Profile cover photo
Profile photo
மெய்ப்பொருள்
4 followers
4 followers
About
Posts

Post has attachment
தமிழ் கதாநாயகன் துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டை பிடிப்பதை ரசிக்கும் நமது ரசிகர்கள், மோடியின் இந்த சாகசத்தில் மயங்குவது இயற்கைதானே? ஆக, பெருகி வரும் சமமின்மையைக் களைய எதையுமே செய்யத் தயாராக இல்லாத மோடி அரசு, இதன் காரணமாகத் தோன்றும் அதிருப்தியை திசை திருப்புவதும், பணக்காரர்களின் பணத்தை ஒரே அறிவிப்பால் அழித்தது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதும் மட்டுமே இந்த அறிவிப்பின் நோக்கம். இதற்கான விலையையும் சாமானியன் தலையில் தொடர்ந்து சுமத்துவது மோடியின் ராஜதந்திரம்.
Add a comment...

Post has attachment
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்து, அதன் நடுப்பகுதியில் அல்-இஃக்வான் அல்-முஸ்லிமூன் இயக்கத்துடன் இணைந்து, ‘இறைமை அல்லாஹ்வுக்கே!’ என்று கூறிய ஒரே காரணத்திற்காக எகிப்தின் நாசரிய அரசால் தூக்கிலேற்றப்பட்டவர். சிறையிலிருந்த காலத்தில் அவரது கொள்கையைத் தளர்த்தும்படி கேட்டு, அவருக்கு மிகவும் நெருக்கமான அவரது தங்கை ஹமீதா குதுபை இயக்கத்தினர் அவரிடம் அனுப்பி வைத்தனர். தனது மரணத்தை எண்ணி கலங்கிய தங்கைக்கு இலட்சிய அண்ணன் எழுதிய நீண்ட மடலிது.
Add a comment...

Post has attachment
மாவோயிஸ்டுகள் என்று கூறி ஓடிசாவிலும், முஸ்லிம் பயங்கரவாதிகள் என்று கூறி மத்திய பிரதேசத்திலும் சென்ற மாதம் மோதல் கொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் பற்றி காவல்துறை கூறும் திரைக்கதைகள் சகிக்க முடியாதளவு மொக்கையானவையாகவும், ஓட்டைகளால் மட்டுமே ஆனவையாகவும் இருப்பது பற்றி அவர்கள் கொஞ்சம் கூட வெட்கப்படுவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், போபால் மோதல் கொலைகள் பற்றி விசாரணை செய்வதற்கென அமைக்கப்பட்டுள்ள புலனாய்வுக் குழுக்கள் எந்தத் தடத்தில் பயணிக்கின்றன என்பது பற்றி ஆராய்வதற்காக The Quint வலைத்தளம் ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியுள்ளது.
Add a comment...

Post has attachment
இஸ்லாமிய கட்சிகளை “பகுதியளவு இஸ்லாமிய இயக்கங்கள்” என்று வேண்டுமானால் சொல்லலாம். சரியான பொருளில் இஸ்லாமிய இயக்கம் என்பது ஓர் திறந்த அமைப்பாகும். முஸ்லிம்கள் அனைவரும் அதன் உறுப்பினர்களே.

ஒரு இஸ்லாமியக் கட்சியைத் தடைசெய்ய முடிவது போல் எவரும் இஸ்லாமிய இயக்கத்தைத் தடைசெய்துவிடவோ முற்றாக அழித்துவிடவோ முடியாது. கட்சித் தலைமையகம் அல்லது உத்தியோகபூர்வ கட்டமைப்பு என்று இருக்கும்போது மட்டுமே அதனைத் தடைசெய்வது சாத்தியமாகும். ஆனால் இஸ்லாமிய இயக்கத்தை அவ்வாறு முடக்க முடியாது.
Add a comment...

Post has attachment
போபால் 'மோதல் கொலைகள்' பற்றி மத்திய பிரதேச அரசும் போலீஸும் சொல்லி வரும் கதைகளை பிரபல ஆவணப்பட இயக்குனர் ராகேஷ் ஷர்மா ஒரு திரைப்பட இயக்குனரின் பார்வையிலிருந்து உடற்கூராய்ச்சிக்கு உட்படுத்தி இக்கட்டுரையை எழுதியுள்ளார். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலை பற்றி 'Final Solution' என்ற ஆவணப்படத்தை இயக்கியவர் இவர்.

// இந்தச் சிறையுடைப்பு சம்பவமே ஒரு புராணக்கதை போலிருக்கிறது. ஷோலே படத்தில் ஜெய்யும் வீருவும் 'வெள்ளைக்காரன் காலத்து சிறைக்காவலரிடமிருந்து' ('angrezon ke zamaaney ke jailer') தப்புவதைப் போல். //
Add a comment...

Post has attachment
‘ஷஹாதத்தே இமாம் ஹுசைன்’ என்ற தலைப்பில் மௌலானா அபுல் அஃலா மௌதூதி எழுதிய உருது கட்டுரையின் மொழிபெயர்ப்பை கீழே தந்துள்ளோம். இது ஜமாத்தே இஸ்லாமி (தமிழ்நாடு) வெளியிட்டு வரும் ‘சமரசம்’ பத்திரிகையில் ஹிஜ்ரி 1420 துல்ஹஜ், 1421 முஹர்ரம்-சஃபர் மாதங்களில் (2000 ம் ஆண்டு 04, 05, 06 மாதங்களில்) நான்கு பகுதிகளாக வெளிவந்தது.
Add a comment...

Post has attachment
‘கருப்புப் பணம்’ என்பது ஒரு இருப்பைக் குறிப்பதல்ல, ஓட்டத்தைக் குறிப்பது என்பதுதான் இதன் பொருள். ‘கருப்புச் செயல்பாடுகள்’ அவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபத்தை தருபவை; பணத்தைக் குவித்து வைத்திருப்பது லாபம் தராது.
Add a comment...

Post has attachment
வேர் மட்டத்தில் சக மக்களோடு இணைந்து பணியாற்றியும் சிந்தித்தும் நாங்கள் கற்றறியும் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் பிறரிடமிருந்து கற்றுக் கொள்ளவுமே இத்தளம். கற்றுக் கொண்டதை சுமந்து கொண்டு வினையாற்றிட மீண்டும் சமூகத்திடமே மீளுவதற்கான கல்விப் பாசறை இது.
Add a comment...
Wait while more posts are being loaded