Profile

Cover photo
Senthilmohan Appaji
1,550 followers|365,709 views
AboutPosts

Stream

Senthilmohan Appaji

Shared publicly  - 
 
 
டெல்லி ரேப்பிஸ்டை பேட்டி எடுத்தது தான் ஆகச் சிறந்த பேட்டி என்பேன். அதை வெளியிட தடை விதித்தது ஆகச் சிறந்த முட்டாள்தனம் என்பேன்.

பெண்களின் ஆடைகள் பற்றியும் இரவு நடமாடுவதைப் பற்றியும் பேசாமல் 'குடி போதையில் தன்னிலை மறந்து செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்' என்று பேசியிருந்தால் அதை வெளியிட தடை செய்திருக்க வேண்டும். ஆனால் தன் மனதில் உள்ளதை வெட்ட வெளிச்சமாக பேசியதை வெளியிட தடை செய்வது அயோக்கியத் தனம்.

ரேப்பிஸ்ட் தானாக உருவாகுவதில்லை. இந்த சமூகத்தின் பெரும்பாலானவர்களால் உருவாக்கப் படுகிறான் என்பதற்கு அவனது வாக்கு மூலமே சான்று.
சல்வாருக்கு ஷால் அணியவில்லை என்றாலே அது அந்த பெண்ணின் நடத்தையை கேள்விக்கும் கேலிக்கும் உட்படுத்தும் இந்த சமூகத்தின் பிம்பம் தான் அந்த ரேப்பிஸ்ட். இரவு ஒன்பது மணிக்கு மேல் ஒரு பெண் வெளியே நிற்கிறாள் என்றால் அவளை எப்படி அடையாளப்படுத்துமோ அப்படித்தான் அவனுக்கும் அடையாளப் படுத்தியிருக்கிறது.

இந்த முட்டாள் தனமான கருத்துகள் எல்லாம் எங்கிருந்து தொடங்கப்பட்டிருக்க வேண்டுமென்றால் கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கும் மத போதகர்களால் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

எதனால் சானியா மிர்சாவை இஸ்லாம் மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்களோ எதனால் இந்துத்துவாக்கள் காதலர்களை தாக்கினார்களோ எதனால் RSS கையில் தாலியை வைத்துக்கொண்டு காதலர் தினத்தன்று சுற்றினார்களோ அதனாலே அவன் ரேப் செய்தான். அவ்வளவு தான்!

மதத்தை நிலைநிறுத்த கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்கள் அணியும் ஆடைகளை ஆராய்ச்சி செய்தார்களோ அவர்களாலே ரேப்பிஸ்ட் உருவாக்கப்பட்டார்கள். படுகிறார்கள்! ஒவ்வொரு மனிதனின் மூளையிலும் கலாச்சாரம் என்றும் மதநல்லிணக்கம் என்று இந்த விஷக் கருத்துக்களை விதைக்கப்பட்டு பின்பு அதை அறுவடை செய்கிறார்கள். இந்த நச்சு விதை எதுவரை வேர் விடுகிறது என்றால் ஒரு குழந்தையின் ஆடை விலகும் போது விரசம் அடைய வைப்பது வரை செல்கிறது.

ஒன்றும் வேண்டாம். இந்துத்துவா அமைப்பினரையோ இஸ்லாம் மத போதகர்களையோ பெண்கள் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணியலாம். அதை யாராலும் கேள்வி கேட்க முடியாது என்ற ஒற்றை அறிக்கையை மட்டும் வெளியிடச் சொல்லுங்கள் பார்க்கலாம். முடியாது. அல்லது ஆடைகள் அணிவதில் மூன்றாம் நபர் தலையிட்டால் குற்றம் என்ற ஒரு சட்டத்தை பாஜக அரசை இயற்றச் சொல்லுங்கள். பார்ப்போம். மாறாக இதை யோசிக்க விடாமல் அவனது பேட்டியை தடை செய்வதில் எஸ்கேபிசம் தான் தெரிகிறது.

ரேப் செய்பவர்களுக்கு தூக்கு தண்டையோ இல்லை அதை வெட்டுவேன் இதை வெட்டுவேன் என்று என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுத்து திருப்தி அடைந்து கொள்ளுங்கள். ஆனால் மத போதகர்கள் தன் கையில் கலாச்சாரக் கொடியை தூக்கிப் பிடிக்கும் போது அக்கொடியில் எங்கோ ஒரு மூலையில் உலராத ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும்.

அந்த ரெத்தம் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு ஓநாயால் சுவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

Deepika Vishwanath in Facebook.
 ·  Translate
4 comments on original post
2

Senthilmohan Appaji

Shared publicly  - 
 
 
Gavaskar : My son is the biggest loser of all times

Amitabh : No, mine is

Mallya : Have you met mine ?

Sonia Gandhi : Guys please...🙏

From #WatsApp
View original post
6
Rajkumar Chinnasamy's profile photo
 
ROFL

Senthilmohan Appaji

Shared publicly  - 
 
Wipro CEO T K Kurien says major organizational restructuring lies ahead as large information technology (IT) services companies like his keep pace with the demands of a digitized world. &nb...
1

Senthilmohan Appaji

Shared publicly  - 
 
That 8th pass - 10th fail moment for Cong & BJP
10
Have him in circles
1,550 people
suriya prasath's profile photo
N. Ilango Puduvai's profile photo
Venu Gopal's profile photo
Selvaraj V's profile photo
saravanan r's profile photo
Sivakumar Os's profile photo
Govindarajan R's profile photo
Karisal Sundar's profile photo
வடகரை வேலன்'s profile photo

Senthilmohan Appaji

Shared publicly  - 
 
 
தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினையை தமிழர்களின் பிரச்சினையாக ஆக்க முயன்ற கவிஞர் தாமரையை எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் முன்பு அமர்ந்து பேசித் தீர்த்துக் கொண்டிருக்கலாம், இல்லையெனில் சட்டத்தின் உதவியினை அணுகி இருக்கலாம் இது எதுவுமே இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் உண்ணாவிரதம், தர்ணா என்று முன்னெடுத்திருக்கலாம்...

மாறாக, தமிழுக்கு பாடுபட்டேன் தெருவுக்கு வந்து விட்டேன் என்றெல்லாம் பதாகை வைத்துக் கொண்டு மொழிக்கு இவர் சேவை செய்ததால் ஏதோ ஊறு வந்து விட்டதைப் போலவும், இதைத் தீர்க்க தமிழ் தேசத்தின் தலைவர்களும், ஊடகங்களும் முன் வரவேண்டும் என்பது மாதிரி எல்லாம் அறிக்கைகளும், பேட்டிகளும் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது....

சாதாரண பிரச்சினையாய் இருந்தாலும் கூட ஊடக வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு அது ஏற்பட்டால் அது எல்லோரால் கவனிக்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆதிக்க மனோபாவத்தில் இப்படி எல்லாம் செய்கிறாரோ என்றுதான் எனக்குத் தோன்றியது.

இதை விட எத்தனையோ அநீதிகள் இழைக்கப்பட்ட என் தமிழ் தேசத்தின் தாய்மார்கள் எல்லாம் கேட்க நாதியற்று ஆறுதல் சொல்ல ஆட்களின்றி பெருத்த சோகத்தோடு கண்ணீருக்கு நடுவே தங்களது வாழ்க்கையை காவல் நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் வீடுகளுக்குமாய் நடந்து நடந்து நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்...

என்ற செவுட்டில் அறையும் உண்மையை ஏன் முதுகெலும்புள்ள ஒரு ஊடகமும் இதுவரையில் பேசவே இல்லை என்பதுதான் எனக்கு ஆசர்யமாய் இருக்கிறது.


-தேவா சுப்பையா...
 ·  Translate
5 comments on original post
5

Senthilmohan Appaji

Shared publicly  - 
 
 
பாக்கியராசன் சே in FB

"இந்தியாவின் மகள்" படம் பார்த்து 3 மணி நேரம் ஆகிவிட்டது.. இன்னும் பதட்டம் அடங்கவில்லை.. உள்ளே ஒரு சொல்லமுடியாத அழுத்தம் பரவிக்கிடக்கிறது.. மகளை பெற்றவன் அந்த மகள் மேல் கொள்ளை பாசம் கொண்டவன் என்பதால் இன்னும் அதிகமாக அழுத்துகிறது... இப்படியான மனிதம் கொஞ்சம் கூட இல்லாத சமூகத்திலா என் மகளை நான் உலாவவிட போகிறேன் என்று நினைக்கையில் உடம்பெல்லாம் நடுங்குகிறது.. ஜோதியின் தாயின் கண்ணீர் என்னை இன்று தூங்கவிடாது.. என் கைகளில் தவழ்ந்த ஜோதிக்கு நானே நெருப்பு மூட்டினேன் என்று அந்த தந்தை கைகளை பிசைகளில் மனம் பிசைகிப்போனது..

ஜோதியையும்.. ஜோதியின் கனவுகளையும் நொடிகளில் குடியின் உச்சத்தில் பொசுக்கிவிட்டு 'ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை வராது, 9 மணிக்கு மேல் நல்ல பெண்கள் வெளியில் நடமாட மாட்டார்கள்' என்றெல்லாம் கலாச்சார பாடம் எடுக்கையில் உச்சி முதல் அடி வரை எரிகிறது.. ஒழுக்க விழுமியங்களை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி ஆயிரம் கதைகள் சொல்லப்படும் இந்நாட்டில் எங்கிருந்து இவ்வளவு மோசமான போதனைகளை இவர்கள் கற்றார்கள் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை... கற்பழிக்கப்படும் பொழுது எதிர்பெதையும் காட்டாமல் அமைதியாக பெண்கள் இருக்கவேண்டும் என்று சொல்லும் மிருகங்கள் நம்மை சுற்றி நடமாடுவதை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை.. என் மகள் இப்படி ஒரு தவறு செய்தால் நான் என் வீட்டார் முன்னால் என் பண்ணை வீட்டில் அவளை எரித்துக்கொல்வென் என்று சொல்லும் மனநிலை உள்ள மனிதரை கொண்ட இந்தியா கலாச்சாரம் மிளிரும் நாடு மயிரு மட்டை என்றெல்லாம் இனி எவனும் சொல்லாதீர்கள்..

பண்பாடற்ற முறையற்ற விதிகளற்ற கொஞ்சமும் குற்றவுணர்வற்ற மனிதர்களை உருவாக்கும் தற்கால சமூக நிலையும் கல்விமுறையும் கொண்ட நாட்டை சட்டம் கொண்டு எக்காலத்திலும் திருத்த முடியாது.. கொலையாளிகளை தூக்கில் போடுங்கள் என்று கூச்சலிடுவதில் ஒரு துளியும் பயனில்லை.. மனிதம் துளிர்க்காமல், அடிப்படை தத்துவம் மாறாமல், மனங்கள் மாறாமல், எதையும் மாற்ற முடியாது திருத்த முடியாது..

# ஒரு 'ஜோதி' என் வீட்டிலும் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறாள்.. ஒரு 'ஜோதி' உங்கள் வீட்டிலும் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.. எல்லோர் வீட்டிலும் மகிழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக 'ஜோதி'கள் இருக்கிறார்கள்.. அணையாமல் ஜோதிகளை காப்பதற்கேனும் அன்பையும் மனிதத்தையும் நோக்கிச் செல்லும் சமூக மாற்றத்திற்கு நாமெல்லோரும் பங்களிப்போம்..

Thank you BBC and LESLEE UDWIN...
 ·  Translate
View original post
2

Senthilmohan Appaji

Shared publicly  - 
 
 
இந்தியாவில் ஒரு நாளுக்கு 92 பெண்கள் பாலியியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.அதைப் பற்றி கவலை இல்லை.

10ல் 7 பேர் 'நிர்பயா' வழக்கின் குற்றவாளியின் பேட்டியில் குறிபிட்ட மனநிலையில்தான் இங்கு திரிந்துக்கொண்டிருக்கிறோம். பெண் ஜீன்ஸ் ஏன் லெக்கின்ஸ் அணிவதைக்கூட குற்றமாக பார்க்கும் சமூகத்தில் வாழ்க்கிறோம் என்று வெட்கமில்லை.

ஆனால் , குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்புவதால் இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என கவலைப்படுகிறோம் , பேட்டியை பார்த்து இன்னும் பலர் பாலியியல் வன்முறைக்கு கிளம்பிவிடுவார்கள் என அபத்தமாய் வாதிடுகிறோம்.

ஏன் இந்த வேடம்...யாரை ஏமாற்ற இந்த வேடம் ?

#IndiasDaughter
 ·  Translate
View original post
2

Senthilmohan Appaji

Shared publicly  - 
 
Double ROFL....
 
பத்த வச்சுட்டயே பரட்டை! ஏதோ வுழுந்தோம் கும்பிட்டோம்னு ஸ்மூத்தா போய்க்கினு இருந்த எங்க வாழ்க்கைல இப்படி குனியவச்சி கும்மியடிச்ச்சீட்யளே ஹுசைனி பாயி!

இன்னாண்ணே இப்படி பண்ணீட்டியேண்ணே!

இப்படிக்கி

அதிமுக அமைச்சர்கள் & எம் எம் ஏஸ் லவுட் வாய்ஸ்
 ·  Translate
9 comments on original post
4

Senthilmohan Appaji

Shared publicly  - 
 
 
ஒரு நாள் அல்ல ஒரு மாதமே உற்சாகமாக வேலை செய்ய இது போன்ற சம்பவங்கள் போதும். நோய்கள் எப்போதும் வாழ்க்கை குறித்தான ஒரு நிச்சயமற்ற தன்மையை உடன் கொண்டு வந்து விடுகிறது. 

நம் அகந்தையை தூக்கிப் போட்டு, எதிர்காலம் குறித்தான மிகப் பெரிய அச்சத்தை இவைகள் மிக எளிதில் ஏற்படுத்தி விடுகின்றன. சலனமற்ற நீரோடையை போல மிக அமைதியாய் போய் கொண்டிருக்கும் ஓர் வாழ்வில் திடீரென ஒரு நாள், மிக சாதாரண நிகழ்வாய் அது ஆரம்பிக்கிறது. எப்போதையும் போல இது இன்னொரு காய்ச்சலாகவோ, சளியாகவோ இருக்கும் என்ற எந்த கவலையும் இன்றி, மருத்துவரை மிக மெதுவாக அணுகும் போது, அவரின் முக மாற்றம் சற்றே கவலையை அளிக்கும்.

நல்லாத்தான இருக்கோம், எந்த நோய் நம்மை என்ன செய்து விட முடியும் என்ற நமது தன்னம்பிக்கையை, நமது உடல் வலிமையை கொஞ்சம் கொஞ்சமாய் அது குலைக்க ஆரம்பிக்கும். வெறும் பதினைந்து நாட்களில் ஒரு வருடம் ஆன உணர்வை நமக்குள் கொண்டு வந்திருக்கும். கம்ப்ளீட் ஸ்கேன், பயாப்சி, நீடில் டெஸ்ட் என என்னென்னவோ பெயர்களடங்கிய ரிப்போர்ட்களுடன் மருத்துவமனைக்கும், நமக்குமான பந்தம் ஆரம்பிக்கும்.

முதல் இரண்டு மூன்று முறைகள் சென்று வரும் போது, இந்த பிரச்சினைக்காக இந்த மருத்துவமனை வருவது இதுவே கடைசி தடவையாய் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்று வர ஆரம்பிப்போம். நம்பிக்கை வெளிச்சம் மெல்ல மெல்ல மறைந்து, செவிலியர்கள் மெல்ல மெல்ல நம்மை அன்றாட வாடிக்கையாளராய் பாவித்து மெல்ல புன்னகை பூக்கத் தொடங்குவர்.

இந்த யுத்தம் இப்போதைக்கு முடியாது என்ற உண்மை உரைத்து இனி நம்மால் ஆவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை வரும் போது எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு நாம் ஆளாகியிருப்போம். அப்போதுதான் நமக்கு வாழ்வதற்கான அனைத்து ஆசைகளும் அதீதமாய் வெளிப்படும். துள்ளிக் குதித்து வரும் நம் வாரிசுகளையோ, பேரக் குழந்தைகளையோ பார்க்கும் நிமிடங்களில், இன்னும் சில காலம் இவர்களுடன் வாழ நமக்கு அமையாதா என்ற வேட்கை மனதினுள்ளே வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஏதேனும் அதிசயம் நிகழாதா என்ற அவநம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்புடன், நம்மைக் காப்பாற்ற கஷ்டப்படும் நம் குடும்பத்தினர்க்காகவேனும்,  புன்னகையுடன் வாழ்வதென்பது ஒரு கடவுள் நிலை.

கண் முன்னே மிக நெருங்கிய உறவினர் மெல்ல மெல்ல புற்று நோயால் அரிக்கப் பட்டு, எங்களை விட்டு விலகிச் சென்றதை கையாலாகாத நிலையில் பார்த்து வந்திருக்கிறோம். 

இந்த வலியைக் கொஞ்சமேனும் உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

வாழ்த்துவதற்கு கேவலம் வயது ஒரு கேடா என்ன? மனசார சொல்றேன் தாயி. உன் தன்நம்பிக்கையும், உன் முயற்சியும் நிச்சயம் இன்னும் பலகாலம் காப்பாற்றும். 

உங்களுடைய வார்த்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியையும், பலத்தையும்  எங்களுக்கு அளிக்கின்றன என உங்களுக்கே தெரியாது. வாழ்க வளமுடன்.

http://vaidehivc.blogspot.in/2015/02/my-fight-against-dreadful-disease-cancer.html
 ·  Translate
Hi all, Like most Chennai girls, I too had my entry into a Software Company right after my graduation. When I reached 23, I met my better half and tied the wedlock soon.  We had a cute little girl child the very next ye...
5 comments on original post
3
2
மேவி ..'s profile photoமங்களூர் சிவா's profile photo

Senthilmohan Appaji

Shared publicly  - 
 
And now BJP got the answers for their five questions to AK.
5
Pattikaattaan Jey's profile photo
 
எல்லாம் நம்ம பயபுள்ளைகதான், ஆப்பு கட்சி பிஜேபி யோட பினாமிதானே?!

இதெல்லாம் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க பண்ண ப்ளான் மக்காஸ்.

#அடிச்சி_ஆடுறா_பட்டிக்ஸூ
:-)))
 ·  Translate
People
Have him in circles
1,550 people
suriya prasath's profile photo
N. Ilango Puduvai's profile photo
Venu Gopal's profile photo
Selvaraj V's profile photo
saravanan r's profile photo
Sivakumar Os's profile photo
Govindarajan R's profile photo
Karisal Sundar's profile photo
வடகரை வேலன்'s profile photo
Basic Information
Gender
Male
Birthday
March 11