Profile cover photo
Profile photo
TNGEA Chepauk
23 followers
23 followers
About
TNGEA's posts

Post has attachment

சேப்பாக்கத்தில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தை SBI வங்கியிலிருந்து எடுக்க முடியாமல் அவதியுற்று வந்த நிலையில், கடந்த 16.12.2016 அன்று SBI வங்கியின் மேலாளரை த.நா.அ.உ.ச. சார்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் திங்கள் கிழமை முதல் (19.12.2016) முதல் மதியம் 2 மணி முதல் 3.30 வரை அரசு ஊழியர்கள் மட்டுமே வங்கியில் பரிவர்த்தனை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ரூ.2,00,000 வரை ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.
தினமும் 75 முதல் 100 ஊழியர்களுக்கு இங்ஙனம் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு நல்கும் சேப்பாக்கம் வங்கி மேலாளருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்

Post has attachment
திருவண்ணாமலையில் 12ஆம் மாநில மாநாடு
அரசு ஊழியர்களே அலைகடலென அணி திரள்வீர் 
Photo
Photo
12/23/16
2 Photos - View album

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
12/1/16
15 Photos - View album

Post has attachment
South Chennai District Conference - Delegates Session
26.11.2016 at Mylapore
PhotoPhotoPhotoPhotoPhoto
12/1/16
9 Photos - View album

Post has attachment
PhotoPhotoPhoto
12/1/16
3 Photos - View album

23.11.2016 அன்று நடைபெற்ற சேப்பாக்கம் பகுதிக்குழு மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இன்று (30.11.2016) வருவாய் நிருவாக ஆணையரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. சேப்பாக்கம் வளாக சுகாதார சீர்கேடுகளை களயக்ககோரியும் ; சம்பள கணக்கு (கிழக்கு)அலுவலகத்திற்கு சேப்பாக்கம் வளாகத்தில் அலுவலகம் வழங்க கோரியும் சேப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் முன்பு போல் நின்று செல்ல ஆவன செய்யக்கோரியும் மனுக்கள் அளிக்கப்பட்டன .
வளாக சுகாதார கேடுகள் குறித்து ஆய்வு செய்ய உடனடியாக வருவாய் நிருவாக ஆணையர் உத்தரவிட்டார். அதனடிப்படையில், உதவி ஆணையர் மற்றும் சங்கத்தலைவர்கள் இணைந்த குழு வளாகம் முழுமையும் ஆய்வுசெய்தது. குப்பைகள், மற்றும் கழிவு நீர் தேங்கும் இடங்கள் குறிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைக்கு ஆணை இடப்பட்டுள்ளது

விரைந்து நடவடிக்கை எடுத்த வருவாய் நிர்வாக ஆணையருக்கு நன்றி. இதர கோரிக்கைகள் குறித்தும் விரைந்த நடவடிக்கை இருக்கும் என நம்புகிறோம்.

இன்றைய சந்திப்பில் பகுதிகுழு தலைவர் ரகுராமன், துணை தலைவர்கள் உதயகுமார் மற்றும் சுந்தர் , இணைச்செயலார் சுபிச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர் . மாவட்ட பொருளாளர் தோழர் புகழேந்தி உடனிருந்து வழிகாட்டினார் . 

Post has attachment
சென்னை, நவ. 28-

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 11வது பொது மாநாடும், பேரணியும் சென்னை சேப்பாக் கத்தில் தலைவர் என்.ராமசாமி தலைமையில் திங்கட்கிழமை (நவ. 28) நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ப.புகழேந்தி வரவேற்றார். முன்னதாக பேரணியை முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.வெற்றிராஜன் துவக்கி வைத்தார்.மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை தலைவர் சா.டேனியல் ஜெயசிங் விளக்கிப் பேசினார்.

சிஐடியு தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ். அப்புனு, அகில இந்திய கணக்கு தணிக்கைத் துறை ஊழியர் சங்க பொருளாளர் கி.ரமேஷ், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் மு. அன்பரசு வாழ்த்துரை வழங்கினார்.மாநாட்டை நிறைவு செய்து மாநில துணைத் தலைவர் கே.எம். தியாகராஜன் பேசுகையில், மத்திய அரசு ரூபாய் நோட்டுக் களை செல்லாது என அறிவித்துள்ளது அரசு ஊழியர்களை மட்டுமல்லாது மாதச் சம்பளம் வாங்கக் கூடியவர்கள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், சில்லரை வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.மத்திய, மாநில அரசு ஊழியர் களுக்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நவம்பர், டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக கையில் வழங்க வேண்டும். நிலைமை சீரடையும் வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை அனுமதிக்க வேண்டும் என்றார்.வேலை நிறுத்த உரிமையையும், தொழிலாளர்களின் உரிமையையும் மத்திய அரசு பறிக்க முயற்சிக்கிறது.

படிப்படியாக அரசு துறைகளை தனியார்மயமாக்க மத்திய பாஜக அரசு முயல்கிறது. தொழிலாளர் களை, ஊழியர்களை பாதிக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் வரை, பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து நீடிக்க பொது மக்களையும் இணைத்து ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.இறுதியில் மாவட்ட துணைத் தலைவர் இரா.ந.நம்பிராஜன் நன்றி கூறினார். முன்னதாக மறைந்த புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்டச் செயலாளர் மு.வெங்கடேசன், நிர்வாகிகள் கி.ரகுராமன், சுமதி, சுதா, கோவிந்த ராஜன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Photo

Post has attachment

Post has attachment
Photo
Wait while more posts are being loaded