Profile cover photo
Profile photo
Selva Kumar ISR
1,628 followers
1,628 followers
About
Posts

Post has attachment
Hi Hero - Hassan Kontar,
Through you eyes I understand that all events in our life have a reason for being there. Struck in the Malaysian Airport for over 150 days! without money, friends and family. No country is ready to accept your arrival is a very very tough situation.

But I believe, Life placed you there to highlight the pains of a Syrian refugees to the rest of the world.

Your positive attitude towards handling these critical days are amazing and truly inspiring. We are there with you. Regards to your red pet Ms. Crimson.

If possible I'll meet you soon! Lets breathe in your little garden and go for a walk! Cheers!

நண்பர்களுக்கு,
ஹசன் அல் கோண்டார் பற்றி சிறு குறிப்பு!

ஹசன் சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக UAEக்கு தப்பிச் சென்ற அகதி. அங்கே வேலை செய்வதற்கான அனுமதி தரும் விசா முடிந்துவடைந்துவிட்டது. அதனால் அவர் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மலேசியா அவரை உள்ளே விடாமல் கம்போடியாவுக்கு அனுப்பியது. கம்போடியா அவருக்கு அனுமதி மறுத்து ஈக்வேடார் பக்கம் துரத்தியது. அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த 150 நாட்களுக்கும் மேலாக, தனக்கென்று ஒரு நாடோ, வீடோ இல்லாமல் விமானநிலைய மாடிப்படிக்கட்டுகளின் கீழ் உறங்கி எழுகிறார். குளிக்க, துவைக்க தண்ணீர் பயன்படுத்த அனுமதியில்லை என்பதால் நீரில் நனைத்த துண்டால் உடல் துடைத்துக் கொள்கிறார். நட்பாகியுள்ள சில ஏர்போர்ட் பணியாளர்கள் அவரது துணியை தங்களுடைய வீட்டில் துவைத்துத் தருகிறார்கள், உணவும் எப்படியோ கிடைக்கிறது.

ஹசன் சோர்ந்துவிடவில்லை. ஏர்போர்ட் இன்டர்நெட் துணையுடன் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் நண்பர்கள் வட்டத்தை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு செந்நிற நாய்க்குட்டி பொம்மையை தன்னுடைய செல்லப்பிராணியாகக் கருதி அதனுடன் வாக்கிங் செல்கிறார். இரண்டு செடிகளை பராமரித்து அதனை தன்னுடைய தோட்டம் என்கிறார். அவருடைய கிகி சேலஞ்ச் நடனம் மிகப்பிரபலம். தற்போது குளிர்காலத்தை எதிர்நோக்கி ஸ்வெட்டர் தைத்து பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.

தளராத அவருடைய மன உறுதியும், நம்பிக்கையும் இந்த உலகத்தின் பார்வையை அவர்மேல் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. சொந்த நாட்டை இழந்து அகதிகளாக சிதறிக்கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான சிரியா மக்களின் உண்மை நிலை, அவர் வழியாக உலகின் மற்ற பகுதிகளுக்கு தெரிய வந்திருக்கிறது. தற்போது உலகம் சிரியா அகதிகள் பற்றி மேலும் அக்கறை கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

ஃபேஸ்புக்கில் நானும் ஹசனும் நட்பானபின், நான் ஹசனுக்காக எழுதும் முதல் பதிவு இது. நீங்களும் ஒரு ஹலோ சொல்லுங்கள். அவருக்கு நமது அரவணைப்பு உற்சாகம் தரும்! சியர்ஸ் மக்காஸ்! உற்சாகமான காலை வணக்கம்!

அவருடைய டிவிட்டர் ஐடி Kontar91
ஃபேஸ்புக் ஐடி hasson.kontar

#CheersMakkas #மகிழ்ச்சி
#HassanKontar #KLIA2 #Syria #Refugee
PhotoPhotoPhotoPhoto
8/13/18
4 Photos - View album
Add a comment...

Post has attachment
ஃபேஸ்புக், டிவிட்டர் என எந்தப்பக்கம் சென்றாலும், ஐந்து வரிகளில் ஒரு வரி, கலைஞரைப் பற்றி இருக்கிறது. சில வரிகள் வன்மத்தைக் கொட்டுகின்றன. சில வரிகள் அன்பைப் பொழிகின்றன. அவருடைய அரசியல் பணிகள் கட்சிக்கு என்ன செய்தது? இந்த நாட்டுக்குக்கு என்ன தந்தது? என்று ஏராளமான தகவல்கள் இரைந்து கிடக்கின்றன. அதை ஒட்டி விவாதங்களும், விமர்சனங்களும், ஆமோதிப்புகளும் சுரந்து கொண்டே இருக்கின்றன. சிலர் அவரை ஏற்கவே மாட்டேன் என்கிறார்கள், சிலர் முதல் முறையாக அவரை ஏற்கத் துவங்கியிருக்கிறார்கள். நானறிந்த வரையில் வேறு எவரைப்பற்றியும் தமிழ்ச் சமூகம் இத்தனை அறிந்து வைத்திருக்கவில்லை. அவரை கரித்துக்கொட்டுவதற்காக அல்லது கண்கலங்கிக் கொண்டாடுவதற்காக அவருடைய ஏதோ ஒரு பண்பை பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய சித்தாந்தங்கள், குடும்ப உறவுகள் என எல்லாமே விமர்சன இயந்திரங்களால் சக்கையாகப் பிழியப்பட்டு திசையெங்கும் வீசி எறியப்பட்டிருக்கிறது.

சுருக்கமாகப் புரிந்து கொள்வதென்றால் அவருடைய வாழ்வு அவருக்கு முன்பே துவங்கி அவருக்கு அப்புறமும் தொடரக்கூடிய சமூகத்தின் வாழ்வாக இருக்கிறது. எல்லோருமாக, எல்லாமுமாக அவரே இருக்கிறார்.

கலைஞர் அவர்களே மீண்டு வாருங்கள்! இகழ் வாள்களும், புகழ் வாள்களும் போட்டி போட்டுக்கொண்டு, உங்களைச் சீண்டுவதையும், நீங்கள் அவற்றை எதிர்கொள்வதையும் காண ஆவலாக இருக்கிறேன்.
#Kalaignar
Photo
Add a comment...

Post has attachment
விருதுநகர் மாவட்டத்துல இருக்கிற அரசுப் பள்ளிகளில் கழிப்பறை கட்ட உதவிய நல் உள்ளங்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கு நன்றி!

https://youtu.be/90nHruv5cfw
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
சிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சந்தோஷம்! ஆனாலும் பிடிவாதமாக நடந்த சிவாஜிகணேசனின் சிலை அகற்றம், ஏனோ தானோவென நடந்த அவரது மணி மண்டபத் திறப்புவிழா, என சிவாஜிகணேசனின் புகழுக்கு நேர்ந்த ப...
Add a comment...

Post has attachment
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சந்தோஷம்!

ஆனாலும் பிடிவாதமாக நடந்த சிவாஜிகணேசனின் சிலை அகற்றம், ஏனோ தானோவென நடந்த அவரது மணி மண்டபத் திறப்புவிழா, என சிவாஜிகணேசனின் புகழுக்கு நேர்ந்த பல அவமரியாதைகள், மனதில் நெருடுவதை தவிர்க்க இயலவில்லை. அதனால் உண்மையிலேயே இந்த அரசு அவரது பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதைக் காணும் வரை பெரிதாக மகிழ்வதற்கு ஒன்றுமில்லை.

பல்வேறுதரப்பு மக்களின் அதிருப்திகளை சம்பாதித்திருக்கும் இந்த அரசு, வரப்போகும் தேர்தலில் எல்லோருடைய வாக்குகளையும் கவர பல முயற்சிகள் செய்யும் என்பது அனைவரும் அறிந்த இரகசியம். அதில் ஒன்றாக சில ஆயிரம் வாக்குகளாவது இந்த அறிவிப்பின் மூலம் கிடைக்கும் என்று இந்த அரசு நினைத்திருக்கலாம். அந்த வகையில் அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் சிலைக்கு இது முதல் வெற்றி.

திரும்பவும் அதே இடத்தில் அவரது சிலை வைக்கப்பட்டால்தான் அது அவரது கலைக்கு செய்யப்படும் மரியாதை!

ஆனாலும் அரசின் இந்த அறிவிப்பு நடிகர்திலகத்தின் இரசிகர்களுக்கு ஆறுதல் தரும்.
Photo
Add a comment...

Post has attachment
Add a comment...
Wait while more posts are being loaded