Profile cover photo
Profile photo
Vinavu Thalam
12,532 followers -
உழைக்கும் மக்களின் இணையக் குரல்
உழைக்கும் மக்களின் இணையக் குரல்

12,532 followers
About
Posts

மராட்டியம் : மாவோயிஸ்ட் தோழர்கள் 36 பேர் போலீசால் சுட்டுக் கொலை !

மராட்டிய மாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில் உள்ள போரியா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் போராளிகள் 16 பேரை கடந்த ஞாயிரன்று (22.04.2018) சுட்டுப் படுகொலை செய்துள்ளது அம்மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசு. கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்களை மீட்டு அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறுகின்றனர். தொடர்ந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலிசு தெரிவித்துள்ளது. மாவோயிஸ்ட் தோழர்களை சுட்டு கொன்ற போலீசாருக்கு, மாநில டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதில் எவ்வளவு பேர் மாவோயிஸ்டுகள், எவ்வளவு பேர் பழங்குடி மக்கள் என்பது யாருக்கும் தெரியாது. போலீஸ் சொல்லும் செய்தியைத்தான் ஊடகங்கள் அப்படியே வெளியிடுகின்றன.

(மேலும்)
Add a comment...

Post has attachment
தூத்துக்குடியில் யார் வாழ்வது ? ஸ்டெர்லைட்டா – மக்களா ?

“தூத்துக்குடியில் யார் வாழ்வது ? ஸ்டெர்லைட்டா…? மக்களா…?” என்ற முழக்கத்தை முன்வைத்து 23.04.2018 அன்று காலை மக்கள் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை “ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு” ஒருங்கிணைத்தது. மடத்தூர் பகுதியில் தொடங்கிய இப்பேரணியின் இறுதி நிகழ்வாக சிப்காட் அலுவலகத்திலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலும் அனைத்து கிராமக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 99442 46063,63800 10462,90035 53557.
Add a comment...

Post has attachment
இனிக்கும் கரும்பிற்குக் கசக்கும் விலை !

தமிழக பட்ஜெட்டில் கரும்புக் கொள்முதல் விலையை நிர்ணயிப்பது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நடைமுறை, குப்புறத் தள்ளிவிட்ட குதிரை குழியும் பறித்த பழமொழியை நினைவுபடுத்துகிறது.

கரும்பு உள்ளிட்டு விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்திருக்கும் பரிந்துரையின்படி தீர்மானிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிவரும் வேளையில் தமிழக அரசோ தனியார் சர்க்கரை ஆலை அதிபர்களின் நலன்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு ஏற்ப கரும்புக் கொள்முதல் விலையைத் தீர்மானிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, உ.பி., கர்நாடகா ஆகிய மாநிலங்களும் பரிந்துரை விலை நிர்ணயிப்பதைக் கைவிட்டு, விவசாயிகளை வஞ்சிக்கும் புதிய நடைமுறைக்கு மாறிவிட்டன.

(மேலும்)
Add a comment...

Post has attachment
அம்பேத்கர் விழாவிற்கு சென்ற தொழிலாளிகளை நீக்கிய ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனம் !

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு அருகில் உள்ள வெம்பாக்கம் பகுதியில், டி.வி.எஸ். குழுமத்தை சேர்ந்த ஆக்சில்ஸ் இந்தியா (Axles India) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டி.வி.எஸ். அய்யங்கார் குழுமத்தைப் போலவே, தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதும் அதன் உழைப்புச் சுரண்டலும் ‘பாரம்பரிய’மானது.

இந்நிறுவனம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலுள்ள நமண்டி பகுதியில் இருந்து கணிசமான அளவு தொழிலாளர்கள் இங்கு காண்ட்ராக்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவர்களது சொந்த ஊரான நமண்டியில் தொழிலாளிகள் இணைந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதற்காக விடுப்பு எடுத்துள்ளனர்.

ஊரில் நடைபெறும் ஒரு பொது நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் கலந்து கொள்வதைக்கூட சகித்துக்கொள்ள முடியாமல், “ எங்களுக்கு எதிராக சதித்திட்டம் போடுறீங்களா..’’ என அத்தொழிலாளர்களை அழைத்து மிரட்டியது நிர்வாகம். அதோடு மட்டுமில்லாமல், இதுகுறித்து விசாரிக்க ஹெச்.ஆர்.களைக் கொண்டு ஒரு ‘விசாரணைக் கமிசனே’ அமைத்துவிட்டது.

(மேலும்)
https://www.vinavu.com/2018/04/24/axles-india-ltd-cheyyar-illegal-action-against-contract-labours/
Add a comment...

Post has attachment
கானலால் நிறையும் காவிரி ! நூல் அறிமுகம்

காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொன்மையைப் பறைச்சாற்றும் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் காவிரி குறித்த பதிவுகள் தொடங்கி, காவிரி பிரச்சினையின் சுருக்கமான வரலாறு; காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு;

தமிழகத்தின் நிலத்தடி நீர் குறித்த நிலவரம்; நிலத்தடி நீர் குறித்த உச்சநீதிமன்றத்தின் தப்புக் கணக்கு; நம்பகமற்ற வடகிழக்கு பருவமழை; விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள்; எண்ணெய்வயல்களாக்கப்படும் நெல்வயல்கள் குறித்து என விரிந்த பார்வையில் அதே நேரம் மிகவும் சுருக்கமாகவும் இச்சிக்கலை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். உரிய நேரத்தில் அரிய முயற்சி.

நூல்: கானலால் நிறையும் காவிரி
உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை
ஆசிரியர்: முனைவர் ரவிக்குமார்.
பதிப்பகம்: மணற்கேணி பதிப்பகம்,

(மேலும்)
https://www.vinavu.com/2018/04/24/kanalal-niraiyum-kaveri-book-review/
Add a comment...

Post has attachment
கூடங்குளம் அணுமின் நிலையம் : அணுக்கழிவை கொட்டுவதற்கு இடமில்லையாம் !

பாதுகாப்புக் காரணங்களுக்காக கூடங்குளம் அணுமின் நிலையங்களை மூடுமாறு இந்திய அணுசக்தி நிறுவனத்திற்கு (NPCIL ) உத்தரவிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் குழு உச்சநீதி மன்றத்தை அணுகியிருக்கிறது. அணுக்கழிவை பாதுகாப்பாக சேமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு கூடுதலாக ஐந்து ஆண்டுகள் அவகாசம் கோரி 2018, பிப்ரவரி மாதம் இந்திய அணுசக்தி நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது. இதற்கெதிராகத்தான் பூவுலகின் நண்பர்கள் குழு இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறது.

அணுக்கழிவை சேமிப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு 2018, ஜூலை மாதம் வரை கால அவகாசத்தை 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்திருந்தது. ஆனால் இரசிய வகை அணுமின் நிலைய அணுக்கழிவுகளை நீண்ட நாள் சேமிப்பதற்கான (AFR facility) முன் அனுபவம் தங்களுக்கு இல்லை என்ற வெட்டிச்சாக்கை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்திய அணுமின் நிறுவனம் கண்டுபிடித்து முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

(மேலும்)
Add a comment...

Post has attachment
கண்டன தீர்மானம் விவாதிக்க மறுப்பு : தீபக் மிஸ்ராவைக் காப்பாற்றும் மோடி அரசு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்குவதற்கான கண்டன தீர்மானத்தை விவாதிப்பதற்கு ஏற்க முடியாது என நிராகரித்து விட்டார் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு.

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக வெளிப்படையாக பேட்டியளித்தனர். அதைத் தொடர்ந்து எதிர்கட்சிகளின் கண்டன தீர்மானம் விவாதத்திற்கு கூட எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என நிராகரிக்கப்பட்டுள்ளது.

இனி காங்கிரஸ் கட்சி என்ன செய்யபோகிறது என்பதற்கு கபில்சிபல் கூறியிருப்பது தான் உச்சகட்ட நகைச்சுவை. வெங்கையா நாயுடு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இவ்வழக்கும் தீபக் மிஸ்ராவிடம் விசாரணைக்கு வரும். தன் மீதான வழக்கை தானே விசாரிக்க மாட்டேன் என்று கூறும் மானஸ்தன் அல்ல தீபக் மிஸ்ரா. அவரே விசாரிப்பார் அதை தள்ளுபடி செய்வார். அடுத்து என்ன? மீண்டும் கண்டன தீர்மானம்…… மீண்டும் தீபக் மிஸ்ரா.

(மேலும்)

Add a comment...

Post has attachment
சென்னையில் கார்க்கியின் தாயை சந்திக்க வைத்த மேடை நாடகம் !

சென்னையில் 22.4.2018 ஞாயிறு அன்று கொல்கத்தாவைச் சேர்ந்த செளவிக் சன்ஸ்கிருதிக் சக்ரா மேடை நாடகக் குழு நடத்திய “தாய்” மேடை நாடகம் பார்வையாளர்களை கட்டிப் போட்டது. நாடகக் காட்சிகள் ஜாரிச ரசியாவை நம் கண் முன்னே நிறுத்தியது.1917 நவம்பர் புரட்சிக்கு முன் நடந்த போராட்ட காலத்தின் வலியை ரத்தமும் சதையுமாகக் காட்டியது. நாடகம் வங்க மொழியில் நடத்தப்பட்டாலும் மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. இரு முறை திரைக்கதை சுருக்கத்தை தமிழில் கூறினார்கள்.

கெளதம் முகர்ஜி வயது 73. செளவிக்சன்ஸ்கிருதிக் சக்ரா மேடை நாடகக் குழுவின் அமைப்பாளர். 1978-ம் ஆண்டிலிருந்து 2500 முறை இந்நாடகத்தை இந்தியா முழுக்க மேடையேற்றியிருக்கிறார். இவரே தாய் நாவலின் நீலோவ்னா தாயாக பெண் பாத்திரம் ஏற்று நடிக்கிறார். பாத்திரத்தைப் போலவே இன்றும் பாட்டாளி வர்க்க உணர்வோடு நம்மிடையே வாழ்கிறார்.

(மேலும்)
Add a comment...

Post has attachment
மத்திய ஆப்பிரிக்கா : இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது – பெனிசியா டொய்னா

மலாவி, சாட் மற்றும் நைஜர் போன்ற மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உயர் கல்வியில் நுழையும் மாணவர்கள் விகிதம் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவானதாகும். இதற்கு நேர்மாறாக, உலகளாவிய சராசரி 26% ஆகும்.

பல்கலைக்கழகங்களில் நுழையும் நற்பேறு கொண்ட சிறுபான்மை மத்திய ஆப்பிரிக்கர்களுக்கும் கூட நிலவும் இடையறாத போர் மற்றும் நெருக்கடியினாலும், ஆசிரியர் பற்றாக்குறையினாலும் வகுப்புகள் பெரும்பாலும் தள்ளிவைக்கப்படுகின்றன அல்லது ரத்து செய்யப்படுகின்றன.

(மேலும்)
Add a comment...

Post has attachment
ஆசிஃபா கொலை : அம்பலப்படுத்திய கேரள பெண் ஓவியர் மீது தாக்குதல் !

சிறுமி ஆசிஃபா-வை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்த கிரிமினலைப் பாதுகாக்கும் இந்துத்துவக் கும்பலை அம்பலப்படுத்தி படம் வரைந்த கேரள ஓவியர் துர்கா மாலதியின் வீட்டை நேற்று (22.04.2018) இரவு கல்வீசித் தாக்கியிருக்கிறது இந்துத்துவக் கும்பல்.

இந்துத்துவக் கும்பலின் இழிமுகத்தை அம்பலப்படுத்துவோருக்கு எதிராக, ஆபாசமாகப் பேசுவது, அவதூறு பேசுவது, மிரட்டுவது, தாக்குதல் தொடுப்பது, கொலை செய்வது என அனைத்து வழிமுறைகள் மூலமும் எதிர்ப்புக் குரல்களை முடக்கப் பார்க்கிறது இந்துத்துவக் கும்பல்.

(மேலும்)
Add a comment...
Wait while more posts are being loaded