Profile cover photo
Profile photo
Vel Tharma
84 followers
84 followers
About
Posts

Post has attachment
இஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது. இஸ்ரேலை எதிர்த்து நின்ற இந்தியா பல துறைகளிலும் அதனுடன் இணைந்து செயற்படுகின்றது. சவுதி அரேபியா உட்படப் பல அரபு நாடுகள் இஸ்ரேலுடன் இரகசியமாக ஒத்துழைக்கின்றன. இஸ்ரேலில் தன்னிலும் பார்க்க பல மடங்கு மக்கள் தொகையைக் கொண்ட அயல் நாடுகளுடன் பகையான நாடாக இருக்கின்றது. அவற்றில் நிலங்களை அபகரித்து வைத்திருக்கின்றது. அயல்நாடுகளிலும் பார்க்க இஸ்ரேலில் வித்தியாசமான கலாச்சாரம், வித்தியாசமான ஆட்சி முறை இருந்தும் இஸ்ரேல் தன் அயல்நாடுகளுக்கு அஞ்சாமல் இருக்கின்றது. உலக அரங்கில் இஸ்ரேல் ஒரு அசைக்க முடியாத நாடாக மாறிவருகின்றதா?
Add a comment...

Post has attachment
இஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா?
இஸ்ரேலின் விருப்பத்திற்கு
ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக்
காட்டாமல் அனுசரித்துப் போகின்றது. இஸ்ரேலை எதிர்த்து நின்ற இந்தியா பல
துறைகளிலும் அதனுடன் இணைந்து செயற்படுகின்றது. சவுதி அரேபியா உட்படப் பல அரபு
நாடுகள் இ...
Add a comment...

Post has attachment
பல வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் உலகம் இருப்பதை பல்துருவ உலகம் என்பர். 1815இல் இருந்து 1945-ம் ஆண்டு வரை உலகம் பல்துருவ ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் இருந்த வல்லரசு நாடுகளிடையேயான் நட்புறவை பொறுத்து ஆதிக்கச் சமநிலையும் மாறிக் கொண்டே இருந்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியா, இரசியா, பிரசியா, பிரான்ஸ், டென்மார்க்-ஹங்கேரி ஆகியவை உலக வல்லரசுகளாக இருந்தன. கிறிமியாவை துருக்கியிடமிருந்து மீளப் பெற எடுத்த முயற்ச்சி அப்போது இருந்த பல் துருவ உலகச் சமநிலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனி மற்ற வல்லரசு நாடுகளை ஆக்கிரமிக்க எடுத்த முயற்ச்சியால் உருவான இரண்டாம் உலகப் போர் பல் துருவ உலக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
Add a comment...

Post has attachment
மீண்டும் பல்துருவ ஆதிக்கம் உருவாகுமா?
பல வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ்
உலகம் இருப்பதை பல்துருவ உலகம் என்பர். 1815 இல் இருந்து 1945-ம் ஆண்டு வரை உலகம்
பல்துருவ ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் இருந்த வல்லரசு நாடுகளிடையேயான்
நட்புறவை பொறுத்து ஆதிக்கச் சமநிலையும் மாறிக் கொண்...
Add a comment...

Post has attachment
இஸ்ரேல் என ஒரு நாடு உலக வரைபடத்தில் இருக்கக் கூடாது என்பதில் இன்றுவரை உறுதியாக இருக்கும் இஸ்லாமிய நாடு ஈரானே. இஸ்ரேலுக்கு எதிராக காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பு, பலஸ்த்தீனிய இஸ்லாமிய ஜீஹாதி அமைப்பு மற்றும் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, சிரியாவில் இருந்து செயற்படும் பலஸ்தீனிய விடுதலைக்கான பிரபல முன்னணி போன்ற தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவிகளையும் படைக்கல உதவிகளையும் வழங்கி வருகின்றது. இதனால் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை பயங்கரவாதத்திற்கு உதவும் நாடு என அழைக்கின்றன.
Add a comment...

Post has attachment
ஒரு புறம் வட கொரிய மற்றும் தென் கொரியத் தலைவர்கள் கட்டிப்பிடித்து மகிழந்து கொண்டாடிக் கொண்டிருக்க மறுபுறம் அமெரிகாவின் B-52 போர் விமானங்கள் சீனக் கடற்கரையில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்தில் பரீட்ச்சார்த்தப் பறப்புக்களை மேற்கொண்டிருந்தன. கொதிநிலையில் இருந்த கொரியத் தீபகற்ப்பம் தணி நிலையை நோக்கி நகர்கையில் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடற்பிரதேசம் கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. 2013-ம் ஆண்டில் பதவிக்கு வந்ததில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனா மீளப் புதுப்புக்கப்படும் எனச் சொல்லி வருகின்றார். அதற்கான பொருளை 2018-ம் ஆண்டு சீனப் பாராளமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்து அறிந்து கொள்ளலாம். “பிளக்கப்பட்டதும் உடைக்கப்பட்டதுமான ஒரு நாடு முன்னேறவோ அபிவிருத்தியடையவோ முடியாது” என்பது அவரது உரையின் முக்கிய வாசகம். அவர் ஹொங்கொங்கை முழுமையாக சீனாவின் பொதுவுடமை முறைமைக்குள் கொண்டு வரவும் தைவானை சீனாவின் ஒரு மாகாணமாக்கவும் விரும்புகின்றார் என வியாக்கியானம் கொடுத்தது
Add a comment...

Post has attachment
கொரியாவிலும் தைவானிலும் சீனாவும் அமெரிக்காவும்
ஒரு புறம் வட கொரிய மற்றும்
தென் கொரியத் தலைவர்கள் கட்டிப்பிடித்து மகிழந்து கொண்டாடிக் கொண்டிருக்க மறுபுறம்
அமெரிகாவின் B -52 போர் விமானங்கள் சீனக்
கடற்கரையில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்தில் பரீட்ச்சார்த்தப் பறப்புக்களை
மேற்கொண்டிருந்தன. கொதிநிலையில் இரு...
Add a comment...

Post has attachment
இந்தியாவின் 29 மாநிலங்களில் லக்சத்வீப், மிசோரம், நாகலாந்து, மெகாலயா, ஜம்மு கஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், மனிபுரி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். பிஹார், சதிஸ்க்கர், டில்லி, ஹரியானா, இமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்த்தான், உத்தரப் பிரதேசம், உத்தரக்காண்ட் ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்தி மொழி பேசுபவர்கள் அதிகமாக வாழ்கின்றனர். இந்தியாவின் 1.324பில்லியன் மக்களில் 79.8 விழுக்காட்டினர் இந்துக்களாகும். அதேவேளை இந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 42 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே.
Add a comment...

Post has attachment
இணையவெளிப் போர் தொடர்பான சஞ்சிகையான C4ISRNET அமெரிக்கப் படையினர் தமது இணையவெளிப் போர் மற்றும் உளவு நடவடிக்கைகள் தொடர்பான வலுவை அதிகரித்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளது. இணையவெளிப் போர், உளவாடல், வேவுபார்த்தல், திருட்டு, பயங்கரவாத எதிர்ப்பு போன்றவற்றில் அமெரிக்கப் படையினர் அதிக கவனம் செலுத்தவிருக்கின்றனர். அமெரிக்காவின் எதிரிகள் தமது இணையவெளி நடவடிக்கைகள் தொடர்பான வலுவை அதிகரித்து வருகின்றனர் என்கின்றது C4ISRNET ஊடகம்.
Add a comment...

Post has attachment
சீனா அமெரிக்கா போல் உலகை சுரண்டும் ஒரு நாடாக உருவெடுக்காமல் அதன் உள்ளகப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. ஏற்றுமதில் பெரிதும் தங்கியிருக்கும் சீனப் பொருளாதாரம் 2008இன் பின்னர் உலகப் பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்டது. 2016இன் பின்னர் மேற்கு நாடுகளில் தீவிரம் பெற்ற தேசியவாதத்தால் பாதிப்புக்களைச் சந்திக்கப் போகின்றது. சீனா உலகச் சந்தையில் தனது பொருட்களை மலிவாக விற்பனை செய்வது பல முனைகளைல் சவால்களை எதிர் நோக்குகின்றது. அமெரிக்கா முதன்மையானது என்ற டிரம்பின் கொள்கை, இந்தியாவில் செய்யுங்கள் என்ற மோடியின் கொள்கை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கடன் பிரச்சனை போன்றவை சீனாவின் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும்
Add a comment...
Wait while more posts are being loaded