Profile cover photo
Profile photo
வினோத் கன்னியாகுமரி
4,171 followers -
வாழ்க்கை பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிட காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன்...
வாழ்க்கை பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிட காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன்...

4,171 followers
About
Posts

Post has shared content
#தமிழன் உதடுகளில்...
ஆங்கிலம் ஆணவத்தின் உச்சம்!
#தமிழ் தன்மானத்தின் மிச்சம்!
Photo

Post has attachment
#சொந்தசமையல் குமரி special பலா கூட்டு
PhotoPhotoPhoto
6/5/16
3 Photos - View album

நான் ஒவ்வொரு தடவையும் வாக்களிக்குற கட்சி தோற்குது. இந்த தடவை எந்த கட்சிக்கு வாக்களிக்கணும் சொல்லுங்க ஒறவுகளே... #TNElection2016

யாருக்கு வாக்களிக்கலாம்?

தமிழக தேர்தல் வந்துவிட்டது. யாருக்கு வாக்களிப்பது என இப்போதே நீங்கள் முடிவு செய்திருப்பீர்கள். அல்லது அரசியலே தெரியாமல் குடும்பத்தவர் சொல்லும் ஏதாவது ஒருவருக்கு வாக்களிக்கும் நபராக இருக்கலாம்.
என்றாலும் இதை ஒரு முறை படித்துவிட்டு உங்கள் வாக்கை முடிவு செய்யுங்கள்.

ஜனநாயக திருவிழாவான தேர்தலில் தமிழகத்தில் முக்கியமான 6 கட்சிகள் உள்ளது.


1. அதிமுக (இரட்டை இலை) - ஜெயலலிதா
2. திமுக காங்கிரஸ்(உதய சூரியன்/கை) - கருணாநிதி
3. பாஜக(தாமரை) - மோடி
4. மக்கள் நல கூட்டணி - மநகூ(பம்பரம்/முரசு/அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்) - வைகோ/விஜயகாந்
5. பாமக(மாம்பழம்) - அன்புமணி ராமதாஸ்
6. நாம் தமிழர்(இரட்டை மெழுகுவர்த்தி) - சீமான்


திமுக தீவிர திராவிட கட்சி. இந்து மதத்தை எதிர்த்தே வளர்ந்த கட்சி. தேர்தலில் தோற்றால் கூட பாப்பனர்களை திட்டும் கட்சி. கட்சி என்பதே கருணாநிதி குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு குடும்ப கட்சி.

அதிகமுகவும் திராவிட கட்சி தான் என்றாலும் அது பெயரளவுக்கு தான் திராவிடமே தவிர அனைவரையும் அரவணைத்து வளர்ந்த கட்சி. குடும்ப கட்சி இல்லை.
ஆனால் அதிமுக திமுக இரண்டுமே ஊழல் செய்வதில் பெயர் பெற்ற கட்சிகள். மணல் நிலக்கரி கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, அடியாட்கள், அடுத்தவர் நிலத்தை மிரட்டி எழுதிவாங்குதல் போன்ற வன்முறைகளை நிகழ்த்தும் ஆட்களை உடைய கட்சிகள்.

பாரதிய ஜனதா (BJP) இந்துத்துவ கட்சி / RSS கட்சி என்று பெயர் பெற்ற கட்சி.

வைகோ(மதிமுக), விஜயகாந்(தேதிமுக), கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து 'அதிமுக மற்றும் திமுகவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க' என்ற கோஷத்தில் உருவான கூட்டணி மக்கள் நலக்கூட்டணி.

பாட்டாளி மக்கள் கட்சி ஜாதி கட்சி, வன்னியர் கட்சி என்று பெயர் பெற்ற கட்சி.

இறுதியாக, நாம் தமிழர், சைமன் செபஸ்டியன் என்ற திரைப்பட இயக்குநர் முன்பு தீவிர திராவிட பற்றாளனாக இருந்து, இப்போது தமிழர் என்ற கொள்கையை வைத்து அரசியலுக்காக முருகனுக்கு காவடி எடுக்கும் நிலைக்கு சென்ற சீமான் அவர்களுடைய கட்சி.

இவர்களில் நாம் அதிமுக மற்றும் திமுக இவர்களுக்கே வாக்குகளை அளித்து வந்திருக்கிறோம். யார் அதிகமாக இலவசங்களும் பணமும் தருகிறார்களோ அவர்களை அரியணையில் ஏற்றி அழகு பார்த்து பின் புலம்புவதை நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

இந்த முறை ஜெ, இலவச கைபேசியும், பெண்களுக்கு பைக் வாங்க பாதி மானியமும் தருவதாக அறிவித்துள்ளார். அப்புறமென்ன அம்மாவுக்கு தான் வாக்கு என்று குத்திவிட வேண்டியது தான் இல்லையா? கொஞ்சம் இருங்க. நமக்கு உடலில் மூளை என்ற ஒரு பகுதி இருக்கிறது அல்லவா. அதை கொஞ்சம் செயல்படுத்தி பார்த்துவிட்டு வாக்களிக்கலாமா? ஏனென்றால் அடுத்த ஐந்து வருடம் இதற்காக மூளையை செயல்படுத்த முடியாமல் போகலாம்.

நம் வாக்கு நம்மை மட்டுமே பாதிக்கும் என்றால் பரவாயில்லை. நாம் தான் ஏற்கெனவே படுகுழியில் கிடக்கிறோம். மின்வெட்டு எல்லாம் பழகிவிட்டது. குண்டும் குழியுமான சாலைகளில் மழைநீர் வடியும் ஓட்டை அரசு பேருந்துகளில் பயணம் செய்து பழகிவிட்டது. விவசாய நிலத்தை விற்றாவது மகனுக்கோ மகளுக்கோ கல்விக்கு பணம் கட்டி பழகிவிட்டது. அரசு அலுவலக வேலைகளுக்கு கேட்கும் லஞ்சம் கொடுத்து பழகிவிட்டது. ஆனால் வளர்ந்து வரும் உங்கள் மகளுக்கோ மகனுக்கோ இதெல்லாம் பழக்கமில்லையே. உங்களுக்கு இருந்ததை போல அவளுக்கு விற்றுப்பிழைப்பதற்கு நிலம் இருக்காதே என்ன செய்வாள்? அவனுக்கு பல லட்சம் கட்டி படிக்க வைக்கிறீர்களா? வேலை கிடைக்காதே? என்ன செய்வான்? நிறைய பணம் இருக்கிறதா? வேகமாக உயரும் விலைவாசியில் நீங்கள் சேர்த்த பணம் உங்களுக்கே கரைந்துவிடுமே? பணமே இருந்தாலும் விவசாயம் அழிந்த பிறகு எதை உண்பது? வெளிநாட்டு கம்பனிகள் நம் தண்ணீரை உறிஞ்சி நம்மிடம் குளிர்பானமாக விற்று சம்பாதித்துவிட்டு சில வருடங்களில் அவன் அவன் நாட்டுக்கு டாடா காட்டிவிட்டு பறந்துவிடுவான். நிலத்தடி நீர் கொள்ளை போன பின்பு குடிக்கும் நீருக்கே தெருப்பிச்சை அல்லவா எடுக்க வேண்டும்?

இல்லை இல்லை, என் மகனும் மகளும் நன்றாக இருப்பார்கள் என கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறீர்களா? அவ்வளவு முட்டாளா நீங்கள்? இதெல்லாம் கற்பனை அல்ல, நாம் சரியாக செயலாற்றாவிட்டால் இதெல்லாம் நடந்தாலும் நடக்கும். இதற்கு ஆளும் அரசல்லவா ஏதாவது செய்ய வேண்டும் வீட்டில் டிவி முன் உட்கார்ந்துகொண்டு இதையெல்லாம் எப்படி செய்வது என்று தானே யோசிக்கிறீர்கள்? உங்களால் முடியும்! ஒரே ஒரு வாக்கு இதை செய்யும். நல்லது செய்யாத அராஜக அரசை தூக்கி எறிந்து நல்ல அரசை கொண்டு வர உங்களின் ஒரு கைவிரல் போதும்.

ஆனால், எல்லா கட்சிகளும் சாக்கடை தான் என்று சொல்ல வருகிறீர்கள் தானே? உண்மைதான். எல்லா கட்சிகளும் சாக்கடை தான். ஆனால், நம் வீட்டு முன் கெட்டிக்கிடக்கும் சாக்கடை வேண்டுமா அல்லது அசுத்தங்களை அகற்றி ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடை வேண்டுமா என்பதையாவது நாம் முடிவு செய்ய வேண்டும் அல்லவா?

கை நீட்டி பணம் வாங்கி விட்டேன் இனி எப்படி அவர்களுக்கு வாக்கு போடாமல் இருப்பது என்கிறீர்கள் அப்படித்தானே? பொய் சொல்லலாம். ஒரு நல்லதுக்காக பொய்களை சொல்லலாம் என நம் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். நாம் இதுவரை பொய்யே சொல்லாதவர்களா என்ன!

வெற்றி பெறும் கட்சிக்கு தான் என் வாக்கு என்கிறீர்களா? அதிமுக வெற்றி பெறும் என நினைத்தோம் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. திமுக வெற்றி பெறும் என நினைத்த போது அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி அறிவித்த பின்பு தானே எந்த கட்சி வெற்றி பெற்றது என்பதே நமக்கு தெரியும். அதன் முன் நாம் எப்படி எந்த கட்சி வெற்றி பெறும் என முடிவெடுப்பது? பத்திரிகைகள் தொலைகாட்சிகள் தரும் கருத்து கணிப்பு செய்திகளை நம்புகிறீர்களா? ஹேஹே, பணம் தந்தால் வாக்கு போடும் உங்களைப்போல தான் அவர்களும் விளம்பரம் மூலம் பணம் கொடுத்தால் அவர்களுக்கு ஆதரவாக செய்திகள் போடுவார்கள். அவர்களும் மனிதர்கள் தானே, நம்மை மாதிரி தானே இருப்பார்கள். இப்போதெல்லாம் சேவை அறக்கட்டளை அனாதை இல்லம் என்ற பெயரிலேயே கொள்ளையடிக்கும் போது, எழுதி எழுதி வியாபாரம் செய்வோர்கள் எப்படியாவது பணம் சம்பாதிக்க நினைக்க மாட்டார்களா என்ன?

கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் நிறைய சம்பாதிக்கிறார்கள், ஆனால் நமக்கு கிடைப்பது அவர்கள் தரும் இலவசங்கள் மட்டும் தான், இலவசங்கள் தரும் கட்சிக்கு தான் என் வாக்கு என்கிறீர்களா? நீங்கள் ஒருவர் அந்த கட்சிக்கு வாக்கு போடாவிட்டால் ஒன்றும் அந்த கட்சி தோற்றுவிடாது என்ற நிலையில் நீங்கள் ஏன் இலவசத்திற்காக அலைய வேண்டும். இலவசங்களால் எப்படியும் அந்த கட்சி வெற்றி பெறும் என அவர்கள் நம்பிதானே இலவசங்களை அறிவிக்கிறார்கள்? வெற்றிபெற்றால் இலவசம் கிடைத்துவிட்டு போகிறது. திமுக வெற்றிபெற்ற போது கேஸ் அடுப்பு, தொலைகாட்சி பெட்டி வாங்கினோம். அதிமுக வெற்றிபெற்ற போது மிக்சி, கிரைண்டர் பேன் வாங்கினோம். பிடிக்காத கட்சி நாம் வாக்களிக்காத கட்சி தருவதால் வேண்டாம் என்றா சொல்லிவிட்டோம்?

இலவசம் தான் தேவை என்றால், இந்து மக்கள் கட்சி என்ற ஒரு கட்சி இருக்கிறது தெரியுமா? அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்திற்கு ஒரு கோடி கொடுப்பதாக அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்திருக்கிறார். அக்கட்சிக்கு பெரிய அளவு வாக்கு வங்கி எல்லாம் இல்லை. ஒரு கோடிக்காக நீங்கள் அக்கட்சியை ஜெயிக்க வைத்து விடுவீர்களா?

இலவசம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என அவர்கள் நம்பிதானே இலவசங்களை அறிவிக்கிறார்கள்? ஒரு முறை இவர்களை தவிர்த்து நல்லவர்களுக்கு வாக்கு போட்டு பார்ப்போமே. குறைந்த பட்சம், எலும்புத்துண்டை போட்டால் வாலாட்டும் நாய்கள் அல்ல நாம் என்பதையாவது நாம் மனசாட்சிபடி உறுதி செய்து கொள்ள வேண்டும்.

எனக்கு பிடித்த தலைவர் அதனால் அவருக்கு தான் வாக்களிக்கப்போகிறேன் என்கிறீர்களா? இரண்டு விஷயம் சிந்தியுங்கள். நீங்கள் என்ற தனிமனிதருக்கு பிடிப்பது முக்கியமா அல்லது தமிழ் நாட்டின் எதிர்காலம் முக்கியமா? வாழ்ந்த நீங்கள் முக்கியமா அல்லது உங்கள் மகன் மகளின் வாழ்க்கை முக்கியமா?

நான் திராவிடன் தான் நான் திராவிடத்துக்கு தான் வாக்களிக்கப்போகிறேன் என்கிறீர்களா? கொஞ்சம் நியாயத்தை பேசுவோமா? ஒரு கொள்கையின் பலன் அதன் செயல்பாட்டில் விளங்கும் என்பது உண்மைதானா? உண்மையே. திராவிடத்தின் செயல்பாடுகளை நீங்கள் 50 வருடங்களாக நீங்கள் தமிழ்நாட்டில் பார்த்துவிட்டீர்கள். திராவிட கொள்கைகளில் ஒன்றையாவது திராவிடம் முழுமையாக செயல்படுத்திவிட்டதா? இல்லை. ஒரு கொள்கையை செயல்படுத்த ஐம்பது வருடங்கள் போதாதா? யாரை ஏமாற்ற?

திராவிடத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று ஜாதி ஒழிப்பு. இத்தனை ஆண்டுகள் திராவிடம் ஆண்ட பின்னும் திராவிடம் தமிழத்தில் ஜாதியை ஒழித்துவிட்டதா? இல்லவே இல்லை. ஒரு ஜாதியை கூட ஒழிக்கவில்லை என்பது மட்டுமில்லை ஜாதியை வளர்த்துள்ளது என்பது உண்மை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பலரும் தங்கள் ஜாதியை குறிப்பிடவேண்டாம் என்று குரல் கொடுக்க திராவிடம் என்ன சொன்னது தெரியுமா? கண்டிப்பாக அனைவரும் ஜாதியை குறிப்பிட வேண்டும் என்றது. ஏனென்றால் அப்போது தான் எங்கே எத்தனை பேர் என்ன ஜாதியில் இருக்கிறார்கள் என்பது தெரியும். அப்போது தான் அந்தந்த இடங்களில் அக்குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி அரசியல் செய்ய முடியும்.

அதை விடுங்கள். இந்த செய்தியை பாருங்கள். கோவில்பட்டியில் வைகோ போட்டியிடுவதாக இருந்தது. கடைசி நிமிடத்தில் போட்டியிடவில்லை. அவர் போட்டியிடாதது முக்கியமில்லை. ஆனால் அவர் சொன்ன காரணம் முக்கியம். கோவில்பட்டியில் திமுக ஜாதிக்கலவரத்தை தூண்டுகிறது என்ற வைகோ கூறிய காரணத்தில் எவ்வளவு அர்த்தங்கள்! திமுக என்ற திராவிடத்திலேயே இருந்து அக்கட்சியை முழுமையாக அறிந்தவர் வைகோ. அவர் கூறியதை எளிதாக தள்ளிவிட முடியாது. திமுக அரசியலுக்காக ஜாதியை வைத்து என்னென்ன செய்யும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இது தான் இங்கே வெளிப்படையாக தெரிகிறது. இன்னும் திராவிடம் ஜாதியை ஒழிக்கும் என்று நம்புகிறீர்களா? ஜாதியை ஒழிக்க முற்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாக ஜாதிகளுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தி அனைவரும் ஒன்றே என்ற எண்ணத்தை அல்லவா தூண்ட வேண்டும்? அப்படியான நிகழ்வு ஒன்றாவது திராவிடத்தில் நிகழ்ந்துள்ளதா? இல்லை.

தாழ்த்தப்பட்ட கட்சிகளுக்கு ஆதரவாக திராவிடம் இருக்கிறது என்று நீங்கள் நம்பினால் இங்கேயும் நீங்கள் தவறு செய்கிறீர்கள். கருணாநிதியோ சுடாலினோ தேவைப்பட்டால் பாப்பன பெரியவாள்களுடன் கூட்டு வைத்துக்கொள்ளும் அரசியல் தான் அவர்களுடையது. முன்பு மத்தியில் பாஜக வந்த போது பதவிக்காக அவர்களுடன் கூட்டு வைத்த கட்சி கருணாநிதி கட்சி.
தலித் இன கட்சி என அறியப்படுகிற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமிபத்தில் "தலித்கள் மதம் மாறியதால் அவர்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை" என்று ஒரு கருத்தை கூறியிருக்கிறார். முன்னேற்றம் என்பது பொருளாதார முன்னேற்றம் சமூக அந்தஸ்து இரண்டுமே சேர்ந்தது. ஆனால் அரசியல் கட்சிகள் தாழ்த்தப்பட்டவர்களை வைத்து அரசியல் செய்யவே விரும்புகிறது. அவர்களை ஏழைகளாகவே தாழ்த்தப்பட்டவர்களாகவே வைத்திருக்க விரும்புகிறது. அவர்கள் முன்னேறிவிட்டால் பின்பு எதை வைத்து அரசியல் செய்வது?

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக திராவிடம் இருக்கிறது என்றால் திராவிடத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து அதிக MP களும் MLA களும் தலைவர்களும் இருக்க வேண்டும் அல்லவா? இல்லையே? ஏன்? கருணாநிதி குடும்பத்தில் இருந்து தானே தலைவர்கள் வருகிறார்கள்? இந்த காரணத்திற்காக தானே வேகமாக வளர்ந்து வந்த வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார்? ஆனால் எங்கள் கட்சியில் அதிக தாழ்த்தப்பட்ட MP, MLA கள் இருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா சொல்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாக்கு போட வேண்டும் என்றால் திமுகவை விட்டுவிட்டு திருமாவளவன் கட்சிக்கு வாக்கு கொடுங்கள்.
திமுக மட்டும் வேண்டாம். ஒரே ஒரு கேள்வியை மட்டும் நம்மிடம் நாம் கேட்டுக்கொள்வோம். ஒற்றுமையை வளர்க்கும் கொள்கை முக்கியமா அல்லது இனவெறியை வளர்த்து கலவரத்தை தூண்டும் கொள்கை நாட்டுக்கு முக்கியமா?

டீ கடைகளிலோ நண்பர்களிலோ எவனாவது சொல்வதை நம்பி ஒரு கட்சிக்கு வாக்களிக்கப்போகிறீர்களா? யாராக இருந்தாலும் தான் விரும்பும் கட்சியைப்பற்றி நல்லதையும் மற்ற கட்சிகளைப்பற்றி கெட்டதையும் சொல்வார்கள். அதையா நம்பப்போகிறீர்கள்? உங்களுக்கு என்று சொந்த சிந்தனை வேண்டாமா?

நாமாக கொஞ்சம் சிந்திப்போமே.

இலவசங்களை கொடுக்கும் எந்த கட்சியும் இலவச உயர் கல்வி கொடுப்போம் என்பதை கூறவில்லை என்பது கேவலமான ஒன்று. வருங்காலம் நன்றாக இருக்க அத்தியாவசியமான ஒன்று கல்வி தான். இரண்டாவது கல்வி பயின்றோருக்கு தகுதிற்கு ஏற்ப வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுத்தல். இந்த இரண்டும் ஆட்சி நாற்காலியை பிடிக்க ஓடும் கட்சிகளிடம் இல்லை.

மின்சார பிரச்சனையோ, குடிநீர் பிரச்சனையோ, சுகாதார பிரச்சனையோ தமிழகத்தில் தீர்ந்த பாடில்லை.
தமிழக அரசின் அவல மின்சார கொள்கைகளால் 73000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கூறுகிறார் என்றால் திமுக அரசின் மின்வெட்டு பிரச்சனைக்கு இணையாக அதிமுக அரசு இருக்கிறது என்பது தானே பொருள்.

நகர கட்டமைப்பு: கடந்த வருட இறுதியில் சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டது. அதை அனுபவித்தவர்கள் அந்த ஞாபகங்களை வாழ்க்கையில் மறக்கமாட்டார்கள். மக்கள் தத்தளிக்கும் போது 'மக்களுக்காக நான்' என்று சொல்லும் அம்மா சும்மா தான் இருந்தார். உதவிக்காக இந்திய இராணுவம் தான் வந்தது. மோடியும் வருகிறார் என்று தெரிந்ததும் ஜெ ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்தார். ஆனால் விஜயகாந்தும் வைகோவும் வேட்டியை மடித்து கட்டி நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு இயன்ற அளவு உதவி செய்தார்கள். RSS, இஸ்லாமிய அமைப்புகள் உதவின. நாம் தலையில் தூக்கி வைத்த நடிகர் பட்டாளங்களின் சங்கமோ "மக்களுக்கு உதவுவது எங்கள் வேலையல்ல" என்று கூறி ஓடிவிட்டது. (சித்தார்த், பாலாஜி, தனுஷ், அஜித் போன்ற ஒரு சிலர் மட்டும் விதிவிலக்கு.) ஆனால் 'நமக்கு நாமே' என்று சொல்லி நடையாய் நடந்து வீடியோ எடுத்து பரப்பிய திமுகவின் சுடாலின் கேரள ஹோட்டலில் சுகமாக உண்டு உறங்கிக்கொண்டிருந்தார்.

இது ஒரு தடவை ஏற்பட்டது படிப்பினை! ஆனால் இனி இதே போல வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டால் நீர் சீக்கிரமாக வடிவதற்கான கட்டமைப்புகள் சென்னையில் ஏற்படுத்தப்பட்டுவிட்டனவா? இல்லை! இந்த வருடம் அதிக வெப்பமாக இருக்குமென்றும் அடுத்த ஆண்டு அதிக மழையாக இருக்குமென்றும் இந்திய ஜோசியம் கூறுகிறது. முட்டாள் தனங்களை நம்பாதீர்கள். இன்றைய நவீன அமெரிக்க வானிலை மையங்கள் இந்த வருடம் கால நிலை மாற்றம் 'எல் நினோ' வால் அதிக வெப்பத்தை நீங்கள் அனுபவிப்பது போல அடுத்த வருடம் 'லா நினோ' என்ற கால நிலை மாற்றத்தால் அதிக மழை வரும் என இப்போதே அறிவுறுத்திவிட்டது. வீட்டிற்குள் தண்ணீர் நிறைய, குழந்தைகளை தூக்கிக்கொண்டு மேல் மாடிக்கு ஓடுவதை கற்பனை செய்து கொள்ளுங்கள். கடந்த மழையில் விலையுயர்ந்த கார்கள் கூட வெள்ளத்தால் சேதமாகி கிடக்கிறது. அரசு தரும் மானியத்தால் வாங்கிய பைக்கால் நீங்கள் நீரில் நீந்த முடியாது. அம்மா ஸ்டிக்கர் ஒட்டிய இலவச சைனா கைபேசிகளை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பசியாற்ற முடியாது. இந்திய இராணுவம் மேலே இருந்து போடும் உணவுப்பொட்டலங்களுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியே இல்லை. மின்சாரம் இல்லாமல் எந்த அறிவியல் தொழில்நுட்பமும் கைகொடுக்காது. ஆனால் அந்த சமயம் ஆளுங்கட்சி எதிர்கட்சியையும் எதிர்கட்சி ஆளுங்கட்சியையும் குறைசொல்லிக்கொண்டிருப்பதை கேட்க முடியும். எனவே இப்போதே நகர நீர் மேலாண்மை கட்டமைப்புகளை திருத்தியமைத்தாக வேண்டும். ஊழல் இல்லா கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இத்திட்டங்கள் நல்ல முறையில் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் 12 ஸ்மார்ட் சிட்டிகளை மத்திய பாஜ அரசு அறிவித்துள்ளது. அதில் சென்னையும் ஒன்று. அதில் இந்த நீர் மேலாண்மை இருக்கிறது. தற்போதைய உடனடி தேவை ஸ்மார்ட் சிட்டி இல்லை, ஆனால் நீர் மேலாண்மையும் நதி நீர் இணைப்பு திட்டமும் உடனடியாக செயல்படுத்தப்பட்டாக வேண்டும்.

சென்னை கடலூர் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் நகர கட்டமைப்பு எதிர்கால தேவைக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட வேண்டும்.

இதற்காகவாவது, அதிமுக, திமுக வேண்டாம். மநகூ, நாம் தமிழர், பாஜக, பாமக இவற்றில் ஒன்றை தெரிவு செய்யுங்கள். அதிமுக திமுக வந்தால் இத்திட்டங்களிலும் எவ்வளவு ஊழல் செய்யலாம் என்று தான் பார்க்கும்.

மது விலக்கு: கடந்த சில மாதங்களாக மதுவிலக்கு கூச்சல்கள் தமிழகத்தில் அதிகம் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இப்போது ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மதுவிற்கு அடிமையாகி வருவது பெருகிவிட்டது. யாருக்கும் தெரியாமல் குடித்த காலம் போய் பட்டப்பகலில் டாஸ்மாக்குக்கு சென்று மது வாங்கும் பெண்கள் அதிகரித்திருக்கிறார்கள் என்றால் மதுவிலக்கு தேவை என்ற கூச்சலில் அர்த்தமிருக்கிறது. ஆனால், அவ்வாறு சொல்பவர்களை அரசு காவலர்களை வைத்து அடித்து இழுத்துப்போவது தான் மிக கொடூரம். மக்களுக்கு பாதுகாவலனாக இருக்க வேண்டிய காவலர்களை கேவலம் மதுக்கடைகளுக்கு நாய் மாதிரி காவலாளியாக இந்த அரசு வைத்திருக்கிறது. இந்த காட்சிகளை காணும் போது அந்த காவலர்களில் ஒருவருக்கு கூடவா சுயமரியாதை இல்லை என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

மதுவை ஒழிப்பது என்பது கடினமே. மதுவை ஒழித்தால் ஒரு மது அடிமை என்ன செய்வான் யோசித்துப்பாருங்கள். இதே போதை வேறு எங்கு கிடைக்கும் என தேட ஆரம்பிப்பான். (பீஹாரில் மதுவிலக்கு வந்த போது அதன் பக்கத்து மாநிலமான ஜார்க்கண்ட்டில் மது விற்பனை அதிகரித்தது) இதை விட, போலி மது, புகை, கஞ்சா விற்பனை தான் கூடும். மதுவை விட கஞ்சா மிக கொடிது. நம் வளரும் தலைமுறை மாணவர்களுக்கு இவை கிடைத்தால் என்னாகும்? யோசியுங்கள்! சிகரெட் உடல்நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் அதை தடை செய்வதை விட்டுவிட்டு சிகரெட் விலையை கூட்டி சிகரெட் உற்பத்தியாளர்களுக்கு கொள்ளை லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும் அரசு நம்முடையது. விலை கூடினால் உபயோகம் குறையும் என்பது சப்பை காரணம்! இதில் மட்டும் ஆளும் மத்திய அரசோ மாநில அரசோ வேறுவேறல்ல.

எதிர்பார்த்த படி பல கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் 'மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இரட்டை இலை மட்டும், மதுவிலக்கை படிப்படியாக அமல் செய்வோம் என்று சொல்கிறது. குடிமகன்களால் வரும் கோடிகளை உடனடியாக கைவிட்டுவிட அம்மா அரசு விரும்பவில்லை. தமிழகத்தில் இருக்கும் மது ஆலைகள் அதிமுக திமுக வின் பினாமிகளுக்கு சொந்தமானது. மதுவிலக்கு அமல் செய்யப்பட்டால் இக்கட்சிகளுக்கு நஷ்டமே.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திமுக நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் என திமுகவின் '2G புகழ்' கனிமொழி திருவாய் மலர்ந்திருக்கிறார். அவர்களுக்கு மக்களின் நலன் முக்கியமாக இருந்திருந்தால் இப்போதே அந்த மது ஆலைகளை மூடியிருக்கலாம். ஆனால் அப்படி அல்ல, அவர்களுக்கு மக்கள் நலன் அல்ல, பதவி நாற்காலி தான் முக்கியம் என்பதையே இந்த கருத்து காட்டுகிறது.

நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் இதே போல மதுவிலக்கு கூச்சல்கள் எழும்பிய போது ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு புதிய வழியை கண்டுபிடித்தது. அதாவது ஏழை எழிய மக்கள் வாங்குவதற்காக விற்பனை செய்யப்பட்ட கடைகளை மட்டும் மூடி ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய அனுமதி அளித்தது. அவர்கள் சொன்ன காரணம் அதிமுக சொன்னது தான். படிப்படியாக மதுவிலக்கு செய்கிறோம், வரும் காலங்களில் மொத்தமாக மூடிவிடுவோம். அவர்கள் இவ்வாறு செய்து ஒருவருடம் ஆகிவிட்டது. இன்னும் மொத்தமாக மதுவிலக்கு ஏற்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்திற்கு கேரள நீதிமன்றம் கூட ஆமாம் சாமி என தலையாட்டியிருக்கிறது. அதாவது, நாம் குடிக்க வேண்டும் என்றால் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சென்றாக வேண்டும். நடுத்தர விற்பனையாளர்களை இதன் மூலம் ஒழித்து பணமுதலைகளுக்கு மொத்த விற்பனையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது அரசு. (இதற்கு கோடிகோடியாக லஞ்சம் வாங்கப்பட்டது என அந்த வழக்கும் கேரளாவில் நடந்துவருகிறது. காங்கிரசுக்கு ஊழல் வழக்குகள் எல்லாம் சர்வசாதாரணம்.) தமிழகத்திலும் அதிமுக அரசு இதே பாணியை பின்பற்றலாம். மதுவிலக்கை கொஞ்சம் கொண்டுவந்துவிட்டோம் என்றும் சொல்லலாம், மது ஆலைகளும் தொடர்ந்து செயல்படும். மதுகுடியன்கள் ஒரு நாள் செலவை நூறிலிருந்து ஐநூறாக கூட்ட தயாராகிக்கொள்ளுங்கள்.

இந்த மதுவிலக்கு கொள்கையில் அதிமுகவும் திமுகவும் ஒன்று தான். மதுவிலக்கு கொண்டு வருவதாக இருந்திருந்தால் அதிமுக, திமுக அரசு முன்பே கொண்டுவந்திருக்கலாம். இதுவரை ஆட்சியில் இருந்து செய்யாததை இனி செய்வோம் என்று சொல்வதை எக்காரணம் கொண்டும் நம்பாதீர்கள்.
பாமக, பாஜக மதுவிலக்கை கொண்டு வந்தாலும் வரலாம். மநகூ கொஞ்சம் சந்தேகமே. வைகோவின் மகன் புகையிலை தயாரிப்புகளின் விநியோகஸ்தர். விஜயகாந் பற்றி சொல்லவே வேண்டாம். அவரும் உங்களைப்போல ஒரு குடிமகன் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

பல ஆண்டுகள் முன்பு உள்ளூர் ஆட்கள் போலி மதுவகைகளை தயார் செய்து அதனால் அங்கங்கே பல உயிர்கள் பறி போனது தினசரி செய்தியாக இருந்தது. இதை காரணம் காட்டி மதுவை அரசு நடத்த ஆரம்பித்த போது அவர்கள் நம் நாட்டு தென்னை பனை கள்ளையும் சேர்த்து தடை செய்தார்கள். அதாவது அவர்களின் கட்சி ஆட்கள் உற்பத்தி செய்யும் மதுவை மட்டுமே குடிக்க வேண்டும்.

நம் தமிழர் கட்சியின் கொள்கையில் இந்த விஷயம் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. அவர்கள் வெளிநாட்டு குடலை அரிக்கும் மதுவகைகளை மட்டும் தடை செய்து நம் நாட்டு தென்னை கள் பனை கள் போன்ற உடலுக்கு தீங்கில்லாத நல்லது செய்யும் கள் வகைகளை மறுபடி அனுமதிப்போம் என்கிறார்கள். இதனால் தென்னை பனை போன்ற மண்ணுக்கு உதவும் மரங்கள் விவசாயம் பெருகுவதோடு இந்த வகை கள் உடலுக்கு நல்லதே என்பதால் மதுவால் வரும் நோய்களில் இருந்து விடைபெறலாம். தற்போதைய ஆசிட் மதுவை விட இயற்கையான தென்னை பனை கள்ளில் சத்துக்கள் மிக உண்டு, விலையும் குறைவு, அதிகமாகவும் குடிக்க முடியாது.
மதுவிலக்கு தேவை என கொள்கை ரீதியாக அறிக்கை விடும் கட்சியாக பாமக இருந்து வந்துள்ளது. மக்களின் போராட்டம் ஆரம்பித்தபின் அது மற்ற கட்சி தேர்தல் அறிக்கையில் தற்போது இடம் பெற்றிருக்கிறது.
இதற்காகவாவது அதிமுக திமுக தவிர மற்ற எந்த கட்சி தேவை என்பதை முடிவு செய்யுங்கள்.

மீத்தேன் திட்டம்: இது என்ன திட்டம் என்று கேட்கும் ஆட்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், மன்னிக்கவும், உங்கள் வீட்டை ஒருவர் கொள்ளையடித்தாலும் நீங்கள் அறிய வாய்ப்பில்லை.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தஞ்சாவூர் உட்பட்ட நெல்விளையும் பொன் பூமி 'காவிரி டெல்டா' விவசாய பகுதிகளை பாலைவனம் ஆக்கும் திட்டம். விவசாய நிலங்களில் நிறைய ஆழ் துளைகள் இட்டு மீத்தேன் ஆராயும் திட்டம் இது. இவ்வாறு வெளிநாடுகளில் ஆராய்ந்த இடங்கள் எல்லாம் இப்போது பாலைவனமாக காட்சியளிக்கிறது. இதற்கு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தது திராவிடத்தின் சொந்த வாரிசு சுடாலின் தான். இப்போது சொல்கிறார், தெரியாமல் கொடுத்துவிட்டேன் என்று. அவ்வளவு முட்டாளா சுடாலின் அவர்கள்? யோசிக்க வேண்டிய விஷயம் இது. தமிழக விவசாயிகளின் அடிவயிற்றிலேயே மிதித்துவிட்டு தெரியாமல் பட்டுவிட்டது என்று சொல்கிறார். கன்னத்தில் அடித்துவிட்டு பிறகு அதை மறைக்க அவருடன் சேர்ந்து செல்பி எடுத்தால் சிரித்த படி போஸ் கொடுக்கும் சுயமரியாதை கெட்ட திராவிட தொண்டரா தமிழக விவசாயிகள்? மிகப்பெரிய கேடு விளைவிக்கும் திட்டத்தை சர்வசாதாரணமாக அனுமதியளிக்கும் அளவுக்கு தான் திமுகவின் அறிவு இருக்கிறது என்பது சுடாலின் செயல்பாடுகளில் இருந்து விளங்குகிறது. எத்தனை பொட்டிகள் கைமாறியதோ? இன்னும் ஐந்து ஆண்டுகள் அவரிடம் ஆட்சி இருந்தால் உங்கள் வீட்டுடன் சேர்த்து தமிழ் நாட்டை விற்றுவிடுவார்.

நற்செய்தியாக, மத்திய மோடி அரசு இந்நிறுவனத்திற்கு வழங்கியிருந்த லைசன்ஸை திரும்பப்பெற்றுக்கொண்டது. எனவே இத்திட்டம் நிறுத்தப்பட்டது.

நதி நீர் இணைப்பு:
இந்தியா முழுவதுமே பல இடங்களில் பஞ்சம் நிலவுகிறது. மக்கள் நீரைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் செயல்திட்டத்தில் நதி நீர் இணைப்புத்திட்டம் இருந்தாலும் அதை இன்னும் செயல்படுத்தவில்லை. கங்கையை சுத்தம் செய்வதில் முனைப்பு காட்டுகிறது. ஆனால் ஆந்திர அரசு அங்குள்ள நதிகளை வெற்றிகரமாக இணைத்திருக்கிறது. தமிழ் நாட்டில் இது பற்றிய சிந்தனையே இல்லாது கர்நாடக நீர் விடவில்லை, முல்லைப் பெரியாறு அணையின் மட்டத்தை இன்னும் கூட்ட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது.
அவிநாசி அத்திக்கடவு நீர் திட்டம் 60 ஆண்டுகளாக காமராஜர் காலதிலிருந்தே மக்களால் கோரிக்கை வைக்கப்பட்டு கிடப்பில் கிடக்கிறது. இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் இனி ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம் என்கிறார்கள். உள்ளூர் திட்டங்களே இப்படி இருக்க பாரதி கனவில் கண்ட 'காவிரியை கங்கையுடன்' இணைக்கும் திட்டம் எந்த வரலாற்றில் நிகழுமோ தெரியவில்லை.

திராவிட அரசுகள் இதைச்செய்யும் என்ற நம்பிக்கையில்லை. ஏனென்றால் அம்மா அறிவித்திருக்கும் இலவசங்களை கொடுக்கவே ஒரு லட்சம் கோடிக்கு மேல் உங்கள் வரிப்பணம் தேவை. இப்போதே நாம் ஒவ்வொருவரும் பல்லாயிரத்திற்கு கடனாளிகள். தமிழகத்தை மேலும் கடனாளி ஆக்கிவிட்டா திராவிட கட்சிகள் வாழப்போகின்றன?

கொடாநாட்டிற்கும் கோபால புரத்திற்கும் நீர் கிடைக்கும் வரை திராவிட கட்சிகள் நீர் பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை.

தமிழகத்தின் மீது போலியாக நடிக்காமல் நிஜமாகவே அக்கரை கொண்ட கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுப்போம்.

ஊழலற்ற அரசாங்கம்:
தமிழகத்தின் கேன்சர் நோயாக ஊழல் இருக்கிறது. ஒரு பஞ்சாயத்தில் திட்டங்களை எடுத்து செயல்படுத்தும் கான்ட்ராக்டர்களை கேட்டால், கொடுக்கும் 10 சதவிகிதத்தை வாங்கிக்கொண்டு கேள்வி கேட்காமல் பில் போட்டு விடும் EO வை அவரா தங்கமான மனுஷன் என்பார்கள். அதே சமயம் அதிகம் கேட்டாலோ, வேலையை சரியாக செய்யச்சொல்பவரையோ அமைச்சர்களை வைத்து தூக்கி மாற்ற முயற்சி செய்வார்கள். ஒரு சின்ன வீடு கட்ட ஆரம்பித்தால் ஊழல் தமிழகத்தில் எவ்வளவு புரையோடி இருக்கிறது என்பதை ஒவ்வொரு இடத்திலும் கண்கூடக காண முடியும். அதிகாரிகள் வாங்குகிறார்கள். அமைச்சர் வாங்குகிறார். காண்ட்ராக்டர்களின் லாபம் இவையெல்லாம் போத மீதி பணத்தில் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டால் அந்த திட்டம் தரமற்றதாகவே இருக்கும். இப்படியான ஊழலால் தான் சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்துகள் நடக்கிறது. கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து பலர் இறந்ததை போல விபத்து ஏற்படுகிறது. பணம் பெற்றுக்கொண்டு ஆறுகள் குளங்கள் வீட்டு மனைகளாகின்றன. இன்னும் ஊழல் இல்லா தமிழகத்தை நாம் கொண்டு வர வேண்டாமா? தேவை ஆட்சி மாற்றம்.

ஈழப்பிரச்சனை:
சமூக வலைதளத்தில் கண்ணில் பட்ட ஒரு கருத்து. "ஒரு தலைவர் 'ஐய்யோ கொல்றாங்களே' என்று கத்தினார், பல லட்சம் மக்கள் பதறினர். பல லட்சம் மக்கள் 'ஐய்யோ கொல்றாங்களே' என்று கதறினார்கள். ஆனால் அந்த ஒரு தலைவர் அசையவில்லை", எவ்வளவு உண்மை! ஆம், நம்ம தலைவர் கருணாநிதி தான். ஈழப்பிரச்சனை எப்போதுமே தமிழகத்தில் தேர்தல் பிரச்சனையாக இருக்கவில்லை என்பது உண்மைதான். அவனவனுக்கு வந்தால் தான் அது பிரச்சனையாக இருக்கிறது.

கடந்த ஆண்டு நண்பருடன் சென்ற போது ஒரு பிரபல ஈழத்து கவிஞரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது வைகோ மற்றும் சீமான் இருவரின் ஈழ கோஷம் பற்றிய பேச்சு வந்தது.

அந்த கவிஞர் கூறியது, "அப்போது ஒரே தலைமை இருந்தது. பிரச்சனை இல்லாமல் இருந்தது. இப்போதோ போராளிகள் பல கட்சிகளாக சிதறுண்டு கிடக்கிறார்கள். களத்தில் போராடுவோர்கள் மட்டும் போராளிகள் அல்ல. வெளிநாட்டில் இருந்து கொண்டு போராட்டத்திற்காக நிதி திரட்டி அனுப்பியவர்களும் போராளிகள் தான். வெளிநாட்டில் இருந்து ஈழப்போருக்காக பல கோடிக்கணக்கில் பணம் வந்துகொண்டிருந்தது. அந்த பணங்கள் இப்போது தேங்கி கிடக்கிறது. யாருக்கு கொடுப்பது என்ற சிக்கல் இருக்கிறது. இதை சாதகமாக வைத்து ஒவ்வொருவரும் நாங்கள் தான் அண்ணன் பிரபாகரனின் நிஜ வாரிசு என்று போட்டி போடுகிறார்கள். பல கோடிகளை பெறுவதற்கான கோஷங்கள் இவை" என்று வருத்தப்பட்டார்.

அண்னன் பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வரும் முன் மூச்சு விடாதவர்கள் எல்லாம் இப்போது நாங்கள் தான் அண்ணனின் விழுதுகள் என பிதற்றுகிறார்கள். இந்த ஈழ இனப்படுகொலைக்கு சாதகமாக இருந்த காங்கிரஸ் திமுக என்ற இரு கட்சிகளும் தமிழினத்திற்கே அவலம். பிரபாகரன் இறந்தார் என்று தந்தியின் செய்தியின் கீழே மற்றுமொரு செய்தி வந்திருந்தது. "திமுகவிற்கு எத்தனை சீட்டுகள் கொடுப்பீர்கள் என்று கருணாநிதி சோனியாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவது" பற்றிய செய்தி அது. இப்போதும் இவ்விரு கட்சிகளும் கூட்டணி தான்.

ஒழிக்கப்பட வேண்டிய நச்சுகள் இவை.

மக்களுக்காக நான் என்று சொல்லும் அம்மா ஆட்சிக்கு வந்தால், முதலமைச்சராக அம்மா தோழி சசிகலா தான் வர வேண்டும் ஏனென்றால் ஊழல் வழக்கில் அம்மா ஜெயிலுக்கு செல்வது உறுதி என்று சொல்கிறார் சுப்ரமணியன் சுவாமி.

கருணாநிதியோ 'எனக்கு ஓய்வு தாருங்கள்' என கெஞ்சி வாக்கு கேட்கிறார். அதாவது யாரோ ஒருவர் 'இன்னும் பதவியில் இருங்கள் அரசியலில் இருந்து விலகாதீர்கள்' என 93 வயதான கருணாநிதியிடம் சொல்கிறார்களாம் அதை அவரும் கேட்கிறாராம். ஓய்வு தேவை என்றால் தேர்தலில் நிற்காமல் இருப்பதல்லவா அவர் செய்யும் முதல் வேலையாக இருக்க வேண்டும். இனி அவர் குடும்பத்தில் யாருக்கு பணம் சம்பாதித்து கொடுக்க போட்டியிடுகிறார் என்பது அனைவரும் கேட்கும் கேள்வி.

மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்கு போடலாமா?

போடலாம். இங்கே வைகோ, விஜயகாந், திருமாவளவன், தமாகா, கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந் தான் முதல்வர் வேட்பாளர் என்பது தான் யோசிக்க வைக்கிறது. முன்பு போல விஜயகாந்த் இப்போது இல்லை என்பது அவரது பேச்சுகளில் தெரிகிறது. விஜயகாந் முதல்வர் ஆனால் அது பினாமி அரசாகவே இருக்கும். விஜயகாந் கைபாவையாக இருப்பார். ஆட்சி என்பது விஜயகாந் மனைவி பிரேமலதாவிடமும் அவர் மைத்துணனிடமும் தான் இருக்கும். முதல்வர் பதவி ஆசை பலரை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும். விஜயகாந் பாவம்.

கம்யூனிஸ்ட்கள் அதிகாரத்தின் மூலம் பல வேலைகளை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள். 2012 ஆம் ஆண்டு கேரளாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய CPM தலைவர் மணி, நாங்கள் எங்கள் அரசியல் எதிரிகளை கொலை செய்திருக்கிறோம் என்று உண்மையை போட்டுடைத்தார். முதலில் எதிரிகளை பட்டியலிட்டோம். அடுத்தட்டு அவர்களை தீர்த்து கட்டினோம் என்றார். (வழக்கு நடக்கிறது)

எங்களை எதிர்த்தால் கொலை செய்வோம் என்று ஆவேசமாக சொல்வது வேறு, எதிர்த்தவர்களை கொலை செய்திருக்கிறோம் என்று சொல்வது வேறு. மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பின் அதை பொறுக்க முடியாமல் கேரளாவில் கம்யூனிஸ்ட்கள் பல பாஜக தலைவர்களை கொன்று வருகிறார்கள். கம்யூனிசம் என்ற கொள்கை நல்லது தான். ஆனால் இங்கே கம்யூனிஸ்ட்களின் செயல்கள் கொலைகார கூட்டத்தின் செயல்பாடாகவே இருந்துவந்துள்ளது. ஜனநாயக நாட்டில் எதிரிகளை ஜனநாயக முறைப்படி தோற்கடிக்க வேண்டுமே தவிர கத்தி எடுத்து நடுரோட்டில் வெட்டிக்கொல்லும் வழிமுறையில் அல்ல. கம்யூனிஸ்கள் ஆட்சி வந்தால் இம்மாதிரியான கொலைகள் தமிழகத்தில் அதிகரிக்கலாம் என்ற அச்சம் பலரிடம் உள்ளது. இந்த காட்சிகளை கண்டுவரும் கேரளாவில் இப்போது பலரும் பாஜக பக்கம் திரும்பியுள்ளார்கள். அதன் உச்சமாக, காங்கிரஸ் முதல்வரே, இப்போது போட்டி எங்களுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் அல்ல, எங்களுக்கும் பாஜகவுக்கும் தான் என பேட்டி கொடுக்க வைத்திருக்கிறது.

வைகோ வெல்ல வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இருந்தது. கோவில்பட்டியில் வைகோ போட்டியிடுகிறார் என்றதும் அதன் மகிழ்ச்சியை வைகோவின் தொண்டர்களிடம் காண முடிந்தது. ஆனால் அவர் பின்வாங்கிவிட்டார். மகிழ்ச்சி களையிழந்து போனது. வைகோ என்ன செய்ய போகிறார் தெரியவில்லை. பிரபாகரன் மீது ஒரு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும், கேரளா புதிய அணை கட்டினால் தமிழகத்தில் கலவரம் வெடிக்கும் என்று நரம்பு புடைக்க பேசுவது வைகோ. ஆனால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடினால் அது யாருடைய இரத்தமாக இருக்கும் என்பதையோ கலவரம் வெடித்தால் அதில் பலியாவோர்கள் தமிழர்கள்தானே என்பதையோ யோசித்து பேச வைகோவால் இயலவில்லையே.

இருந்தாலும் மநகூ வெற்றி பெற்றால் அது ஜனநாயக வெற்றியாக இருக்கும். ஏனென்றால் பல கட்சிகளின் கூட்டணி என்பதால் அங்கே தனிக்கட்சியின் அராஜகம் இருக்காது என்று நம்பலாம். ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பக்கம் இழுக்க, அதிகமாக நல்ல திட்டங்கள் நல்ல முறையில் நடக்க அது உதவும்.

நம் தமிழர் கட்சிக்கு வாக்கு போடலாமா?
போடலாம். எப்படி கருணாநிதி திராவிடத்தை வைத்து அரசியல் செய்தாரோ அதே பாணியில் தமிழினத்தை வைத்து அரசியல் செய்பவர் சீமான். அவர் கட்சியின் பல கொள்கைகள் சிறப்பாக இருக்கிறது. தேவையானதாகவும் இருக்கிறது. ஆனால் இமேஷ்வரம் கோவிலை இடிப்போம் என்கிறார் சீமான். இது தொடக்கம் தான். தமிழகத்தில் எந்த கோவிலும் இருக்காது. முருகன் முப்பாட்டன் என்பதெல்லாம் வெளிவேஷங்கள். தெளிவான கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்துவாக இருந்தாலே நீ ஆரியன் வந்தேறி என்று சொல்லும் திராவிடத்திற்கும் சீமானுக்கும் எந்த வித்தியாசமும் காணமுடியவில்லை. இதனால் தான் இஸ்லாமியர்கள் திராவிடத்தை ஆதரிப்பது போல கிருத்துவர்கள் கம்யூனிசத்தையும் நாம்தமிழர் சீமான் என்கிற சைமன் செபஸ்டினையும் ஆதரிக்கிறார்கள் என்பது வெளிப்படை. சீமானை ஆதரிக்கும் ஒரு கிருத்துவராவது முருகன் என் கடவுள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது.

பாஜகவிற்கு வாக்கு போடலாமா?
போடலாம். மத்திய மோடி ஆட்சியால் திமுக கொண்டுவந்த விவசாயிகளை கருவறுக்கும் மீத்தேன் திட்டம் இரத்து செய்யப்பட்டது, இலங்கையில் மரண தண்டனை பெற்ற ஐந்து மீனவர்களை மீட்டது, குமரியின் நீண்டகால கனவான வர்த்தக துறைமுகம் கொண்டு வந்தது, தமிழகத்திற்கு நகர புணரமைப்பு திட்டமான ஸ்மார்ட் சிட்டிகள் கொண்டு வருவது என பல நன்மைகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக தமிழகத்தில் செயல்படுத்த முடியாமல் மாநில அரசு செயல்படுகிறது என மத்திய அமைச்சர் வெங்கையநாயிடு குறை சொல்கிறார். தமிழகத்திலும் பாஜக ஆட்சி வந்தால் இத்திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்துவோம் என மோடி கூறுகிறார். அனைவருக்கும் வீடு, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி என்ற நீண்ட கால திட்டங்களை வைத்துக்கொண்டு பாஜக இருக்கிறது.

மத்தியில் இரண்டு வருட ஆட்சியில் ஊழல் இல்லை என்று சொல்கிறார்கள். வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் இதன் உண்மைத்தன்மை தெரியவரும். அரசு அதிகாரிகள் அமைச்சர்களுக்கு எப்படி லஞ்சம் வாங்குவது என்று கற்றுக்கொடுக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் பொய். மத்திய அரசில் அமைச்சர்கள் தான் மாறியிருக்கிறார்களே தவிர அரசு அதிகாரிகள் மாறவில்லையே. லஞ்சம் இல்லை என்கிறார்களே? எப்படி சாத்தியமாயிற்று? தலைமை பத்து ரூபாய் கேட்டால் தொண்டன் தனக்கும் சேர்த்து இருபது ரூபாய் கேட்பான். அமைச்சர் கேட்பதால் அதிகாரிகளும் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.

அரசு அதிகாரிகளை கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதற்கு, செயல்படாமல் இருந்த பல அரசு அதிகாரிகளை மோடி அரசு கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது என்ற செய்தி சாட்சி. காங்கிரஸ் ஆட்சியில் நஷ்டத்தில் ஓடிய பல அரசு நிறுவனங்கள் இப்போது லாப கணக்கை காண்பிக்கின்றன என்றால் நம் திறமையை நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்பது தானே பொருள். மோடி கூறியது போல நல்ல ஆட்சியை தமிழகம் இன்னும் பார்க்கவில்லை.

இக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்விக்கூடங்களில் யோகா, தியானம் செய்ய வேண்டியிருக்கும். கூடுதலாக சம்கிருதம் படிக்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல, அதை விட, தமிழகத்தில் பல போராட்டங்கள் வெடிக்கும் என்பது உண்மை. ஏனென்றால் பாஜக ஆட்சியை திராவிட கம்யூனிசங்களால் ஒரு நிமிடம் கூட பொறுத்துக்கொள்ள முடியாது. அவ்வளவு சகிப்பின்மை!

பாமகவிற்கு வாக்கு போடலாமா?
போடலாம். வன்னிய கட்சி ஜாதிகட்சி என்று முத்திரை குத்தப்பட்ட இக்கட்சி வேட்பாளர்களில் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்கள் அதிகம் என்று ஒரு கணக்கு சொல்கிறது. மதுவிலக்கை முதன்முதலில் அறிவித்து போராடிய கட்சி பாமக. அன்புமணி ராமதாஸ் அவர்களின் பேச்சும் சிறந்ததாகவே இருக்கிறது. நரம்பு புடைக்க பேசுவது தான் பேச்சு என்றல்ல. செயல்பாடு தான் முக்கியம். இக்கட்சியின் தேர்தல் அறிக்கை சிறந்தாக இருக்கிறது. இக்கட்சியின் அறிக்கையின் நகலாகத்தான் திமுக தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது என்பது பலரது கருத்து.

அதிமுக திமுக தவிர மற்ற எந்த கட்சி வந்தாலும் முதல் தடவை ஆட்சி என்பதால் ஊழல் குறைவாக இருக்கும் என்பதை நம்பலாம்.

தன்னிலை தற்காற்பு அறிக்கை: நான் இந்த கட்சிக்கு வாக்கு போடலாம் என்று கூறியிருப்பது அக்கட்சிக்கு கொடுக்கும் உத்தரவாதம் இல்லை. எந்த கட்சியும் வருங்காலத்தில் அராஜகத்தில் ஈடுபடாது என்று சொல்லமுடியாது. ஆட்கள் மாறும் போது காட்சியும் சிந்தனையும் மாறும். வருங்காலம் எப்போதும் வருங்காலமே. அதிகமான விமர்சனம் அதிமுக திமுக கட்சி மீது இருந்தது உண்மைதான். ஏனென்றால் தமிழகத்தில் இவ்விரு கட்சிகளின் ஆட்சிகளையும் தான் நாம் பார்த்திருக்கிறோம். தமிழகத்தின் தற்போதைய தேவை ஆட்சி மாற்றமே.

இனி தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் விரல்நுனியில். நன்றி.

இந்த கட்டுரையின் ஆயுள் may 16 வரை தான். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

திராவிடம் தமிழுக்கு தீரா விடம்!
வணக்கத்துடன்
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/node/63302

Post has attachment
Photo

கிருத்துவ வேட்பாளருக்கு வாக்களித்தால் தான் ஏசு ஆசீர்வதிப்பார் - இன்று காலை பக்கத்து சர்ச்சில் பதர் தேவ செய்தியில்...
#தேர்தல்2016

தங்கள் தலைவனை, மதத்தை விமர்சிப்பவர்களை திசைதிருப்ப ரஜினி அஜித் விசய் சண்டைகள் பெருமளவு பயன்படுகின்றன.

Post has attachment
பொதுவாகவே மேற்கத்திய ஊடகங்களில் வரும் இந்து சமயம் பற்றிய கட்டுரைகள் அரைகுறையாகவே அமைந்திருக்கும். ஆனால் இந்த பதிவு எளிமையாக தெளிவாக அமைந்திருக்கிறது.
http://channel.nationalgeographic.com/the-story-of-god-with-morgan-freeman/articles/exploring-the-limitless-gods-of-hinduism/
Exploring the Limitless Gods of Hinduism
Exploring the Limitless Gods of Hinduism
channel.nationalgeographic.com

திராவிடம் தமிழுக்கு
தீரா விடம்!

Post has shared content
Wait while more posts are being loaded