Profile cover photo
Profile photo
Thamizh Books
749 followers
749 followers
About
Posts

Post has attachment
ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப., எழுதிய 
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் 
நூல் வெளியீட்டு விழா

13-04-2016 மாலை 5 மணி
இடம். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், தரமணி


வரவேற்புரை - திரு. சுந்தர் கணேசன்

தலைமை மற்றும்புத்தக வெளியீடு : 
திரு. ஐராவதம் மகாதேவன், இ. ஆ. ப. (ஓய்வு)

முதல் பிரதிகளைப் பெறுபவர்கள்: 
திரு. நீ. கோபாலஸ்வாமி, இ. ஆ. ப. (ஓய்வு), 
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்,

திரு. த. உதயச்சந்திரன், இ. ஆ. ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசு

உரை : திராவிடச்சிவப்பு,
திரு. ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப., 
கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை, ஒடிஸா அரசு

சிறப்புரை
ச.தமிழ்ச்செல்வன்

நன்றியுரை 
திரு. நாகராஜன், 
பாரதி புத்தகாலயம்

அனைவரும் வருக
Photo
Photo
April 8, 2016
2 Photos - View album
Add a comment...

Post has attachment

Post has attachment
3வது திருப்பூர் புத்தகத் திருவிழா தொடங்கியது
திருப்பூர், ஜன.29 -
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 13வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று உற்சாகமாகத் தொடங்கியது.
திருப்பூர் மங்கலம்சாலை டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் இந்த புத்தகத் திருவிழாவை மாநகராட்சித் துணை மேயர் சு.குணசேகரன் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் தலைமை ஏற்றார். முதல் விற்பனையை துணை மேயர் சு.குணசேகரன் தொடங்கி வைக்க, எம்.கே.எம். குழுமத்தின் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியம் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். முத்தமிழ்ச்சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம், பொறிஞர் கே.சண்முகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரவேற்புக்குழுத் தலைவர் எம்பரர் வீ.பொன்னுசாமி உள்பட புத்தகக் கண்காட்சி நிர்வாகிகள், பார்வையாளர்கள், புத்தக ஆர்வலர்கள் பெருந்திரளானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
துவக்க நிகழ்ச்சியின் நிறைவாக திருப்பூர் கலைக்குழு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் பி.சௌந்தரபாண்டியன் நன்றி கூறினார்.
இந்த கண்காட்சியில் மொத்தம் 115 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 84 நிறுவனங்களின் சார்பில் பல்வேறு பிரிவுகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
வழக்கம் போல் இந்த ஆண்டும் புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக அறிவுக்கு விருந்து படைக்கும் மாலை நேர கருத்தரங்குகள், கலை இலக்கிய நிகழ்வுகளில் அறிஞர்கள் பங்கேற்கின்றனர். ஆயிரம் ரூபாய் அதற்கு மேலும் புத்தகம் வாங்குவோருக்கு நூல் ஆர்வலர் சான்றளிக்கப்படும். வெள்ளம் காரணமாக சென்னை புத்தக கண்காட்சி ஒத்திப் போனதால் அங்கு வெளியிட தயாரிக்கப்பட்ட புதிய புத்தகங்கள் திருப்பூரில் இடம் பெற்றுள்ளன. சாகித்ய அகாடமி பல புதிய தலைப்புகளை இங்கு விற்பனைக்கு முதல் முறையாகக் கொண்டு வந்திருக்கிறது. வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற பல எழுத்தாளர்களின் புத்தகங்களும், மறுபதிப்புக் கண்ட பிரபல புத்தகங்களும் ஏராளமாக இடம் பெற்றுள்ளன.
10 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் வாங்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவிகிதம் கழிவு வழங்கப்படும் என்று புத்தகக் கண்காட்சி வரவேற்புக்குழுவினர் தெரிவித்தனர்.
PhotoPhotoPhotoPhoto
January 29, 2016
4 Photos - View album
Add a comment...

Post has attachment
PhotoPhotoPhoto
January 20, 2016
3 Photos - View album
Add a comment...

Post has attachment
pongal chennai book fair  #chennaibookfair
PhotoPhotoPhotoPhotoPhoto
January 20, 2016
7 Photos - View album
Add a comment...

Post has attachment
pongal chennai book fair  #chennaibookfair
PhotoPhotoPhotoPhoto
January 20, 2016
4 Photos - View album
Add a comment...

Post has attachment
pongal chennai book fair #chennaibookfair
PhotoPhotoPhotoPhotoPhoto
January 20, 2016
6 Photos - View album
Add a comment...

Post has attachment
சென்னை பொங்கல் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஊர் கூடி ஓவியம் நிகழ்ச்சியில் ஒவியம் வரைகிறார் சி.பி.ரவிசங்கர்
PhotoPhotoPhotoPhotoPhoto
January 11, 2016
5 Photos - View album
Add a comment...

Post has shared content
ரா.கி.ரங்கராஜனை அவமானப்படுத்துகிறதா அல்லயன்ஸ் பதிப்பகம்?
------------
ரா.கி.ரங்கராஜன் எழுதிய அனைத்து நூல்களையும் பதிப்பிக்கும் உரிமையை அல்லயன்ஸ் பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாக அவரது எழுத்துக்களை நூலாக கொண்டு வரவும் செய்கிறார்கள். அந்த வகையில் ‘தாரகை‘ நாவலை இப்போது இரண்டாம் பதிப்பாக 2015ல் கொண்டு வந்திருக்கிறார்கள். இது ரா.கி.ரங்கராஜன் சொந்தமாக எழுதியது அல்ல. சிட்னி ஷெல்டன் எழுதிய IF TOMORROW COMES நாவலின் தமிழ் வடிவம். ‘குமுதம்‘ வார இதழில் மூலம்: சிட்னி ஷெல்டன் தமிழில் ரா.கி.ரங்கராஜன் என்று பிரசுரித்துதான் ‘தாரகை‘யை தொடராக வெளியிட்டார்கள். வானதி பதிப்பகம் அந்த தொடரை நூலாக கொண்டு வந்தபோது (முதல் பதிப்பு) அட்டையிலும் உள்பக்கத்திலும் மூலம்: சிட்னி ஷெல்டன் தமிழில்: ரா.கி.ரங்கராஜன் என்றே குறிப்பிட்டது. ஆனால், அல்லயன்ஸ் இப்போது அட்டையிலும் சரி, உள்பக்கத்திலும் சரி... சின்னதாகக் கூட சிட்னி ஷெல்டன் பெயரை அச்சிடவில்லை. கொட்டை எழுத்தில் ரா.கி.ரங்கராஜன் பெயரை மட்டுமே பிரசுரித்திருக்கிறது. அதாவது ‘தாரகை‘ நாவலை ரா.கி.ரங்கராஜன் எழுதியது போன்ற தோற்றத்தை அந்தப் பதிப்பகம் கட்டமைக்கிறது. உள்ளே என்னுரை, முன்னுரை, பதிப்புரை என்று எதுவும் இல்லை. நேரடியாக நாவல் முதல் அத்தியாயத்துடன் ஆரம்பமாகிறது. இந்த நாவல் நிச்சயம் அரசு லைப்ரரியில் இடம்பெறும். அதை எடுத்துப் படிக்கும் புதிய வாசகன் என்ன நினைப்பான்? ஒருவேளை சிட்னி ஷெல்டனின் நாவலையும் படித்தவனாக அவன் இருந்தால்... ரா.கி.ர., அப்பட்டமாக காப்பி அடித்திருக்கிறார் என்றல்லவா எண்ணுவான்?
ரா.கி.ரங்கராஜன் இப்போது உயிருடன் இல்லை. அவரது எழுத்துக்களை உயிர் போல் நேசித்த திருமதி ரா.கி.ர.,வும் மறைந்துவிட்டார். இருவரில் ஒருவர் இருந்திருந்தாலும் இதற்கு அனுமதி அளித்திருக்க மாட்டார்கள்.... 
Photo
Add a comment...

Post has attachment
ஓர் அறைகூவல்
அன்பார்ந்த வாசகர்களுக்கு,  வணக்கம்
பாரதி புத்தகாலயம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து திருப்பூர், திண்டுக்கல், ஓசூர், உடுமலைப்பேட்டை, மேட்டுப்பாயைம், செங்கம், ,இராமநாதபுரம், உள்ளிட்டு பல இடங்களில் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள். மேலும் புத்தாண்டு, உலகப் புத்தக தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், காந்தி பிறந்த நாள், பகத்சிங் பிறந்த நாள், தேசிய அறிவியல் தினம் உள்ளிட்ட பல நாட்களில் நூற்றுக்கணக்கான புத்தக காட்சிகளை நடத்தி வருவதையும் தாங்கள் அறிவீர்கள். தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான வாசிப்பு முகாம்களையும், புத்தக அறிமுகக் கூட்டங்க்ளையும் நடத்தி வருகிறோம். இருப்பினும் ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகளை விற்பதுவே குதிரைக் கொம்பாக உள்ளது. .ஏன் இந்த நிலமை சோமாலியா போன்ற மிகவும் பின் தங்கிய ஆப்பிரிக்க நாடு கூட ஒரு புத்தகத்தை லட்சம் பிரதிகள் விற்பனை செய்யும் நிலையில் நம் நிலமை மிகவும் கவலைக்கிடமே. 

தமிழகத்தில் நாம் பல கலைஇரவுகளை நடந்தினோம். இன்று இந்த வடிவத்தை உள்வாங்கி பொதுமக்களை ஈர்க்கும் வண்ணம் பல புத்தக இரவுகளை நாம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தமிழகத்தின் பண்பாட்டு வடிவமாக இந்த புத்தகக் கண்காட்சிகளை நாம் உள்வாங்க வேண்டும். இந்நிலையில் இந்த பொங்கல் சென்னை புத்தகத் திருவிழாவை  நாம் வெற்றிபெறச் செய்து இதை தமிழகம் முழுவதும் கொண்டுசெல்ல ஒரு அறைகூவலை உங்கள் முன் வவைக்கிறேன்....
இனி உங்கள் கையில்..............

க,நாகராஜன்
ஒருங்கிணைப்பாளர்
சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா
94449 60935
PhotoPhotoPhotoPhotoPhoto
January 10, 2016
8 Photos - View album
Add a comment...
Wait while more posts are being loaded