Profile cover photo
Profile photo
Krishna Moorthy S
2,918 followers -
தேடலில் இருப்பவன்....! எதை என்பது தனிக் கேள்வி, தனித்தேடல்!!தங்களைப்பற்றிய சுயவிவரம், எழுத்து இவைகளைப் பற்றிய சிறு அறிமுகம் கூட இல்லாதவர்கள் என்னைத் தங்கள் வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டாமென்று வேண்டுகிறேன். அநாமதேயங்களை என்னுடைய வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்வதில்லை!
தேடலில் இருப்பவன்....! எதை என்பது தனிக் கேள்வி, தனித்தேடல்!!தங்களைப்பற்றிய சுயவிவரம், எழுத்து இவைகளைப் பற்றிய சிறு அறிமுகம் கூட இல்லாதவர்கள் என்னைத் தங்கள் வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டாமென்று வேண்டுகிறேன். அநாமதேயங்களை என்னுடைய வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்வதில்லை!

2,918 followers
About
Posts

Post has attachment
#துக்ளக் அட்டைப்பட நையாண்டி
Photo

Post has attachment
#துக்ளக் 49 ஆண்டுகளை நிறைவு செய்து 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. #டியர்மிஸ்டர்வாசகரே என்று அழைத்து வாசகர்களுடன் நேரடி உரையாடலை ஆண்டுதோறும்
நடத்துகிற மாதிரி வேறெந்த பத்திரிகையும் செய்வதில்லை.

நேற்று முன்தினம் நடந்த நிகழ்வின் முழு காணொளி இங்கே

Post has attachment
சமூகநீதி, சமநீதி! தொடரும் விவாதங்கள்!

நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றிய 124 வது சட்டத் திருத்தம், பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு தவிர வேறெங்காவது சர்ச்சை, விவாதங்கள் நடந்ததாக செய்திகள் உண்டா?

உண்மையை அறிந்துகொள்வதற்காகவாவது தேடிப் பார்த்திருக்கிறோமா? கனிமொழி மாநிங்களவையில் இந்த மசோதா மீது கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தவர்கள் யார் என்கிற விவரம், எண்ணிக்கை, என்னவென்று பார்த்தாலேயே, அல்லது முந்தைய பதிவில் மார்க்சிஸ்ட் கட்சியின் டி கே ரங்கராஜனுடைய நேர்காணலில் பார்த்தாலேயே கண்டுகொள்ளக் கூடிய எளிமையான தேடல்தான்!

Post has attachment
#JNU பல்கலைக்கழகம் கல்விக்குப் பெயர்போனதோ இல்லையோ, ஜனங்களுடைய வரிப்பணத்தில் #ஓசிச்சோறு தின்று கொழுத்து இடதுசாரிகள் அராஜகம் செய்கிற இடமாக முந்தைய ஆட்சியாளர்கள் வளர்த்துவிட்டுப் போனதில், துள்ளிக்குதித்த துக்கடாக்கள் மீது 1200 பக்கக் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டதன் பேரில் நடந்த விவாதம்!

கன்னையா குமார் உமர் காலித் ஆதரவாளர்கள் பலத்த கூவலில் விவாதத்திற்கு பதில் சொன்னவிதமிருக்கிறதே! ##ndtv சம்சாக்கள் கூட இப்படிக் கூவியிருக்க முடியாது!

Post has attachment
அதென்ன அவ்வளவு ரகசியமான R Document?

The R Document!

நீதிமுறையில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள ஒரு கதாபாத்திரத்தோடு கதை ஆரம்பிக்கிறது! நீதிமுறையைப் பாதுகாக்க முனைகிற அவருடைய உயிருக்கே உலை வைப்பதாகவும் கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.
கிறிஸ்டோபர் காலின்ஸ்!

அமெரிக்காவின் புதிய அட்டர்னி ஜெனரலாகப் பதவியேற்கிறார். அந்தத் தருணத்தில், அமெரிக்காவில் பெருகி வரும் வன்முறை, குற்றங்களைக் களைவதற்காக, அமெரிக்க அதிபர் அமெரிக்க அரசியல் சாசனத்தில் ஒரு திருத்தம் கொண்டு வர உத்தேசித்திருக்கிறார். 35 வது திருத்தம் என்று அந்த முயற்சி அழைக்கப் படுகிறது. தேச நெருக்கடி காலங்களில், உரிமைகள் குறித்த அரசியல் சாசன உத்தரவாதத்தை அடியோடு ரத்து செய்ய இந்தத் திருத்தம் வகை செய்வதாக இருக்கிறது. எப்போதும் போல ஆதரிக்கிறவர்கள், எதிர்க்கிறவர்கள் என்று இரண்டு தரப்புமே, இந்த உத்தேசத் திருத்தத்தின் மீது சவுண்டு கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

அட்டர்னி ஜெனரலான காலின்சுக்கோ இந்த உத்தேசத் திருத்தம், அவசியமில்லை என்று பட்டாலும், அதை அடியோடு எதிர்க்கிறவர்கள் கூச்சலிடுகிற மாதிரி, அதிகார துஷ்ப்ரயோகம் செய்யப் படாது, இருக்காது என்றே நம்புகிறார். உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

காலின்சுக்கு முன்பு அட்டர்னி ஜெனரலாக இருந்தவர், தன்னுடைய மரணப் படுக்கையில், அவரை அழைத்து, இரகசியமானதும் அபாயமானதுமான ஆர் டாகுமென்ட் என்ற ஒன்றைப் பற்றி எச்சரிக்கைசெய்ய விரும்புகிறார். காலின்சை அழைத்துவரச் சொல்லித் தகவல் அனுப்பி, இவர் அங்கே போய்ச் சேர்வதற்குள் அவர் மரணமடைந்து விடுகிறார். கடைசித் தருணங்களில் ஒரு பாதிரியாரிடம், பாவ அறிக்கையைச் சொல்கிற தருணத்தில், இந்த விஷயத்தையும் சேர்த்தே சொல்கிறார். ஆனால் அந்தப் பாதிரியார், அது ரகசியமானது என்று காலின்சிடம் மேற்கொண்டு எந்த விவரமும் தர மறுத்து விடுகிறார்

Post has attachment
தலைப்புச் செய்திகள்! தடுமாறும் அரசியல்!
January 16, 2019


மக்களவைத் தேர்தலுக்காக உ.பி.யில் காங்கிரஸ் தீவிரம்: பிப்ரவரி முதல் ராகுலின் 13 மெகா பிரச்சாரக் கூட்டங்கள் என்று முனகுகிறது ஹிந்து நாளிதழின் செய்தி. இது குறித்து துபாயில் பேட்டி அளித்த ராகுல், ''நான் கூறுவது தவறாகவும் இருக்கலாம். காங்கிரஸின் மதிப்பு குறித்து மாயாவதியும், அகிலேஷும் தவறாகக் கணித்து விட்டனர். இதற்காக நாம் சோர்ந்து விடாமல் போட்டியில் தீவிரம் காட்டுவோம்'' எனத் தெரிவித்ததாகவும் தொடர்ந்து சொல்வது எப்படி இருக்கிறதென்றால் .......

Post has attachment
News J சேனல் தன்னுடைய செய்திகளைத் தொடங்கி விட்டது போல இருக்கிறதே!
NewsJ
NewsJ
facebook.com

Post has attachment
எது சமூக நீதி? தொடரும் விவாதங்கள்!

கனிமொழி, என்ன அநியாயம் இது என்று ஒரே ஒரு கேள்விதான் சூடாகக் கேட்டார்! அதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் TK ரங்கராஜன் பரபரப்பான, பேசும் பொருளாகி விட்டார்! ஓசி விளம்பரமாகக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்! ஆனால் தெளிவான விடைகள் கிடைக்கிறதா என்பதை பார்க்கும் மக்கள் தான் வந்து சொல்லவேண்டும்!

Post has attachment
எப்போ சொன்னார் எங்கே சொன்னார்னெல்லாம் கேக்காதீங்க!
images ல எதையோ தேடிட்டிருக்கும்போது கூகிளான் #எனக்குன்னே கொண்டுவந்து காண்பிக்கிறான்!
Photo

Post has attachment
கனிமொழி என்ன அநியாயம் இது என்று ஒரே ஒரு கேள்விதான் சூடாகக் கேட்டார்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் TKR பரபரப்பான பேசும் பொருளாகி விட்டார்!
Wait while more posts are being loaded