Profile

Cover photo
Ravichandran Somu
1,665 followers|590,187 views
AboutPostsPhotosYouTube

Stream

Ravichandran Somu

Shared publicly  - 
 
Last month visited Hong Kong after 14 years. When I was working in Singapore between 1996 to 1999, my company Asia Pacific HQ was in Hong Kong and used to go to Hong Kong regularly on business trips  At one point got tired of Hong Kong trips:) Moved to Boston in 1999 and after that didn't have the opportunity to go to Hong Kong again.

When Hong Kong was handed over to China in 1997, there were apprehensions about the future of Hong Kong. But Today, Hong Kong has grown leaps and bounds , standing tall with many more new high rise  buildings, new bridges, World class new airport etc.,
11
புதுகை அப்துல்லா's profile photo
 
இரண்டு மாசம் முன்னாடி போனேன். கவ்லாங் அப்படியே மாறிப்போச்சு.
 ·  Translate
Add a comment...

Ravichandran Somu

Shared publicly  - 
 
East meets West – One of the best Jugalbandhis !!!

Listen to the two musical geniuses - Pandit Ravi Shankar and Yehudi Menuhin.
 
Yehudi faithfully follows Panditji.... Amazing !!!

+Vasu Balaji 
7
Vasu Balaji (Bala)'s profile photoRavichandran Somu's profile photo
4 comments
 
Super....
Add a comment...

Ravichandran Somu

Shared publicly  - 
 
IPL Match - RCB vs. MI on 14/5/2012 @Chinnasamy Statium, Bangalore
5
Santhosh Kumar's profile photoRavichandran Somu's profile photo
2 comments
 
+Santhosh Kumar: These are Reception girls for Executive Lounge.
Add a comment...

Ravichandran Somu

Shared publicly  - 
 
+குடுகுடுப்பை கோச்சிறுஞ்சோழன்வேண்டுகோளுக்கிணங்க இன்று பார்த்த தமிழ்ப்படம் - “அழகி”.

ஒரே feelings !!!!


அழகி

ஆறாம் வகுப்பில் வந்து சேர்ந்து
அச்சாரமிட்டு என் மனதில்
அமர்ந்து விட்டாய்
என் அழகியாக நீ!

கடலை உருண்டைகள்
தேன் மிட்டாய்கள்
லஞ்சமாகக் கொடுத்தெனக்கு
என் வீட்டுப்பாடம் பார்த்து
காப்பியடிக்க நண்பர்கள்
காத்துக்கிடக்க...
காத்துக்கிடப்பேன்
நீ என் நோட்டுப்புத்தகத்தை
வாங்கிக்கொள்வதற்காக!

எட்டாம் வகுப்பில் ஓர் வாரம்
பள்ளி நீ வரவில்லை.
மனம் துடித்தது
காரணம் தெரியாமல்?

வெள்ளிக் கொலுசுகள் ஒலிக்க
பாவாடை, தாவணியில்
பூப்பெய்தி
புதுப்பெண்ணாய் வந்தாய் நீ...
மயங்கிப் போனேன் நான்!

பொறியியல் படிக்க
சென்னைக்குச் சென்றுவிட்டேன்.

நான்கு வருடங்கள் கழித்து
கண்டேன் உன்னை
நம்ம ஊர் டவுன் பஸ்ஸில்.
"என்னை ஞாபமிருக்கிறதா?"
மெதுவாகக் கேட்டேன்.
கண்களில் நீர் மல்க
மவுனமாய்ச் சென்றுவிட்டாய் நீ!

தனத்திடம்
தான் கொண்ட காதலை
தெரிவிக்காமல் பின்னாளில்
மனதிற்குள்
அழுதுகொண்டேயிருந்தான் சண்முகம்.
அவன் மட்டுமா....??
* * *
 ·  Translate
4
1
நாடோடி இலக்கியன்'s profile photoO.R.B Raja's profile photoNambi Chinnaiyan's profile photoSenthilmohan Appaji's profile photo
17 comments
 
நம்புறோம் +O.R.B Raja
 ·  Translate
Add a comment...

Ravichandran Somu

Shared publicly  - 
 
1992 ஆம் ஆண்டு C-DOTல் பணியாற்றிக்கொண்டிருந்தபோது கேரளாவில் கொச்சினுக்கு அருகிலுள்ள கலமசேரியில் C-DOT Digital Telephone Exchange நிறுவதற்காக ஒரு வார பயணம் சென்றிருந்தேன். ஒரு நாள் போரடிக்கவே செகண்ட் ஷோ பார்க்க என்ன நல்ல படம் என்று ஹோட்டல் ரிசப்சனில் கேட்டேன். “சர்கம்” படம் என்றார்கள். படம் பார்த்து விட்டு படம் ஏற்படுத்திய பாதிப்பில் அன்று சரியாக தூங்கவில்லை. அடுத்த மூன்று நாட்கள் தொடர்ச்சியாக செகண்ட் ஷோ பார்த்தேன். இன்று மீண்டும் பார்த்தேன். இன்றும் Climax பாடலில் கண்ணில் கண்ணீர்....

Ragasudharasa - Sargam (1992) KJ Yesudas, KS Chithra
 ·  Translate
5
Ravichandran Somu's profile photoVasu Balaji (Bala)'s profile photoநாடோடி இலக்கியன்'s profile photo
5 comments
Add a comment...

Ravichandran Somu

Shared publicly  - 
 
ஆனந்த கண்ணீர் வரவழைத்த Alga's Performance !!!

Alka Ajith Great final performance. Singara Velane Deva fullsong..
7
1
Kalidoss Murugaiya's profile photoNANDHA KUMAR's profile photo
 
wow..superb..no words to express.
Add a comment...
Have him in circles
1,665 people
naina mohamed's profile photo
prince thomas's profile photo
lalu pk's profile photo
Eelam Natham's profile photo
Kaleelourrahman M's profile photo
Shafi Ahamed's profile photo
manigandan s's profile photo
Venu Gopal's profile photo
thirupathi pathi's profile photo

Ravichandran Somu

Shared publicly  - 
 
உள்ளத்தை உருக்கும் சிவரஞ்சனி !!!
 ·  Translate
5
Ravichandran Somu's profile photoபுதுகை அப்துல்லா's profile photo
2 comments
 
நான் பாடும் மெளனராகம் கேக்கவில்லையா..

ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் -  இந்த ரெண்டு பாட்டும்தான் சிவரஞ்சனின்னவுடனே சட்டுனு நினைவில் வருது!
 ·  Translate
Add a comment...

Ravichandran Somu

Shared publicly  - 
 
மலரும் நினைவுகள்.....

பக்க வாத்தியம் பிண்றாங்க.Watch from 25:00 on wards....
 ·  Translate
3
1
Ravichandran Somu's profile photoபுதுகை அப்துல்லா's profile photoarul p's profile photoஜோதிஜி திருப்பூர்'s profile photo
4 comments
arul p
Add a comment...

Ravichandran Somu

Shared publicly  - 
 
மரத்தடி
--------------

நாட்டாமை தலைமையில்
பஞ்சாயத்து பேச
கிராமத்து மக்கள் கூடுவது
ஆல மரத்தடி.

கிராமத்து பெரிசுகள் கூடி
நாட்டு நடப்புகளை
அசை போட்டு பேசுவது
அய்யனார் கோவில்
அரச மரத்தடி.

பெண்கள்
பக்திப் பரவசத்துடன்
அம்மனுக்கு பொங்கல்
வைத்து வழிபடுவது
மாரியம்மன் கோவில்
வேப்ப மரத்தடி.

கன்னியர்களை
கவர்வதெப்படியென்று
காளையர்கள் கூடி
கணக்குப்போட்டு பேசுவது
கருவேல மரத்தடி.

கடைக்கண் பார்வையால்
காளையர்களை
வீழ்த்துவதெப்படியென்று
பூவையர் கூடி பேசுவது
பூவரசு மரத்தடி.

சிறுவர்,சிறுமியர்கள்
பல்லாங்குலி
ஆடு புலி ஆட்டம்
ஆடுவது
புளிய மரத்தடி.

உலகத் தமிழர்களெல்லாம்
ஒன்றாகக் கூடி
கதை, கவிதை, கட்டுரைகள்
கானாப் பாடல்கள்
கல்லூரி கலக்கல்கள்
கேட்டு மகிழ்வது
இந்த
இணைய மரத்தடி!

--- பொன்னி வளவன்
(ரவிச்சந்திரன்)
 ·  Translate
5
அத்திவெட்டி ஜோதிபாரதி's profile photoபுதுகை அப்துல்லா's profile photoRavichandran Somu's profile photoNambi Chinnaiyan's profile photo
40 comments
 
இலக்குமி குமாரன் – நினைவு இடுக்குகளில் நிற்கிறார்.

ஒன்று “தவுட்டுக்குள்ள ஒளிச்சு வச்ச மாம்பழம் போல கனிஞ்சிருக்கு மனசு’ போன்ற கவித்துவுமான வரிகளுக்காக இருக்கலாம். இல்லை, சாநி போல் வக்கிர வரிகளுக்காக இருக்கலாம்.

பிச்சினிக்காடு இளங்கோ – இவர் இல்லாத ஞாயிற்றுக் கிழமை தமிழ் முரசு இல்லை.

அப்புறம் மக்களே, காட்டுக்குள்ளே சுத்தாம (ஒரத்த)நாட்டு’ப் பக்கம் வாங்க!
 ·  Translate
Add a comment...

Ravichandran Somu

Shared publicly  - 
 
+Nambi Chinnaiyan: தலைவரே, மரத்தடி Yahoo Group-ல் என் “அழகி” கவிதையை தேடும்போது உங்கள் “College Kalakkals"-யும் கண்டு பிடிச்சுட்டேன் :)

+குடுகுடுப்பை கோச்சிறுஞ்சோழன் +O.R.B Raja +புதுகை அப்துல்லா +குசும்பன் குசும்பு



காலேஜ் கலக்கல்ஸ் -1: பூட்டு
-----------
அது மூன்றாமாண்டு கல்லூரிக் காலம். முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பயம் தெளியாத நிலையில், இறுதியாண்டு மாணவர்கள் அரியர்ஸை முடிக்கும் முயற்சியில்
இருக்க இந்த மூன்றாமாண்டு நேந்துவிட்ட கோயில் மாடுகள் போல இஷ்டத்துக்கும் லூட்டி அடிக்கும் காலம்.

இரண்டாவது ஆட்டம் சினிமா என்பது கல்லூரி காலத்தில் கட்டாயப் பாடம். அது என்ன படமாக இருந்தாலும் சரி. பாவ மன்னிப்போ, பாவம் கொடூனோ, ஃபைவ் மேன் ஆர்மியோ படத்தைவிட பாடம் பார்க்கச் செல்லும் அனுபவம்தான் முக்கியம். சினா. தானா. கடையில் சைக்கிளை வாடகைக்கு எடுக்கவேண்டும். ஒரு வண்டியில் இரண்டு பேர் கடடாயம் போகவேண்டும். சிக்கனம். பின்னால் இருக்கை இருக்காது. முன்னால் வைத்து ஓட்ட வேண்டும். கும்மிருட்டாயிருக்கும். விளக்கு இருக்காது. அதுவும் குறுக்கு வழியில்தான் போவோம். ஒற்றையடி பாதை. எங்கே முள் செடி, எந்த இடத்தில்
சரேலேன்று வளையும் என்பதெல்லாம் அத்துப்படி. சில இடங்களில் கொஞ்சம் பிசகினாலும் சறுக்கி விடும். ஆனாலும் ஆறு, ஏழு சைக்கிள் ஒன்றன் பின் ஒன்றாக போகும்போது மெதுவாகவும் ஓட்ட முடியாது. பின்னால ஓட்டுறவன் லந்து
வுடுவான். "மச்சிக்கு மாலைக் கண்ணு டோய் ". கொஞ்சம் சில்லரை பெயர்ந்தால் கணேஷ் கடையில் ஆளுக்கு ரெண்டு பரோட்டா தொட்டுக்க கொஞ்சம் பீர். அப்படியே போய் ராமவிலாஸிலோ, நடராஜாவிலோ உட்கார்ந்து 'உய்.... உய்.....'னு வாய் வலிக்க விசில் வுட்டுட்டு திரும்பினா பிறவிப் பயன் கிடைச்சிடும்.

இப்படி கலக்கலா போய்கிட்டு இருக்குறப்பா புதுசா வந்த முதல்வர் பதினோரு மணிக்கெல்லாம் விடுதி கதவ சாத்தனும்னு சட்டம் போட்டு செயல்படுத்தியும்ட்டாரு.
இன்னாங்கடா இது?. பார்லிமெண்ட்ல ஒரு சட்டம் திருத்தம் பண்ணவே பத்து வருஷம் ஆவுது. அதுக்கும் மேல அப்பீல், ஸ்டேன்னு எத்தனையோ தகிடுதித்தம் இருக்கு.
ஆனாக்க நம்ம ஆளு - நேத்திக்கு மழையில இன்னைக்கு முளைச்சா காளான் நம்மளுக்கு சட்டம் போட்டு அதை செஞ்சும் காட்டிட்டாரேன்னு உஷ்ணமாயிடுச்சு. கும்பல்
கும்பலா கூடி நின்னு பேசுனாலும் மனசு ஆறல. எப்படி ஆறும்?.
சாயங்காலாமா 'மரண விலாஸ்'ல சொப்ன சுந்தரி போஸ்டர் ஒட்டிட்டு போயிருக்கான். சுவர் ஏறிக் குதிச்சு போன பசங்க இருட்டுல ஏறுறப்போ கைகால் முட்டில சிராய்ப்பு
ஏற்பட்டு அதுக்கு வேற டிஞ்சர் போட்டு அலறுனது ரொம்ப ஃபீலிங் ஆயிடிச்சு.

"மச்சி இதுக்கு இன்னைக்கு ஒரு வழி பண்ணாம விடக்கூடாதுடா"ன்னு
ஆவேசப்படான் அடுப்புவாயன் அழகுராஜ். "உஷ்ணப்படாத. ஒரு திட்டம் இருக்கு" மர்மமா சிரிச்சான் க.உ.ம (கல் உளி மங்கன்) பிரகாஷ்.

லுங்கிய தொடைக்கு மேல ஏத்தி கட்டிகிட்டு சட்டையில்லாம தோள்ள துண்ட போட்டுகிட்டு வெளிச்சம் மங்குன நேரம் பாத்து சின்னதா தகர டப்பா எடுத்துகிட்டு போனான்
க.உ.ம. 'சரி. வேலை ஆயிருச்சுன்னு நெனச்சுகிட்டு' நிம்மதியா சாப்டுட்டு தூங்க போயாச்சு.

காலையில பாத்தாக்க விடுதியே அல்லோல்படுது. காவலாளி பூட்ட திறக்க முடியாம முதல்வருக்கு தகவல் சொல்ல போயிட்டாரு. "இன்னைக்கு விடுப்பு , அடிச்சாண்டா
ஆப்பு" விடுதிக்கு உள்ள அடி தூள் பறக்குது டப்பாங்குத்து.

ஒரு வழியா எட்டரை மணிக்கு முதல்வர் வந்தாரு. பூட்டு பூரா தார் ஊத்தி கெட்டியா இறுகிப்போயி கிடக்கு. கொஞ்சம் நேரம் எல்லாரையும் பாத்தாரு. 'இவனுங்கள இப்படியே
சாப்பாடு தண்ணியில்லாம இன்னக்கி முழுசா அடச்சி வச்சிடலாமா'ன்னு நினைச்சிருக்கலாம். என்ன இருந்தாலும் முதல்வர் இல்லையா?. சரிக்கு சரி வம்பு பண்ணா மரி
யாத இருக்காதுல்ல. பூட்ட உடைக்க சொல்லிட்டு, 'மத்தியானத்துக்கு மேலே எல்லாரும்
வகுப்புக்கு போங்கன்'னு சொல்லிட்டு போயிட்டாரு.

அரை நாள் விடுப்பு அதுக்கும் மேல பூட்டு தொல்லயும் அத்தோட ஒழிஞ்சது.

* உற்சாகத்துடன் *
நம்பி.
 ·  Translate
4
balarajan geetha's profile photoRavichandran Somu's profile photoO.R.B Raja's profile photoNambi Chinnaiyan's profile photo
10 comments
 
+balarajan geetha

உங்கள +ல பார்த்தப்ப, என்னைய நினைவுல இருமான்னு நினைச்சுகிட்டு இருந்தேன், நீங்க என்னாடான்னா என்னோட மொக்கைய (நானே மறந்து போன) எடுத்து கொடுக்கீறிங்க!
இதெல்லாம் அதீதம். இப்படி எல்லாம் மக்கள் பாசக்காரங்களா இருப்பீங்க்கன்னு தெரிஞ்ச்சிருந்தா அமெரிக்க அதிபர் ஆயிருப்பேனே, வடை போச்சே. (எப்படி என் ஆதரவுல அமெரிக்காவுல அதிபர் ஆவிங்கன்னு கேட்கக் கூடாது. அத்தனைக்கும் ஆசைப்படுன்னு ஸ்வாமிகள் ரஞ்சிதானந்தா சொல்லியிருக்காங்க)
 ·  Translate
Add a comment...

Ravichandran Somu

Shared publicly  - 
 
சம்மந்தி +குடுகுடுப்பை கோச்சிறுஞ்சோழன்அவர்களுக்காக !!!
 ·  Translate
2
1
Vasu Balaji (Bala)'s profile photoNANDHA KUMAR's profile photo
 
கேட்டுட்டாலும்:))
 ·  Translate
Add a comment...

Ravichandran Somu

Shared publicly  - 
2
1
Nambi Chinnaiyan's profile photoNANDHA KUMAR's profile photo
 
Of course love it!
Add a comment...
People
Have him in circles
1,665 people
naina mohamed's profile photo
prince thomas's profile photo
lalu pk's profile photo
Eelam Natham's profile photo
Kaleelourrahman M's profile photo
Shafi Ahamed's profile photo
manigandan s's profile photo
Venu Gopal's profile photo
thirupathi pathi's profile photo
Links
Other profiles
Contributor to
Basic Information
Gender
Male