Profile

Cover photo
Siva siddarthan Arunachalam
Worked at Labour Department, Tamilnadu Gov
Attended V.H.N.S.N. College, Virudhunagar,
Lives in Tirumangalam, Tamil Nadu, India
29 followers|145,110 views
AboutPostsPhotosYouTubeReviews

Stream

 
நல்லதே நடக்கும் நாம் நல்லவனாக இருந்தால் !

"என்ன அண்ணே ? கொஞ்ச நாளா டீ கடைப்பக்கமே உங்கள காணோமே ? என்ன ஆச்சி உங்களுக்கு ? "

" அட! உடம்புக்கு எல்லாம் ஒண்ணுமில்லேப்பா !! எங்கேயும் போகலே தம்பிகளா., அதனாலே டீ கடைப்பக்கமும் வரல்ல !!!"

"அப்புறம் என்ன அண்ணே ? உங்கள மாதிரி பொழுது போகாத வயசான ஆளுகளுக்காக சில டூரிஸ்ட் கம்பெனிக வட இந்தியா , காசி பத்திரிநாத் அப்புறம் ஏதோ ஒரு நாத் போன்ற ஊர்களுக்கு டூர் அரேன்ஜ் பண்ணி பல கோவில்களுக்கும் கூட்டியிட்டு போறாங்களாமே ? வயசான காலத்துல நீங்களும் நெறைய கோவில்களுக்குப்போயி எல்லா சாமிகளையும் கும்பிட்டு புண்ணியம் தேடுங்களேன் அண்ணே ? "

"அட! நீங்க வேற ! சேர்த்த புண்ணியம் எல்லாம் போதாதா தம்பிகளா ? "

" என்ன அண்ணே ? இப்படி சொல்றீங்க? -------எங்ககளுக்குதெரிஞ்சி நீங்க எந்த ஊரு கோவிலுக்கும் போனதில்லை! எந்த சாமியையும் கும்பிட்டு "இந்தாங்க தம்பிகளா பிரசாதம்" ன்னு அட திருப்பதி லட்டு கூட வேண்டாம்-------- ஏதாவது ஒரு கோவில் தின்னீறுன்னு கொஞ்சமாவது நீங்க என்னைக்காவது எங்களுக்கு கொடுத்திருக்கீங்களா அண்ணே ! அப்புறம் எப்படி அண்ணே நீங்க புண்ணியத்தை தேட முடியும் ? "

"அட! மக்குத்தம்பிகளா!! கோவிலுக்குப்போயி சாமி கும்பிட்டாத்தான் புண்ணியம் நமக்கு கிடைக்குமுன்னு உங்களுக்கு யார் சொன்னது ?

"அட! என்ன அண்ணே ! இப்படி சொல்றீங்க? நாங்க என்ன பேப்பர் படிக்காதவங்களா? அப்புறம் வாட்டஸ்அப் குழுக்களிலும் நாங்க மெம்பரா இருக்கோம்மில்ல? அவற்றில் எல்லாம் இந்த கோயிலுகளுக்கு இன்னயின்ன நாட்களில் போனா என்னென்ன மாதிரியான பலன்கள் -------அதானண்ணே புண்ணியம் !******** நமக்கு கிடைக்குமின்னு விளக்கமா போட்டியிருக்காங்களே ? நீங்க வாட்டஸ் அப் குரூப் எதிலும் மெம்பரா இல்லாதனால உங்களுக்கு அதெல்லாம் தெரியல போல ? "

< சரி. அப்படியே இருக்கட்டும் மக்குகளா ! மக்குகளா!!------------கெட்ட விஷயங்கள் எதையும் நினைக்காம செய்யாம இருந்து நல்லவங்க மதிக்கிற காரியங்களை முடிந்தவரை தினசரி நாம செய்துட்டு வந்தாலே போதும் ., விரதம் இருந்து கோவிலுக்கு போய் சாமி கும்பிடற புண்ணியம் நமக்கு தானாகவே கிடைக்கும்ன்னு எனக்குத்தெரிந்த பெரியவங்க சொல்லக்கேட்டு இருக்கிறேன் தம்பிகளா! "

"-அதெல்லாம் சரி அண்ணே? வழக்கம் போல உதாரணத்துடன் சொல்லுங்க அண்ணே ! அப்பத்தான எங்களுக்கும் புரியும் ? "

"ம்ம்ம் ! இப்ப சொல்றீங்களே அதான் சரி !! அப்படியே நல்லா உட்காந்துக்கோங்க !!!-----------ம்ம்க்கும் ------- ஆரம்பிக்கட்டுமா ?----------------------நமது தாய் மொழியான தமிழ் மொழியில் " அ " என்ற எழுத்து எப்படி முதலிடத்தையும் முக்கியத்துவத்தையும் பெற்று இருக்கின்றதோ அதே போல நான் வேலை பார்த்த துறையில் நான் பணி புரிந்த ஊர்களில் அருப்புக்கோட்டையும் எனது வாழ்வில் முக்கியத்துவம் பெற்ற ஊராகும். .

எனக்கு சுவையான பல அனுபவங்களைத் தந்த ஊர் அதுவாகும் .ஊர் என்றால் அதுதான் ஊர். அந்த ஊர் மக்கள் மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்கள். அதிலும் அரசு ஊழியர் என்றால் அதிகமாக மரியாதை கொடுப்பார்கள்..அந்த ஊரை விட்டு நாம் மாறுதலாகி செ ன்றாலும் ஓய்வு பெற்று விட்டாலும் கூட அவர்களது மனதில் நம் மீது உள்ள மதிப்பும் மரியாதையும் என்றும் எள்ளளவும் அவர்களுக்கு குறையாது.

.அப்படிப்பட்ட ஊருக்கு தொழிலாளர் உதவி ஆய்வாளராக மாறுதலாகி வந்த நான் கொஞ்ச நாள் சந்தோஷமாகவே பணி புரிந்து வந்தேன். இறைவன் தான் என்றும் எப்போதும் எல்லோரையும் ஒரே மாதிரியான சூழ்நிலையிலேயே இருக்க விட மாட்டானே? -------------இரவு பகல், இன்பம் துன்பம் லாபம், நஷ்டம் பள்ளம்,மேடு இளமை, முதுமை நான்கு பருவங்கள் ,என அனைத்தையும் மாறி மாறி நமக்கு கொடுப்பவன் ஆயிற்றே ? இளமைக்கால குறுகுறுப்பு மாதிரி சந்தோஷமாக ஓடிக்கொண்டு இருந்த என் அருப்புக்கோட்டை அரசுப்பணியில் ஒரு வெயில் கால நாள் போல சூடான நாள் ஒன்றும் வந்து சேர்ந்தது.

இந்த நேரத்தில் உதவி ஆய்வாளராக பணி புரிந்த எனது எண்ண ஓட்டங்களை உங்களுக்கு தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்

மனிதனாகப்பிறந்த எல்லோரும் நன்மை, தீமை என இரு குணங்களை உடையவன்தான். தன வாழ்நாள் மூழுவதும் நன்மைகளையே செய்த மனிதன் என்று யாரும் இல்லை

அதே போல தீமையையே வாழ்நாள் முழுமையும் செய்த மனிதன் என்று எவரும் உலகில் இல்லை

.பூமியில் மனிதனாக பிறந்த எல்லோரும் நல்ல குணம் கேட்ட குணம் என இரு குணங்களையும் கொண்டவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் ., இருக்கிறார்கள்."

"அண்ணே ? நீங்க இப்ப சொன்ன நல்லது, கெட்டது .கருத்துக்களை மஹாபாரதத்தில் சொல்லி இருக்கிறது என்று ஏற்கனவே நீங்கள் எங்களிடம் சொல்லியிருக்கிறீர்கள். வயசாகிப்போனாலே பேசினதையே திரும்ப திரும்ப பேசுவாங்க இன்னு கேள்விப்பட்டது உண்மைதான் போல "


"அதனால் என்ன? நல்ல கருத்தை திரும்ப திரும்ப எத்தனை தடவை கேட்டாலும் தப்பு ஒண்ணும் வந்து விடாது.------சரி! இப்ப விஷயத்திற்கு வர்றேன்.---------- சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் மறதியினால் அல்லது அறியாமையினால் ஓரு வியாபாரி தனது எடை அளவுகளுக்கு முத்திரையிட தவறுவாரே ஒழிய தெரிந்தே முத்திரையிடாமல் வியாபாரம் செய்ய விரும்ப மாட்டார் என்பது எனது கருத்து.
.
எனவே அறியாமலோ, தெரியாமலோ அல்லது மறதியாலோ ஒரு வியாபாரி மறு முத்திரை இடாமல் வியாபாரம் செய்கிறார் அல்லது துறை சம்பந்தப்பட்ட பதிவேடுகளை பராமரிக்காமல் இருக்கிறார் என்பதை ஆய்வின்போது நான் அறிய நேர்ந்தால் அவர் தனது தவறை திருத்திக்கொள்ள அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கலாம் என்பதை எனது எண்ணம்.

அப்படி திருந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்ற வியாபாரிகள் என் மீது அதிகப்படியான மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதை அவர்களது மரியாதையான நடத்தையின் மூலம் கண்கூடாகவே கண்டு இருக்கிறேன். உணர்ந்து இருக்கிறேன். அனுபவித்தும் இருக்கிறேன். அப்படிப்பட்ட வியாபாரிகள் நான் ஆய்வின்போது சுட்டிக்காட்டிய முரண்பாடுகளை அதற்க்குப்பின் எந்நாளிலும் திரும்ப செய்வதில்லை.-------- அவர்கள் என் மீது வைத்த அவர்களின் உண்மையான அபிமானம் கூட ஒரு புண்ணியமாக மாறி பின் கவசமாக உருவெடுத்து என்னை பல சந்தர்ப்பங்களில் காப்பாற்றி இருக்கிறது எனக்கு சங்கடங்களாக தோன்றி என் முன் சவால்களாக உருவெடுக்கும் பிரச்சினைகளுக்கு முன் என்னையும் அறியாமல் முன்பே நான் செய்த நல்ல காரியங்கள் எல்லாம் சமய சஞ்சீவிகளாக உருவெடுத்து பிரச்சினைகளை சமாளிக்க எனக்கு பெரும் உதவி செய்து இருக்கின்றன.

'அப்புறம் எப்படி அண்ணே துறை தலைமை அலுவலர்கள் நிர்ணயிக்கும் குறியீடுகளை சமாளிப்பீர்கள் ?"

" குறியீடுகளை நிர்ணயிக்கும் அலுவலர்களும் மனிதர்கள்தானே தம்பிகளா ? அவர்களுக்குத்தெரியாதா? ஒரு அலுவலரால் ஒரு நாளில் , ஒரு மாதத்தில் எந்த அளவிற்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள முடியும் என்று அவர்களுக்குத்தான் நன்றாகவே தெரியுமே?"

இனி நான் சொல்லப்போகும் நிகழ்வுகள் எனக்கு எப்படி ஆபத்தான சமயத்தில் கை கொடுத்தன என்பதை புரிந்து கொள்வீர்கள்.

அலுவலக உதவியாளர் நியமிக்கப்படாமல் இருந்த காலம் அது. உள்ளூர் ஆய்வுப்பணி என்றாலும் வெளியூர் அல்லது கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டாலும் எனது T.V.S. 50 ல் சென்று ஆய்வுசெய்வதே எனது வழக்கமாகும்.உள்ளூரில் பஜார் பகுதியில் ஆய்வு மேற்கொண்டால் அலுவலகத்திலிருந்து T.V.S. 50 ல் சென்று வண்டியை அங்குள்ள நாடார்களுக்கு சொந்தமான பேட்டையில் நிறுத்துவது எனது வழக்கம்

.[ இந்த இடத்தில் நாடார்கள் பேட்டை என்ன என்று தெரியாத உங்களுக்காக ஒரு சிறு விளக்கம்:
முன்பெல்லாம் அதாவது சுமார் நூறு அல்லது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு என்று வைத்துக்கொள்ளுங்களேன் அப்போதெல்லாம் கிராமங்களே அதிகமாக இருந்தன. அவற்றில் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் வாழ்ந்தனர்.எனவே நிரந்தரமான கடைகள் என்று எந்த கிராமத்திலும் இராது. எனவே மக்களுக்குத்தேவையான மளிகை மற்றும் இதர பொருட்கள் எல்லாம் வாரத்திற்கு ஒருமுறை ஊர் பொது இடத்தில் வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள்.

அந்த இடத்திற்கு சந்தை என்று பெயர். அந்த சந்தை வாரத்திற்கு ஒரு முறைதான் ஒரு ஊரில் கூடும். அந்த சந்தை வியாபாரிகளில் பெரும்பாலோனோர் நாடார் ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் .அவர்கள் ஒரே ஊரில் தொடர்ந்து இருக்க மாட்டார்கள்.அப்படி அவர்களால் தொடர்ந்து இருக்கவும் முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு ஊரிலும் வாரத்திற்கு ஒரு நாள்தான் சந்தை என்பதால் தினசரி இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள்
.
அப்படி இடம் மாறிக்கொண்டு இருக்க வேண்டியிருந்ததாலும் தினசரி பொருட்களையும் இடம் மாற்ற முடியாத சூழ்நிலை இருந்தது
.
அதனால் அந்தந்த ஊர்களில் வியாபாரம் செய்யும் நாடார் ஜாதியைச்சேர்ந்த வியாபாரிகள் ஓன்று சேர்ந்து சொந்தமாக இடம் வாங்கி பாதுகாப்பிற்காக அந்த இடத்தைச்சுற்றி வேலி அமைத்து ஆட்களையும் நியமித்து .தங்களது பொருட்களை அடுத்த சந்தை நாள் வரை பாதுகாத்து வந்தார்கள்.அந்த இடத்திற்குத்தான் மற்றவர்கள் நாடார் பேட்டை என்று சுருக்கமாக அடையாளம் காட்ட பின்னாளில் அந்த பெயரே நிலைத்து நின்று விட்டது.

காலப்போக்கில் வியாபாரம் நன்றாக நடக்கும் ஊர்களிலேயே நிரந்தர கடைகள் அமைத்து தங்களது பேட்டை இடத்தை கிட்டங்கிகளாக மாற்றிக்கொண்டார்கள்.பின் வந்த நாட்களில் தங்கள் தங்கள் கடைக்கு பக்கத்திலேயே கிட்டங்கிகள் அமைத்துக் கொண்டார்கள் எனவே பேட்டை இடங்களை காலியாக விட விரும்பாத நிர்வாகிகள் அவற்றை வாடகைக்கு விட்டார்கள்.--------------------பெயர் மட்டும் நாடார் பேட்டை என்று அப்படியே நிலைத்து நின்று விட்டது."

"அப்பாடா! ----------------------------அண்ணே இனிமே மெயின் கதைக்கி வந்துருவாருடா ! "]

ஸ்ஸ்ஸ்ஸ்-----------------------குறுக்கே பேசாதீங்கப்பா! ------------ப ஜாரில் நான் ஆய்வு செய்ய செல்லும் போது பஜாருக்கு மிக அருகில் இருக்கும் அருப்புக்கோட்டை நாடார் பேட்டையில் எனது வண்டியை பாதுகாப்பிற்க்காக நிறுத்தி விட்டு ஆய்விற்க்குப்பின் திரும்பவும் எடுத்துக்கொண்டு அலுவலகம் திரும்புவது எனது வழக்கம்.அவ்வாறு நிறுத்தும்போது அங்கே வாடகைக்கு இடம் பிடித்திருந்த ஒரே ஒரு கருவாட்டுக்காரரிடம் எனது வண்டியை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி விட்டு வருவதும் எனது பழக்கம். அவரும் ஒரு ஆபீசர் தன்னிடம் உதவி கேட்கிறாரே என நினைத்து சந்தோஷப்பட்டு "சரி " என்பதற்கு அடையாளமாக மிக வேகமாக தன தலையை ஆட்டுவார். பக்கத்திலேயே சிவன் கோவிலும் நமது துறைக்கு உதவியாக உள்ள ஒரு பெயர் பெற்ற உணவு நிறுவனமும் இருக்கின்றன.

சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல எனது வண்டியை பேட்டையில் விட்டுவிட்டு கருவாட்டு கடைக்காரிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.உணவு நிறுவனத்திற்கு அருகிலே ஒரு தள்ளு வண்டி ஓன்று நின்று கொண்டு இருந்தது. அதில் பழ வகைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

உரிமையாளர் மட்டும் அங்கு இல்லை. அவர் அங்கு இல்லாவிட்டால் என்ன ? நாம் அவரையா ஆய்வு செய்யப்போகிறோம்? அவர் பழங்களை நிறுக்க உபயோகிக்கும் தராசு, படிக்கற்கள் அதை விட முக்கியமாக தராசு,படிகள் பழங்களின் அருகே கிடந்தன.அந்த வண்டியின் அருகே அந்த கடை உரிய காலத்தில் முத்திரை இடப்பட்டு உள்ளனவா என்று பார்ப்பது தானே நமது கடமை என்று எனது கடமை உணர்வு என்னை உந்தித்தள்ள அவற்றை பரிசோதித்தேன்.

நீங்கள் நினைத்ததைப்போல அவற்றில் உரிய முத்திரை இல்லை. "சரி, பெயருக்கு ஒரு எடைக்கல்லை மட்டும் நாம் வந்ததற்கு அடையாளமாக எடுத்துச்செல்லுவோம்.அவர் வந்த உடன் ஆபீசிற்கு வரச்சொல்லி அவரிடம் எடுத்து வந்த படிக்கல்லை அவரிடமே திருப்பிக்கொடுத்து " முத்திரை இடாமல் வியாபாரம் செய்வது சட்டப்படி தவறு "என நேரில் விளக்கமாக எடுத்துக்கூறி உடன் முத்திரையிட ஆவன செய்யுமாறு அவரிடம் சொல்லுவோம் என நினைத்து அதன்படி செய்தேன்"

"டேய் !------------------ அண்ணே இனிமேதான் வசமா மாட்டிக்கிட போறார் ன்னு நினைக்கிறேன் டேய் ! "
.
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ---------குறுக்ககுறுக்க பேசக்கூடாதுன்னுசொல்லியிருக்கேன் -------------------------பக்கத்தில் இருந்த கடைக்காரரிடம் "தள்ளுவண்டிக்காரர் வந்த உடன் இந்த மாதிரி தராசு படிக்கல் எல்லாம் முத்திரை இல்லாமல் இருந்ததால் லேபர் இன்ஸ்பெக்டர் பெயருக்கு ஒரு படிக்கல்லை மட்டும் எடுத்துட்டு போயிருக்கிறார் என்றும் .அவரிடம் உள்ள மத்த தராசு படிக்கற்க ளையும் நாளைக்கி ஆபீசுக்கு கொண்டு போய் இன்று நான் எடுத்த படிக்கல்லையும் என்னிடமிருந்து வாங்கி நாளைக்கே முத்திரையிட்டுக்கொள்ளலாம் என்று சொல்லுங்கள்" என்று சொன்னேன். ஆனால் அவர் என்னை ரெம்ப பரிதாபமாக பார்த்தார். அதன் அர்த்தம் அப்போது எனக்குப் புரியவில்லை. ஆய்வு முடித்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து பேட்டைக்குச்சென்று வண்டியை எடுத்தேன்.

அப்போது அந்த கருவாட்டுக்கடைக்காரர் என்னிடம் "உங்களுக்கும் அந்த கொலைகார பாவிக்கும் என்ன சார் சம்பந்தம்? "என்று கேட்டார்." யாரைச்சொல்லுகிறீர்கள் ?"என்று அவரிடம் திரும்ப கேட்க அவர் "அவன்தான் சார்! ஹோட்டல் வாசலிலே தள்ளு வண்டி வச்சி வியாபாரம் செய்யறானே அவனைத்தான் சொல்றேன் "என்று சொன்னார். அதற்கு நான் " நான் அந்த ஆளை பார்த்தது கூட இல்லை.. தள்ளு வண்டியில் இருந்த எல்லா தராசு படிக்கல்லும் முத்திரை இல்லாம இருந்திச்சி ! நான் பேருக்கு ஒரு கல்லை மட்டும் எடுத்திட்டு அவரை ஆபீசுக்கு வரச்சொல்லுமாறு சொல்லிவிட்டு வந்தேன் அப்படி எடுத்திட்டு வந்தால்தான் முத்திரையிட நாளைக்கி கண்டிப்பாக ஆபீசுக்கு வருவாங்க என்பதால் ஒரு எடைக்கல்லை மட்டும் எடுத்திட்டு வந்தேன் "என்று பதிலளித்தேன்.

"போங்க சார்! போங்க ! அவன் யார் என்று தெரியாமல் படிக்கல்லை எடுத்திட்டு வந்துட்டீங்க? கொஞ்ச காலத்துக்கு முன் அவன் இந்த பேட்டையில் இரவில் தூங்கிக்கொண்டு இருந்த 2 வெளியூர் வியாபாரிகளை கொன்று அவர்கள் மடியில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து விட்டான். போலீஸ் இவனை கைது செய்து வழக்கு எல்லாம் போட்டது. ஆனால் குற்றத்தை நிரூபிக்க சரியான சாட்சி இல்லை என்று கோர்ட் விடுதலை செய்து விட்டது. இப்ப கொஞ்ச நாளாகத்தான் ஒழுங்காக எண்ணத்தையோ வியாபாரம் செஞ்சி கிட்டு வாரான்.நீங்க வண்டியை விட்டுட்டு போன கொஞ்சநேரத்தில் இங்கு வந்தான்.அவனிடம் யாரோ சொல்லியிருக்காங்க! இந்தமாதிரி நீங்க உங்க வண்டிய இங்கதான் நிப்பாட்டி இருப்பீங்க ன்னு ! என்னிடம் வந்து உங்க வண்டி எது என்று கேட்டான். நான் எதுக்கு அதை கேட்குறே என்று கேட்டேன். ----. அதற்கு அவன் " அவர் இந்த மாதிரி என் படிக்கல்லை எடுத்துச்சென்று விட்டார்.என் குணம் தெரியாம நடந்துக்கிட்ட அவர் வண்டிய ஒரு வழி ஆக்காம விட மாட்டேன்" என்று சொன்னான். அதற்கு நான் "லேபர் இன்ஸ்பெக்டர் என்னை நம்பித்தான் வண்டியை இங்கு விட்டுட்டு போயிருக்கிறார். உனக்கும் அவருக்கும் பஞ்சாயத்து ன்னா அதை பேட்டைக்கு வெளியே வச்சுக்க., பேட்டைக்குள்ள அவர் வண்டிய இங்கு யாரும் தொட விடமாட்டேன்" என்று சொன்னேன். அதற்கு அவன்" அவர் எப்படியும் வண்டியை எடுத்திட்டு பேட்டையை விட்டு வெளியே வரத்தானே செய்யணும்?அப்ப அவரிடம் வச்சிக்கறேன் என் விளையாட்ட" என்று சொல்லிவிட்டு போயிருக்கிறான் அதனால அவன் உங்கள எதிர்பாத்து வெளியிலதான் இருப்பான் அதனால நீங்க ஜாக்கிரதையா பாத்து போங்க" என்று சொன்னார்.

நானும் "அவனுக்குப்பயந்து பேட்டைக்குள்ளே எத்தனை நாள்தான் இருக்க முடியும் ? கடவுள் விட்ட வழி " என்று நினைத்து வண்டிய எடுத்திட்டு வெளியே வந்தேன். அவர் சொன்னமாதிரி அவன் பேட்டைக்கு வெளியே நின்று என் வண்டிய வழி மறிச்சான். இதை நான் ஏற்கனவே சொன்ன ஹோட்டல் முதலாளி கவனித்து , "என்ன இவன் வில்லங்கமானவன் ஆச்சே? நம்ம லேபர் இன்ஸ்பெக்டரிடம் மொறைச்சுக்கிட்டு எதோ பேசுகிறானே ? என்ன ஏது ன்னு விசாரிக்கணுமே " என்று நினைத்து அவர் ஹோட்டல் வாசல்படியில் நின்று அவனைக் கூப்பிட்டார். என்னையும் " கொஞ்சம் கோபிச்சிக்கிடாம வந்து காபி சாப்பிட்டுட்டு போங்க" என்று சொன்னார்.

"ம்ம்ம்ம் -----பிரச்சினை தீர கடவுள் எதோ வழி காண்பிக்கிறார் !" என்று நினைத்து உள்ளே போனேன். எனக்கு முன்பாக உள்ளே சென்ற அவனை அந்த முதலாளி தனி அறைக்கு அழைத்துச்சென்றார்.கொஞ்ச நேரம் கழித்து அவனையும் அழைத்துக்கொண்டு என்னிடம் வந்தார் "சார்! அந்த தள்ளு வண்டியிலிருந்து ஏதோ படிக்கல்லை எடுத்தீங்களா ?"என்று கேட்டார். நானும் அதை ஆமோதித்து தலையாட்ட அவரும் "அந்த படிக்கல் இதோ இவனுடையது தான்.அதை இப்போது அவனிடம் நீங்க கொடுத்தா நாளைக்கி ஆபீஸீக்கு வந்து அவனிடம் இருக்கும் எல்லா தராசு படிகளையும் முத்திரையிட்டுக்கொள்ளுவான்., அதனாலே இப்போது அவனிடம் அந்த படிக்கல்லை நீங்க கொடுக்கலாமா? "என்று கேட்டார.

"எனது விருப்பம் --., நோக்கம் எல்லாம் வியாபாரிகள் சட்டப்படி முத்திரையிட்ட எடை அளவுகளைக்கொண்டு வியாபாரம் செய்வதுதானே ? சட்டப்படி அதை அவன் நாளை செய்து விடுவான் என்று இவர் சொல்லும்போது மறுக்கக்கூடாது., " என்று நினைத்து அந்த படிக்கல்லை எடுத்து அவனிடமே கொடுத்து விட்டேன்.

உடனே அந்த முதலாளி "பாத்தியாடா? நான் என்ன சொன்னேன்? எவ்வளவு தங்கமான இன்ஸ்பெக்டர் ?அவரைப்போயி நீ என்னசொன்ன? எப்படி நடந்துக்கிட்டார் பாத்தீயா ? "என்று கேட்டார். அவனும் " ஆமா முதலாளி ! தப்புத்தான்!! "என்று அவரிடமும் "சார் !கண்டிப்பா நாளைக்கி என்கிட்டே இருக்கிற தராசு படிக்கல் எல்லாத்தையும் ஆபீசுக்கு கொண்டு வந்து முத்திரையிட்டுக்கொள்கிறேன் "என்று என்னிடமும் சொல்லிவிட்டு தலை குனிந்தவாறே அந்த இடத்தைவிட்டு சென்று விட்டான்.

நானும் அவரிடமும் " பரவாயில்லை., நீங்க இருந்ததாலே பிரச்சினையை ஒரு வழியா நல்லபடியா முடிச்சி விட்டுடீங்க ! "என்று சொன்னேன். " என்ன? இவனைப்பத்தி முன்னாலே உங்களுக்குத் தெரியுமா? "என்று கேட்டார். "இல்லை., இப்பத்தான் பேட்டை கருவாட்டுக்கடைக்காரர் சொன்னார் "என்று சொன்னேன்.அவரும் " அவன் ரெம்ப மோசமானவன்தான் சார்! என்ன செய்வது ? உங்க தொழிலிலும் எங்க தொழிலிலும் வில்லமானவங்க, விவகாரமானவங்களை நாம எப்படியாவது சந்தித்துதான் ஆக வேண்டியதிருக்கிறது., சமாளிப்பதில் தான் நம்ம திறமையே இருக்கிறது " என்று சொன்னார். நானும் "ஆமாங்க !" என்று சொன்னேன்.

அன்று மட்டும் அவரது தலையீடுஇந்த விஷயத்தில் இல்லாமல் இருந்திருந்தால் ? ---------------சொல்லுங்க தம்பிகளா ? -----------------------என்ன நடந்திருக்கும் ? "

"கரெக்ட்டா கோரஸ்ஸா சொல்லட்டுமா அண்ணே !----- டேய் ! சத்தமா சொல்லணும்டா - ஒன்னு !, ரெண்டு!!, மூணு !!! -------- ஆரம்பிங்கடா --------"இன்னைக்கி இவ்வளவு நீளமான போரடிச்ச கதையை நீங்க சொல்லி நாங்க கேட்கணும்கிற கட்டாயம் எங்களுக்கு வந்திருக்காது "--------------------என்ன அண்ணே ? நாங்க சொன்னது சரிதானே அண்ணே ? "
 ·  Translate
1
Add a comment...
 


ஹரி ஹரி கோகுல ரமணா !
 ·  Translate
1
Add a comment...
 
கோவிந்தா! ஹரி கோவிந்தா !!
வெங்கட ரமணா கோவிந்தா !!!
 ·  Translate
1
Add a comment...
 

சின்ன அரும்பு மலரும் !சிரிப்பை சிந்தி வளரும் !!
 ·  Translate
1
Add a comment...
 

அழகென்ற சொல்லுக்கு முருகா
 ·  Translate
1
Add a comment...
 

சொல்ல சொல்ல இனிக்குதடா !முருகா !!
 ·  Translate
1
Add a comment...
 
ஓம் ஓம் சக்தி ஓம் !ஓம் சக்தி ஓம் !

ஜெய ஜெய ஜெய சங்கரி ஓம் !!!
 ·  Translate
1
Add a comment...
 

மருதமலை மாமணியே முருகய்யா
 ·  Translate
1
Add a comment...
 
 
உண்மை முகத்தில் அறைகிறது.

நான் நெதர்லாந்து போய் திரும்பி வந்து கிட்டத்தட்ட 15 மாதங்கள் ஆகின்றன. இருந்தாலும் அவ்வவ்போது அந்த நாட்டு மக்களின் குணங்கள் நெதர்லாந்தில் நான் சந்தித்த சூழ்நிலை,பார்த்த காட்சிகள் எல்லாம் என் மனதில் அவ்வப்போது தோன்றி என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது. எப்படி ஒரு கட்டுப்பாடான ஒழுங்கை ஒவ்வொரு துறையிலும் கொண்டு வந்தார்கள் என எண்ணி மலைக்க வைக்கிறது.

நெதர்லாந்து மக்கள் ரோட்டில் நடந்துகொண்டே இடது கையில் ஒரு பொட்டணத்தை வைத்துக்கொண்டு அதிலிருந்து நம்மூர் காராச்சேவு போன்ற பொருட்களை எ டுத்து சாபிட்டுக்கொண்டு அல்லது ஐஸ் கிரீம் கோனை சுவைத்துக்கொண்டு நடந்து செல்வது வழக்கம்.சாப்பிட்டு முடித்தததும வெற்று காகிதம் அல்லது கவரை நாம் சுருட்டி தெரு ஓரத்தில் தூக்கிப் போடுவது போல் அவர்கள் தூக்கிப்போடுவது இல்லை. பக்கத்தில் எங்காவது குப்பைத்தொட்டி இருக்கிறதா என்று பார்க்கிறார்கள் .இருந்தால் அதில் போடுகிறார்கள். இல்லாவிட்டால் குப்பைதொட்டியை காணும் வரையில் தம் வசம் வைத்திருந்து பின்னர் அதில் போடுகிறார்கள். இந்த வழக்கத்தை சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை தவறாமல் பின்பற்றுகிறார்கள் இந்த பழக்கத்தை யார் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் ?

இன்னொரு நிகழ்ச்சியை சொல்லுகிறேன். கேளுங்க!
ஒரு நாள் எங்கள் தெருவில் காலை 6.30 மணிக்கு நகராட்சி பணியாளர்கள் (கவனிங்க! காலை 6.30 மணிக்கு ) ஏதோ ஒரு வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது தற்செயலாகவோ அல்லது தவறுதலாகவோ அந்த தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பெரிய குழாய் ஓன்று உடைந்து விட்டது.

தெரு முழுவதும் தண்ணீர் ஆறாக பெருகி ஓடியது ஒரு 10.நிமிஷத்தில் தெருவில் அரை அடி உயரத்திற்கு தண்ணீர் ஏறி விட்டது ப.க்கத்தில் இருந்த நகராட்சி பணியாளர்கள் உடனே யாருக்கு போன் செய்தார்களோ தெரியவில்லை. இன்னொரு 10 நிமிஷத்தில் இரண்டு வேன்களில் ஒரு 10 பேர் வந்திறங்கினார்கள். அவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒரு பிரிவினர் தண்ணீர் பாதாள சாக்கடை மூலம் வெளியேற தடை ஏதும் இருக்கிறதா எனப்பார்த்தார்கள். இரண்டாவது பிரிவினர் எங்கே உடைப்பு ஏற்பட்டது எனப்பார்த்து கொண்டார்கள்..மற்றொரு 10 நிமிஷத்திற்குள் தண்ணீர் முழுவதும் பாதாள சாக்கடை மூலம் வடிந்து விட்டது.இரண்டாவது பிரிவினர் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய ஆரம்பித்தார்கள்.அதை எவ்வளவு நேரத்தில் சரி செய்தார்கள் தெரியுமா? மிஞ்சிப்போனால் 15 நிமிஷத்திற்குள் சரி செய்தார்கள்

. பின்னர் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஒ .கே. சொல்லிக் கொண்டார்கள். பிறகு அவரவர் வந்த வண்டிகளில் ஏறி உட்கார்ந்த அடுத்த நிமிஷம் அவர்கள் காணாமல் போய் விட்டார்கள்.அரசு வேலை பார்த்தாலும் பிரதிபலன் எதுவும் எதிர்பாராமல் வேலை செய்ய அவர்களுக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் ?

ஒரு நாள் எங்கள் மகன் அவனது ஆபீசுக்கு காரில் சென்று மாலையில் வீடு திரும்பினான். திரும்பும்போது சிறிது மழை பிடித்துக்கொண்டதால் காரின் முன் விளக்குகளை போட்டுக் கொண்டு வந்திருக்கிறான்.வீடு வந்து சேர்ந்ததும் கார் முகப்பு விளக்குகளை அணைக்க மறந்து விட்டான்.. வீட்டிற்க்குள் வந்த அரை மணி நேரம் கழித்து ஞாபகம் வந்து பின்னர் அந்த விளக்குகளை அணைத்து விட்டான்.ஆனால் அதற்குள் கார் பாட்டரியில் இருந்த மின்சாரம் இறங்கி இருக்கிறது.

அடுத்த நாள் ஆபீஸ் செல்ல காரில் ஏறி ஸ்டார்ட் செய்ய கார் மக்கர் செய்தது. திரும்ப திரும்ப அவன் காரை ஸ்டார்ட் செய்ய ஒவ்வொரு தடவையும் ஒரு உதறு உதறி அமைதியாகி விட்டது.
எங்கள் மகனுக்கு காரில் என்ன கோளாறு என்று தெரியவில்லை. இதை எதிர் வீட்டில் இருந்த அம்மாள் கவனித்துக்கொண்டே இருந்திருப்பார் போல் தெரிகிறது. அவர் எங்கள் கார் அருகே வந்து எங்கள் மகனிடம் "உங்க கார் பாட்டரியில் மின்சாரம் இறங்கி விட்டது. கார் ஸ்டார்ட் ஆகணுமுனா இன்னொரு கார் பட்டரியிலிருந்து உங்க கார் பாட்டெரிக்கு கனைக்சன் கொடுத்தால்தான் வண்டி ஸ்டார்ட் ஆகும்" என்று சொல்லிவிட்டு போனார். இம்மாதிரி வலிய வந்து உதவும் குணம் அவர்களுக்கு எப்படி ஏற்பட்டது?

என் மகனும் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் பயன்படட்டும் என காரை இன்ஷூர் செய்திருந்தான்.அவர்களுக்கு இவன் போன் செய்ய அவர்களும் "உங்கள் கார் எங்கிருக்கிறது ?" என்று மட்டு கேட்க எனது மகனும் வீட்டு முகவரியை தெரிவிக்க எதிர்முனையிலிருந்து "இன்னும் ஒரு மணி நேரத்தில் எங்க மெக்கானிக் அங்கு வருவார் என்று சொல்லி இருக்கிறார்கள்.சரியாக 55 வது நிமிஷத்தில் மெக்கானிக் வந்தார்.குறையை 5 நிடத்தில் சரி செய்து விட்டு எதுவும் எங்களிடம் எதிர்பாராமல் bye சொல்லி விட்டு சென்றார்
இந்த மாதிரியான நேரம் தவறாமை அவர்கள் இரத்தத்தில் எப்படி ஊறியது ?

இப்படி எத்தனையோ உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

"சரி அண்ணே ! என்னமோ உண்மை முகத்தில் அறைகிறது என்று தலைப்பு வைத்துவிட்டு நல்ல விஷயமா சொல்லிக்கிட்டு வர்றீங்க ? எங்காவது நல்ல விஷயம் முகத்துலே அறையுமா ? "

" ஏன் தம்பிகளா? இந்த நிகழ்ச்சிகளை நான் சொல்லிக்கொண்டு வரும்போதே இதே மாதிரியான நிகழ்வுகள் நமது ஊரில் ஏற்பட்டால் நாம் எவ்வளவு பணத்தை வீணாக செலவழிக்க வேண்டும்., எவ்வளவு காலதாமதம் ஏற்படும்., அதனால் நாம் எவ்வளவு தூரம் சிரமப்படுவோம் என்ற எண்ணம் உங்கள் மனதில் உதிக்கவில்லையா ? அது உங்கள் முகத்தில் அறைந்தாற்போல உங்கள் மனதில் வலி தோன்றவில்லையா ?" ·  Translate
View original post
1
Add a comment...
 

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றிகாண்பதில்லை.., வெற்றிபெற்ற மனிதனெல்லாம்.., புத்திசாலிஇல்லை..,
 ·  Translate
1
Add a comment...
Story
Tagline
Native of Tirumangalam. Studied in P.K.N.High School, Tirumangalam and graduated from V.H.N.S.N.College,Virudhunagar. Entered in Government Sevice in 1974 and retired as labour law enforcement official in 2006 Got married in 1978 Have 1 boy and1 girl child. Have 2 grand children.
Education
  • V.H.N.S.N. College, Virudhunagar,
    English Literature, 1967 - 1970
Basic Information
Gender
Male
Collections Siva siddarthan is following
Work
Occupation
Retired
Skills
Interested in video editing
Employment
  • Labour Department, Tamilnadu Gov
    Asst.Inspector of Labour, 1974 - 2006
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
Tirumangalam, Tamil Nadu, India
Fine.
Public - 2 years ago
reviewed 2 years ago
1 review
Map
Map
Map