Profile cover photo
Profile photo
Krishna Moorthy S
2,924 followers -
தேடலில் இருப்பவன்....! எதை என்பது தனிக் கேள்வி, தனித்தேடல்!!தங்களைப்பற்றிய சுயவிவரம், எழுத்து இவைகளைப் பற்றிய சிறு அறிமுகம் கூட இல்லாதவர்கள் என்னைத் தங்கள் வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டாமென்று வேண்டுகிறேன். அநாமதேயங்களை என்னுடைய வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்வதில்லை!
தேடலில் இருப்பவன்....! எதை என்பது தனிக் கேள்வி, தனித்தேடல்!!தங்களைப்பற்றிய சுயவிவரம், எழுத்து இவைகளைப் பற்றிய சிறு அறிமுகம் கூட இல்லாதவர்கள் என்னைத் தங்கள் வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டாமென்று வேண்டுகிறேன். அநாமதேயங்களை என்னுடைய வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்வதில்லை!

2,924 followers
About
Krishna Moorthy's posts

Post has shared content
இருபது,இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் Resource Teachers Special Teachers என்பதைக் கேள்விப்பட்டிருக்க முடியாது. இன்றைக்கு குழந்தைகள் வளரும்போதே குறைபாடுகள் எதுவும் தெரியவந்தால் குணப்படுத்த, மாற்றுத்திறன்களைப் பயிற்றுவிக்க ஒவ்வொரு நகரத்திலும் ஆசிரியர்கள், மருத்துவர்கள் செயல் படுகிறார்கள். #செவிச்செல்வம் மிக அருமையான குறும்படம்

காணொளி அறிமுகத்துக்கு நன்றி +மென்பொருள் பிரபு

Post has attachment
சமூக வலைத்தளங்கள் குறிப்பாக ட்வீட்டர் போன்ற குறுந்தகவல் தளங்கள் சும்மாப் பின்னிப் பெடல் எடுக்கின்றன. இது ஒரு சின்ன சாம்பிள்தான்! :-))))) 
Photo

Post has attachment
டில்லி மாநகராட்சித் தேர்தல்களில் #பிஜேபி பெற்றிருக்கும் வெற்றி இந்தச் செய்திக் கட்டுரையை எழுதியிருக்கும் ஸ்ரீமாய் தாலுக்தாரை ரொம்பவுமே உறுத்தியிருக்கிறது போல.
#அரவிந்த்கேஜ்ரிவால் மீதான கோபம் தான் இப்படி வெளிப்பட்டிருக்கிறதே தவிர #பிஜேபி மீதான காதலால் அல்ல என்கிறார். இங்கே இந்தியத் தேர்தல் முறைகளில் யாரைப் பிடித்த்திருக்கிறது என்பதை விட யாரைப் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமான நெகடிவ் வோட்டிங் இருப்பது உண்மைதான். அது மட்டுமே காரணம் என்றால் காங்கிரசுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலான இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். அப்படி அல்லாமல் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறதே! தாலுக்தார் கொஞ்சம் இதை யோசித்தாராமா?

அனால் தேர்தல் நடந்து, முடிவுகள் வருவதற்கு முன்னாலேயே தோல்வியை ஒப்புக்கொள்கிற விதமாக #EVM ஓட்டிங் மெஷின்கள் மீது பழியைச் சுமத்திய #கேஜ்ரிவால் அகடவிகடம் கொஞ்சநஞ்சமா? 

Post has shared content
+Manickam sattanathan பார்க்கவும், பகிரவும்! என்று சொன்ன பிறகு பகிராமல் இருக்க முடியுமா? 
தி.மு.க செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு தமிழனின் பதிலடி
நான் பலமுறை சொன்னது தான்..செயல்தலைவர் விவரமாக பேசுவதாக நினைத்து கடைசியில் மொக்கை வாங்குவது வாடிக்கை..

செயல்தலைவரின் வீடியோ மூலம் மோடிக்கு எச்சரிக்கையும், நண்பரும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் திரு Ramakrishna Gauthaman ன் எதிர்வினையும்..

பார்க்க... பகிர

Post has attachment
கேரள அமைச்சரின் கொச்சையான பேச்சுக்கு கடும் எதிர்ப்புக்கு கிளம்பி இருக்கும் நிலையில் #பிருந்தாகாரட் அமைச்சரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருப்பதாக Deccan Cronicle செய்தி சொல்கிறது. இழிவாகப் பேசிய அமைச்சரோ தாம் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்று முறுக்கிக் கொண்டிருப்பதாக இந்தச் செய்தி சொல்கிறது. மார்க்சிஸ்டுகள் கொள்கைகளை மட்டுமல்ல இன்னும் என்னென்னவற்றையோ உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் 

Post has shared content
#மருத்துவர்ராமதாஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போலித்தனத்தை நன்றாகவே தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
#beepsong க்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் இதற்கெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு போய்விடுவார்க ளோ ?

சிபிஎம் பேசும் பெண்ணுரிமை போலியானதா… கேரள அமைச்சரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை: ராமதாஸ் கேள்வி #kerala #ramadoss

Post has shared content
இந்தக்கொடுமைக்கு நம்ம #எம்சிபி பிரமுகர் +Asif Meeran அவர்களை நியமித்திருக்கலாமே! :)) 
The conservative Islamic kingdom is very strict about its policy of gender segregation.

Post has attachment
காங்கிரசின் அஜய் மாய்க்கான் ட்வீட்டரில் வாய் மலர்ந்து உளறியிருப்பது டில்லி முனிசிபல் தேர்தல்களைப் பற்றி! 

Post has attachment
#பானாசீனா உள்துறை அமைச்சராக இருந்த நாட்களில் (2007) சிந்தல்நார் தண்டேவாடா என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் இதே மாதிரி பல முனைகளிலும் இருந்தும் ஒன்று கூடித் திட்டமிட்டு #CRPF 52 வைத்து படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்த பொது கண்ணிவெடிகளை வைத்தும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் மேற்கொண்டதில் எழுபத்தாறு வீரர்கள் பலியாகினர் , இதற்குமுன்2000 ஆம் ஆண்டிலும் இதே போன்ற மாவோயிஸ்டுகளின் ஒருங்கிணைந்த தாக்குதல் நடந்திருக்கிறது.

ஒவ்வொரு ஐந்துபத்து ஆண்டுகளிலும் மாவோயிஸ்டுகள் இப்படி ஒருங்கிணைந்து #CRPF வீரர்களை பொறி வைத்துத் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள்

உயிரிழந்த வீரர்களுக்கு உண்மையான
அஞ்சலி செலுத்துவதென்பது #CRPF தலைமை போதிய பாடம் கற்றுக் கொண்டு விட்டதா பதிலடி கொடுக்கச் சித்தமாயிருக்கிறதா என்பதில் இருக்கிறது

வளர்ச்சி இல்லாத பகுதி, மக்கள் தான் மாவோயிஸ்டுகள் உருவாகும் விளைநிலங்கள் என்பதை புரிந்து கொண்டால் நல்லது 

Post has shared content
சும்மா லூசுல உடுங்க சகாவே! சண்டைன்னா கிழியாத சட்டை எங்கே இருக்கு என்ற தத்துவத்தை #தோழர்வடிவேலு நீண்ட நாட்களுக்கு முன்னாலேயே சொல்லி வைத்திருக்கிறார்!! 
Wait while more posts are being loaded