூளைச் சலவை செய்யும் பெத்தடின் பேர்வழிகளையும், திரையில் ஊருக்கே நல்லது செய்து ஒற்றை ஆளாய் மக்களின் துயர் துடைத்து கடவுளரைப் போன்று அவதார வேஷம் காட்டும் கதாநாயகர்களையும் என் மக்கள் ஒரு மூலையில் தூக்கி கடாஷி விட்டு தங்களுக்கான தேவைகளை இடப்பாடுகளை சரி செய்து கொள்ள காட்டிய வேகத்தை பார்த்து இந்த பிரபஞ்சமே மிரண்டுதான் போயிருக்கும்.

தமிழகத்தின் இன்ன பிற பகுதிகளிலிருந்து அசுர வேகத்தில் புறப்பட்ட உதவிகளை எல்லாம் ஆளும் அரசு பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மழை அடித்துப் பெய்து ஊரெல்லாம் வெள்ளம் நிரம்பிக்கிடந்த இரண்டாம் நாள் உச்சிப் பொழுதில்தான் சோம்பேறி அரசு அரைத்தூக்கத்தில் எழுந்து அவசர உதவி எண்களை ஊடகங்களில் ஒளிபரப்பத் தொடங்கியது கடும் கண்டனத்துக்குரியது. அதுவும் செய்தியாளர்களின் கேள்விகளை சமாளிக்க முடியாமல் பொது மக்களின் முன்பு திணறி நின்ற மந்திரிமார்களைக் கண்டு அவமானம் பிடுங்கித் தின்றது. அவசர காலத்தில் மக்களைப் பேரிடரில் இருந்து காப்பாற்ற கூட தத்தமது சுய அறிவையும், மனித நேயத்தையும், பொதுவான சிந்தனைகளையும் தத்தமது பதவி கொடுத்திருக்கும் அதிகாரத்தையும் பயன்படுத்தி அரசு இயந்திரத்தை இயங்க வைக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் மந்திரிகளும் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணையின் படி என்று கிளிப்பிள்ளையாய் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்க்க எரிச்சலாய் வந்தது. மக்களை சக உயிராய், மனிதர்களாய் பார்க்காமல் வாக்களர்களாய் பார்க்கும் அரசியல் வியாதிகளை வரப்போகும் சட்டமன்றத் தேர்தல் சர்வ நிச்சயமாய் துடைத்தெறியும்.

பேஸ்புக்கில் இடைவிடாது தகவல்களைப் பறிமாறிக் கொண்டிருந்த என் சக நண்பர்கள் இந்த சமூக இணைவு ஊடகம் எத்தனை வலிமையானது என்று நிரூபித்து இருக்கிறார்கள். தொடர்ச்சியாய் உதவிகள் செய்து கொண்டிருக்கும் அத்தனை தனியார் நிறுவனங்களுக்கும், அரசின் கடைநிலை ஊழியர்களுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், குறிப்பாய் சிங்கமென சிலிர்த்தெழுந்து களத்தில் நின்று உதவிகள் செய்து கொண்டிருக்கும் அத்தனை மனித தெய்வங்களுக்கும்....

என் சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கங்களும்...!


-தேவா சுப்பையா...


துளசியும் நானும் காதலித்தோம்
திருமணம் செய்து கொண்டோம்
எங்களுக்குப் பிள்ளைகள் பிறந்தன
ஒரு நாள் எதிர்பாராமல்
வழியில் சந்தித்தும் கொண்டோம்
அவள் கணவனுக்கு என்னை அறிமுகம்
செய்தது போலே
நானும் என் மனைவியை அவளுக்கு
அறிமுகம் செய்து வைத்தேன்...
பின் விடைபெற்றுக் கொண்ட
அந்த நாளின் மதியத்தில்
துளசி என்னிடம் தொலைபேசியில்
இன்னும்தான் உன்னை காதலிக்கிறேன் என்றாள்...
நானும்தான் காதலிக்கிறேன்
என்று சொல்லாமல் அலைபேசியை வைத்தது
என்னமோ இன்னமும் வலித்துத் தொலைக்கிறது...!தேவா சுப்பையா..

இந்த சமூக இணைவு ஊடகம் எவ்வளவு வலுவானது என்பதை அனுபவப் பூர்வமாய் உணர்ந்து கொண்டேன். ஒரு சிறு வேலை வாய்ப்பு செய்தி எத்தனையோ குழுமங்களுக்குப் பரவி தமிழர்கள், இந்தியர்கள் மட்டுமல்லாது வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் கூட என் தனி மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய சுயவிபரத்தோடு தொடர்பு கொண்டிருந்தார்கள்...

தொடர்பு கொள்ளத் தகுதியாய் இருந்த படிவங்களில் இருந்து மட்டும் சிலரை தொடர்பு கொண்டேன், சிலரை நேர்முகத் தேர்வுக்கும் அழைத்தேன்....

இன்னும் யாரையும் தேர்ந்தெடுக்க வில்லை என்றாலும்...

ஒரு சிறு செய்தியை நாம் பகிர நினைத்தால் எத்தனை ஆயிரம் பேர்களுக்கு இதைக் கொண்டு சேர்க்க முடியும் என்று யோசித்து பார்க்கையில் பிரமிப்பாய் இருப்பதோடு இன்னும் ஆக்கப்பூர்வமாய் இந்த சமூக இணைவு தளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டிருக்கிறது.

நன்றி நண்பர்களே...!


-தேவா சுப்பையா...

Male office Secretary required for an Art and Framing company in Dubai. Candidate should have UAE experience in the same field. 

Salary: AED. 4,000/- to 4,500/-

Send cvs: dheva2000@gmail.com

கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கு கருத்துக்கள் தெரிய ஆரம்பித்த அந்த1984 அக்டோபர் 31ல் நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த போது திடீரென்று கையிலிருந்த பாத்திரத்தை போட்டு விட்டு அம்மா வீட்டு ரேடியோவின் சப்தத்தை அதிகப்படுத்தி கேட்ட படியே விசும்பிக் கொண்டிருந்தார்.... கனத்த சோகத்தோடு சரோஜ் நாரயண்ஸ்வாமி அந்த மரணச் செய்தியை வானொலியில் வாசித்துக் கொண்டிருந்தார்....

ஆமாம்... தன் பதுகாவலர்களாலேயே அன்னை இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற அந்த துக்க செய்தி தொண்டையை அடைக்க அதற்கு மேல் உணவருந்த முடியாமல் எழுந்து நின்று அழுது கொண்டிருந்த அம்மாவை வெறித்துப் பார்த்தபடி மீண்டும் பள்ளிக்கு செல்வதற்கு தயாரானேன் நான்..., பள்ளி விடுமுறையாய் இருக்கும் போய் பார்த்து விட்டு வா என்று அம்மா சொன்னதை கேட்டபடி புத்தகங்களால் பிதுங்கி வழியும் மகாராணி சில்க்ஸின் மஞ்சள் துணிப் பையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு சோர்வாய் வீட்டை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன்...

தெரு முழுதும் இருந்த வீடுகளுக்குள் இருந்த பெண்களின் அழுகையும், கூட்டம் கூட்டாமாய் ஆட்கள் கூடி நின்று பேசியபடி இருந்த அந்த சூழலும் மனதை இறுக்கி கவ்வ ஆரம்பித்தது எனக்கு. பள்ளிக்கூடத்திலும் இதே மாதிரி துக்க குரல்கள், பள்ளி விடுமுறை என்ற அறிவிப்பு என்று மொத்த மனிதர்களையும் கதிகலங்க வைத்தது அன்னை இந்திராவின் அந்தப் படுகொலை.

அன்னை இந்திரா பற்றி 1984 சுதந்திர தினத்தில் பள்ளியில் பேச்சுப் போட்டியில் பேசுவதற்காக அப்பா எழுதி கொடுத்திருந்த அந்த காகிதம் அப்படியே என் மனதில் பதிந்து கிடந்தது. பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பி சீக்கிய பிரிவினைவாதத்தை எதிர்த்து இந்திய ஒருமைபபட்டை காக்க பிந்தரன் வாலேயை அவர் கொன்றதை நான் என் பேச்சுப் போட்டியில் கோடிட்டு பேசியிருந்தேன்....

அந்த பிந்தரன் வாலேயேயின் மரணமே அன்னை இந்திராவையும்  அபகரித்துக் கொண்டது என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். பேசும் இடமெல்லாம் ஓடி ஓடி நின்று கேட்பேன். இந்திய தேசமே துக்கமயமானது, வீடுகள் எல்லாம் அழுதன, வானொலி இடைவிடாது தேம்பிக் கொண்டிருந்தது, அச்சு ஊடகங்களில் கொட்டை எழுத்துக்களில் அன்னை இந்திரா கொலை பற்றி எழுதிக் கொண்டிருந்தார்கள்....

அரிதாய் தொலைக்காட்சிகள் வீடுகளில் இருந்த அந்த நாட்களில் தொலைக்காட்சி இருந்த என் தெருவின் ஒரு வீட்டில் திரட்சியாய் நின்று ஊரே அன்னை இந்திராவின் ஈமச்சடங்கினை வேடிக்கை பார்த்த போது....

உள்ளேயும் வெளியேயும் நிற்க எனக்கு இடம் கிடைக்காமல் கை வலிக்க கம்பி ஜன்னலில் தொங்கிய படி நானும் அந்த ஈமச்சடங்கினை பார்த்து முடித்தேன்....

அன்னை இந்திரா இந்தியாவின் இரும்பு மனுஷி....எப்போதும் போற்றப்படவேண்டியவர்...!-தேவா சுப்பையா... 

 

Post has attachment
தேர்தலில் வெற்றி பெற்ற பூச்சி முருகன் தலைவர் கலைஞரிடம் ஆசி பெற்ற போது....

# பொதுத்தேர்தலுக்கான வெள்ளோட்டமா தலைவரே#
Photo
Wait while more posts are being loaded