Profile cover photo
Profile photo
mannarnews
7 followers -
Mannar News
Mannar News

7 followers
About
mannarnews's posts

Post has attachment
தொடரும் இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினை :

Post has attachment

Post has attachment
http://voiceofmannar.com

மன்னாரில் மாணவர்களை பாடசாலையில் இணைக்க பணம் அறவீடு!

Post has attachment

Post has attachment
மன்னாரில் ‘நர்த்தன போதினி’ எனும் நடனம் தொடர்பான வினா-விடை நூல் வெளியீடு

Post has attachment
மன்னார் கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லவில்லை!

Post has attachment

வடக்கு முழுவதுமுள்ள கரையோரப் பாடசாலைகளை மூட ஆளுநர் சந்திரசிறி உத்தரவு:-
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் தொடர்ந்தும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்தும் மழை அவ்வப்போது பெய்துகொண்டிருக்கிறது.

நாட்டின் வடகிழக்குக் கடற்பரப்பில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இலங்கையை அடைந்துள்ளதுடன் காற்றழுத்தம் வடபகுதியை கடக்கும் போது தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி நேற்றைய தினம் கடல் அலை 3மீற்றருக்கு மேல் எழும் என்றும் காற்று 100கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்றும் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்து.

இன்றும் இருள் மூட்டத்துடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இபெரும்பாலான வீதிகள் வெள்ளக்காடாகவும் மாறியுள்ளன இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வடக்கு கிழக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தற்காலிக கூடாரங்களில் வசிக்கும் மக்கள் கடும் மழையிலும் குளிரிலும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இவைகளினால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. வன்னிப் பகுதி மக்களின் நிலமை மிகவும் மோசமாக காணப்படுவதாக  குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வடக்கு முழுவதுமுள்ள கரையோரப் பாடசாலைகளை மூட ஆளுநர் சந்திரசிறி உத்தரவு:-

வடக்கில் சீரற்ற காலநிலை தொடர்கின்ற நிலையில் வடக்கு முழுவதுமுள்ள கரையோரப் பாடசாலைகளை மூட ஆளுநர் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக யாழ். மாவட்டத்திலுள்ள வடமராட்சி மற்றும் தீவகக் கரையோரப் பாடசாலைகளுக்கும்  முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் ஏனைய கரையோரப் பாடசாலைகளிற்கும்  இன்று திங்கட்கிழமை (06.01.14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அந்தந்த கல்வி வலயப் பணிப்பாளர்களுக்கு தான் அறிவித்துள்ளதாக  வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக வடமாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை (06.01.14) பகல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே பாடசாலைகளுக்கு  இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Post has attachment

மன்னார் மனித புதைகுழியில் இருந்து 18 மண்டைஓடுகள்!

மன்னார் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு அருகாமையில் இருந்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து நேற்று வரையிலும் 18 மண்டை ஓடுகளும், பல எலும்புத் தொகுதிகளும் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை, அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நீண்டகாலமாக படையிரின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம் பகுதியும் அடங்கு கின்றது.மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவு கட்டுக்கரை,அடம்பன்,தொடக்கம் மடு வரையான பகுதிதான் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியாக காணப்படுகின்றது போர் உக்கிரம் அடைந்த காலம் தொடக்கம் மன்னார் தள்ளாடி படைமுகாமினை முதன்மை படுத்தி சிறீலங்கா படையின் 58 ஆவது டிவிசன் படைஅணியும் சிறீலங்கா கடற்படையின் அணியினரும் நீண்டகாலமாக நிலைகொண்டுள்ளார்கள்.
இவ்வாறு காணப்பட்ட பகுதியில் சிறீலங்கா படையினரின் படுகொலைகள் அங்காங்கே அரங்கேறிக்கொண்டிருந்த நிலை அன்று காணப்பட்டது திருக்கேதீஸ்வரம் பகுதிக்கு நீண்டகாலமாக மக்கள் செல்வதை படையினர் தடைவிதித்திருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு படையினரின் மனித படுகொலையின் சாட்சியாக காணப்படும் பல்வேறு மனித புதைகுழிகள் யாழ்ப்பாணம் தொடங்கம் கிளிநொச்சி முல்லைத்தீவுமாவட்டங்களிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1997 ஓயாத அலைகள் 2 நடவடிக்கை மூலம் சிறீலங்கா படையினரிடம் இருந்த கிளிநொச்சியினை மீட்ட விடுதலைப்புலிகள் குறிப்பிட்ட காலப்பகுதியில் 50ற்கு மேற்பட்ட மனித புதைகுளிகள் அன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது கைதுசெய்யப்பட்ட தமிழ்மக்கள் அக்கராயன்,திருநகர்,கிளிநொச்சி நகர்,இரணைமடு, தொண்டமான் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மலசலகூட கிடங்குகளிலும் கிணறுகளிலும் இருந்து மனித எலும்புகூடுகள் மீட்கப்பட்டமை இன்று நினைவிற் கொள்ளத்தக்கது.
இவ்வாறு இன்று வன்னி பெருநிலப்பரப்பில் சிறீலங்கா படையினரின் இனஅழிப்பின் சான்றுகள் பல்வேறு மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டுள்ளமையும் இறுதிபோரின் போது படையினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள்போராளிகள் இளைஞர்கள் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டு எதுவித தடயங்களும் இல்லாமல் எரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Photo
Wait while more posts are being loaded