Profile cover photo
Profile photo
Mohamed Ashik
1,636 followers
1,636 followers
About
Communities and Collections
View all
Posts

//
டிசம்பர் 30-க்குப் பிறகு என்னுடைய இந்த திட்டம் தவறு என நிரூபணம் ஆனால் அதற்காக எந்த ஒரு தண்டனையையும் ஏற்கவும் நான் தயாராகவே இருக்கிறேன்.
//

எந்த நிரூபணத்தை ஏற்பீர்கள்..?
அதை யாரு நிரூபித்தால் ஏற்பீர்கள்..?
எங்கே நிரூபிக்கப்பட்டால் ஏற்பீர்கள்..?
Add a comment...

டாப் 10 சர்ஜிக்கல் அட்டாக்ஸ்.

சர்ஜிக்கல் அட்டாக் 1
1000 & 500 ரூபாய் இனி செல்லாது.
சர்ஜிக்கல் அட்டாக் 2
ATM & வங்கிகள் 2 நாளைக்கு செயல்படாது.
சர்ஜிக்கல் அட்டாக் 3
1000/500 ரூபாய்களை ரயில் பேருந்து பெட்ரோல் நிலையங்களில் வாங்வகுதில்லை.
சர்ஜிக்கல் அட்டாக் 4
நாடெங்கும்100 ரூபாய் சில்லறை தட்டுப்பாடு. சிறு குறு வியாபாரம் பணப்பரிவர்த்தனை இன்றி மொத்தமாய் முடக்கம். அறிவிக்கப்படாத பாரத்பந்த்.
சர்ஜிக்கல் அட்டாக் 5
புதிய 2000 ரூபாய்க்கு ஏற்ப ப்ரோகிராம் பண்ண வேண்டும் என்பதால் 2 வாரம் ATM கள் செயல்படாது.
சர்ஜிக்கல் அட்டாக் 6
மிக நீண்ட வரிசையில் மணிக்கணக்காய் நின்று, அடித்து பிடித்து வங்கிகளில் ஒரு நாளைக்கு 4000 ரூபாய் மட்டுமே எடுக்கலாம்.
சர்ஜிக்கல் அட்டாக் 7
அப்படி தரப்படும் 4000 ரூபாயும், சில்லறை மாற்ற வாய்ப்பே இல்லாத படி புதிய 2000 ரூபாய் நோட்டாக தரப்படும்.
சர்ஜிக்கல் அட்டாக் 8
அச்சடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் இன்னும் புழக்கத்தில் வந்து சேராத நிலையில் விரைவில் 1000 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்ற அதிரடி அறிவிப்பு.
சர்ஜிக்கல் அட்டாக் 9
நீண்ட வரிசைகளில் பல மணி நேரம் நின்று கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் ஒரு சிலர் பலி.
சர்ஜிக்கல் அட்டாக் 10
மோடிக்காக இந்த கஷ்டங்களை சகித்துக்கொள்ளாதவர்கள் தேசவிரோதிகள்.
Add a comment...

Post has attachment

//
ரூ.400 கோடி கள்ள நோட்டுகளை ஒழிக்க ரூ.17 லட்சம் கோடி நோட்டுகளை முடக்குவதா?- ப.சிதம்பரம் கேள்வி
//

tamil.thehindu.com

​இதைத்தான் "மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவாங்களா ​யாராவது..?"ன்னு நாமெல்லோரும் எட்டாந்தேதியே ஸ்டேட்டஸ் போட்டுட்டோம். இப்பத்தான் கண்விழிச்சு பார்த்து கணக்கு போட்டு சொல்கிறார் இவர்..!

Add a comment...

Post has attachment
11/11
#NationalEducationDay
#தேசிய_கல்வி_தினம்

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் #மௌலானா #அபுல்கலாம் #ஆசாத் தின் பிறந்த நாள்தான் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.

1888ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி... அரேபியர்களான மௌலானா முஹம்மத் க்ஹைருத்தீனுக்கும் ஆலியாவுக்கும் மகனாக... சவூதி அரேபியாவின் #மக்கா நகரில் பிறந்தார் மௌலான அபுல் கலாம் ஆசாத் எனப்பட்ட குலாம் முஹினுத்தின்.

அரபுத்தாய்க்கு பிறந்தவர் தன்
ஆரம்ப கல்வியறிவை தாய்மொழி அரபியில் கற்றவர் பிறகு பல மொழிகளையும் கற்று, உயர் கல்வியறிவை எகிப்தின் கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

சே குவாரா அர்ஜென்டினாவில் பிறந்து கியூபாவின் விடுதலைக்கு போராடியதுபோல...

குலாம் முஹினுத்தின் இந்தியா வந்து பிரிட்டிஷ்க்கு எதிராக விடுதலைக்கு போராடியவர்.

இங்கு வந்து ஹிந்தி உருது ஆகிய மொழிகளை கற்று அவற்றில் புலமை பெற்றார். விடுதலை வேட்கைக்காக நிறைய எழுதினார். பலமுறை பல வருஷங்கள் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்து சிறை சென்ற தியாகி.

மவுலானா என்றால் கல்விமான்.
ஆசாத் என்றால் சுதந்திரம். கலாம் என்றால் எழுதுகோல். அபுல் கலாம் என்றால் எழுதுகோளின் தந்தை.

இப்படி... "#சுதந்திரத்துக்காக_எழுதுபவர்" என்றே அவ்ரது பெயர் முற்றாக இந்தியாவில் அவரின் பெயர் மாறிப்போனது.

பின்னர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்போற்றார். 1947 முதல் 1958 வரை கல்வி அமைச்சர் பதவியில் இருந்தார்.

சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.

வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார்.

"மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள்" என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத். அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார்.

தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951ல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐஐடி.,க்கள் அமைக்கப்பட்டன. 1955ல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை...ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்றார். நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழி நடத்திச் சென்றார்.

அனைத்து மாணவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் ஆசாத். 14வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்.

மெளலானா அபுல் கலாம் ஆசாத் தனது 69ம் வயதில் தில்லியில் காலமானார். இந்திய‌ நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான "பாரத ரத்னா" இவரது மறைவுக்கு பின் 1992ல் வழங்கப் பட்டது.!
PhotoPhotoPhoto
11/11/2016
3 Photos - View album
Add a comment...

Post has attachment
ஊர்ல உள்ள அம்பூட்டு முட்டாள்களும் பொய்களை பரப்பிக்கொண்டு பாஜகவில் தான் உள்ளனர்... மோடி பக்தர்களாக..!
Add a comment...

இன்றைய பலரின் பதிவுகளை வாசித்த போது அறிந்தது :-

நாட்டில் கடுமையான சில்லறை தட்டுப்பாடு நிலவிக்கொண்டு இருக்கையில்,

2 நாளாக அல்லாடி நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள், இன்றைய அத்தியாவசிய தேவைக்கு... கால் கடுக்க கியூவில் நின்றுவிட்டு...

செல்லாத 500₹ 1000₹க்கு பதில் 100₹ 50₹ நோட்டுகள் தினப்படி செலவுக்கு கேட்டால்... 2000₹ தந்து கொண்டு இருக்கிறது முட்டாள் அரசு..! புத்தி வேண்டாமா..?! 2000₹யை எங்கே கொண்டு போயி சில்லறை மாற்றுவார்களாம்..?!

வங்கிகளில் போதுமான சில்லறை நோட்டுகள் ஸ்டாக் இல்லை எனில்... என்ன அர்த்தம்..?!

இதெல்லாம்...

மத்திய அரசின் அப்பட்டமான நிர்வாக சீர்குலைவு. திட்டமிடல் அற்ற சிந்தனை வறட்சி. சிறு குறு தினப்படி வணிக பொருளாதார சீர்குலைவு கடந்த 2 நாட்களை விட இன்னும் மோசமடையலாம்.

மக்கள் 2000₹ வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்... செல்பீ எடுத்து போஸ்ட் அப்டேட் போடுகிறார்கள். ஹ்ம்.
Add a comment...

அந்த கோபால் பல்பொடிகலர் நோட்டவச்சி, பல்லுதேய்க்க பல்பொடி வாங்கமுடியல #சில்லறைபிரச்சனை
Add a comment...

இனி என்ன நடக்கும்..?!

இதனால் ஏற்படப்போகும் விளைவு..?!

கருப்பு பணத்தை ஒழிப்பது... மோடியின் கைகளில் இல்லை.

நாட்டின் பொதுமக்களின் கைகளில்தான் உள்ளது.

அதாவது...

கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை பல ஏழைகளிடம் (அல்லது நடுத்த வர்க்கம்) சிறு சிறு தொகைகளாக பிரித்து கொடுத்து அவர்களை இலவசமாக வங்கிகளுக்கு லாரிகளில் ஏற்றி அழைத்து சென்று மாற்றித்தர சொல்வார்கள். (அல்லது கட்டாயப்படுத்துவார்கள்) இந்த "உதவி"க்கு அல்லது "மிரட்டலு"க்கு இவர்களுக்கு சன்மானமாக எத்தனை சதவீதம் கமிஷன் தருவார்கள் என்பதுதான் அடுத்த 50 நாட்கள் ஹாட் நியூஸ் ஆக இருக்கும்..!
Add a comment...

பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களின் #கருப்புப்பணம் நிச்சயமாக தப்பி இருக்கும்..! முன்னரே விஷயம் தெரிவிக்கப்பட்டு நூறு ரூபாய் நோட்டுகளாக மாற்றி பதுக்கி இருப்பார்கள்..! பாவம்... மற்ற கட்சிகளின் கருப்புப்பணத்தின் கதை அந்தோ பரிதாபம்..!
Add a comment...

இன்று நள்ளிரவு முதல் 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனில், எல்லா ATM களிலும் அதை வைத்தது ஏனென்று தெரியவில்லை. வெறும் 100 ரூபாய்களை மட்டுமே அல்லவா வைத்திருக்க வேண்டும்..?!
நூறு நூறாக வரும் என்று பணம் எடுத்தவர்கள் கைகளில் 1000மும் 500ம் வந்தால்... அந்தோ பரிதாபம் அவர்கள்..!

அப்புறம் எங்கெல்லாம் அந்த 500ம் 1000மும் செல்லுபடியாகும் என்று சொன்னீர்களோ... அங்கேயெல்லாம் 100 ரூபாய் கட்டுகளை கொண்டு போய் இறக்கி சில்லறை தர ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டாமா..?! 'அவர்கள் சில்லறை இல்லை' என்று கூறி வாங்க மறுக்கிறார்கள். அறிவிப்பு வீண்.

அதெல்லாம் விட முக்கியமாக... 'அடுத்த 2 நாளைக்கு கரன்சி மாற்ற, வங்கிகள் ATM போலவே 24 மணி நேரமும் முழுமூச்சோடு ஓவர்டைம் போட்டு இயங்கும்' என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்..?!

சாமானிய ஏழை எளிய மக்களின் கஷ்டத்தை உணராமல் என்ன அரசோ... என்ன நிர்வாகமோ... ஐயோ பாவம்... பஸ் ஸ்டாண்டிலும் ரயில்வே ஸ்டேஷனிலும் மருந்து கடைகளிலும் ஹோட்டல்களிலும் பெட்ரோல் பங்குகளிலும் கையில் 1000 500 என்று கஷ்டப்பட்டு உழைத்து சம்பாரித்த #வெள்ளைப்பணம் வைத்துக்கொண்டு செய்வதறியாமல் பசியால் எங்கே போவதென்று தெரியாமல் விழிபிதுங்கி அல்லாடும் அப்பாவி மக்கள்..!

நியூஸ் சேனல்களில் அவர்களை பார்க்கவே கஷ்டமாக உள்ளது.
Add a comment...
Wait while more posts are being loaded