Profile cover photo
Profile photo
Gowthaman Pasu
282 followers -
Periyarist - Writer - compiler - Publisher
Periyarist - Writer - compiler - Publisher

282 followers
About
Posts

சின்னப்பெரியவா
பெரியவாளாயிட்டா..
இன்னும் ஒரு
சின்னப்பெரியவா வருவா !
சங்கராச்சாரியமும்
சங்கர மடமும்
இன்னும் இருக்கும்
மறந்துவிடாதே
மரமண்டைத் தமிழினமே..!
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
என் 
வணக்கங்களும், 
வாழ்த்துகளும்.
Photo
Photo
2015-12-02
2 Photos - View album
Add a comment...

Post has attachment
குடிதாங்கிகள்....
-      பசு.கவுதமன்.

தமிழ்நாட்டின் இன்றைய தலைப்பு செய்திகளுக்கு ‘ விஷயதானம் ’ செய்து கொண்டிருப் பவர்களில் முக்கியமானவர்கள், குறிப்பிடத்தக்கவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர், இராமதாஸ் அவர்களும், மற்றும் அவரது மகனும், 2016ஆம் ஆண்டின் அறிவிக்கப்பட்ட முதலமைச்சர் வேட்பாளருமான மருத்துவர், அன்புமணி அவர்களும், ( இப்ப அந்த வடையும் போச்சு ) அவர்களைப் போன்ற அந்தக் கட்சியைச் சார்ந்த ‘ அறிவார்ந்த ’ பலரும், அவர்களோடு திராவிட ஒவ்வாமையால் கடுமையான பாதிப்புக்கு ஆளான தமிழ்தேசிய  ‘தம்ளர்களும்’ தான்! 
                                                
இவர்களுக்கு இருக்கின்ற பலமே - பொதுவாக அரசியல் ‘செய்பவர்களுக்கு’ - இருக்கின்ற பலமே, தமிழர்களின் இரண்டு தனிப்பட்ட குணங்கள்தான். அவையாதெனில், முதலாவது, எதையும் உடனடியாக, சுலபத்தில் மறந்துவிடுகின்ற பொதுப்புத்தி. அது நல்லதானாலும், கெட்டதானாலும் பொதுவான மறதி. ஆனால் தற்போது தமிழர்கள் கொஞ்சம் கொஞ்ச மாக அந்த ‘ அம்னீஷியா ’ விலிருந்து விடுபட்டு நடுவிலே கொஞ்சம் நினைக்கத் துவங்கி யுள்ளார்கள் என்பது ஆறுதல் தரக்கூடிய விசயம்.
இரண்டாவது, ‘பழக்கப்படுத்திக் கொள்வது’ என்பதைப் வழக்கமாக்கிக் கொண்டு பழகிக்கொள்வது. எந்த ஒன்றையும்"இல்லையா? சரிவிடு, பாத்துக்கலாம்"என்று பழகிக் கொள்கின்ற மனோபாவம். இந்த இரண்டு குணநலன்களுமேதான், தமிழ்ச் சமூகத்தின் சகலதளங்களிலும் அரசியல் ‘’ பன்னுகிறவர்களுக்கு ’’ பயன்படுகின்றது என்றால்  அது மிகையில்லை. இந்த பொதுபுத்திகளை மறக்காமல், அதன் அடிப்படையில் இதனை அசை போடவேண்டும்.

தோழர் திருமாவளவன் அவர்கள், தந்தி தொலைக்காட்சி செவ்வி ஒன்றில்  (30.12.2012) ஒரு செய்தியினை பதிவு செய்தார். மரு. இராமதாஸ் அவர்களுக்கு “ தமிழ் குடிதாங்கி ” என்ற பட்டத்தினை வழங்கியது தொடர்பாக, ஆனால் அதில் கூடுதலாக ஒரு செய்தியினை சொன்னார், “ வன்னிய பெண்கள் அவர் மீது மண்ணை வாறி இறைத்த பிறகும் எங்கள் தோழர்களுடன் நின்றார் ” என்பதாக! அந்த சம்பவம் உண்மைதான் ஆனால் அங்கே பெண்கள் கைகளில் இருந்தது மண்ணல்ல – தரையைக் கூட்டுகின்ற “ “விளக்கமாறு ” என்பதுதான் உண்மை! அதுமட்டுமல்ல, அவர்கள் மருத்துவரை நேருக்கு நேர் பேசியது எழுதமுடியாதது. ஆனாலும் அது பின்னால் வரும்.  அங்கே நடந்தது என்ன? குடிதாங்கிக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் என்ன சம்பந்தம்? அதுமட்டுமல்ல, அவருடைய பாதுகாப்பு கருதி தோழர்கள் அவரை, அவர்களுடன் வைத்துக்கொண்டனர். சொந்த சாதி துரத்தி விட்டது என்பதும், காலனி மக்கள் அவரை இங்கிருந்து போகச் சொல்லுங்கள் என்றதும், காவல்துறை இவர் இருந்தால் சட்டம் ஒழுங்கு கெடும். அவரை வெளியேற்றுங்கள் என்று சொன்னதும் உண்மை, உண்மை. பட்டம் வழங்கிய தோழர் திருமாவுக்கும், குடிதாங்கிக்கும் என்ன தொடர்பு? எப்போது தொடர்பு? தோழர் திருமா எப்போது குடிதாங்கிக்கு வந்தார்? அவர் ஏன் அந்தத் தமிழ் குடிதாங்கி பட்டத்தை மருத்துவர் ராமதாசுக்கு வழங்கினார்?  உண்மையில் யார் “ தமிழ் குடிதாங்கி ” ? என்பதை “ நோண்டி நொங்கெடுத்து ” சற்றேறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னால்  இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏன்? குடிதாங்கி நிகழ்வில்,
குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின்,
நீலப்புலிகளின் நிறுவனர் உமர்பாரூக் என்ற டி.எம்.மணி
என்ற ஆளுமைகளின் செயல்பாடுகளும், களப்பணியும், பங்களிப்பும்
இதுவரை பதிவு செய்யப்படவில்லை. எனவேதான் நமக்குத் தெரியாத, வெளிவராத செய்திகள், மறைக்கப்பட்ட உண்மைகளை பதிவு செய்ய வேண்டிய வரலாற்று அவசியம் ஏற்பட்டது.
இது என்னுடைய முன்னுரையின் துவக்கம் மட்டுமே!
விரைவில் நூலாக…,
கீழைத்தஞ்சை மாவட்டத்தின் விவசாயிகளின் வீரெழுச்சியில் பெரியாரியக்கப் பங்களிப்பு என்ன என்பதை பதிவு செய்த ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் போல…,
குடிதாங்கியில் பெரியாரிக்கப் போராளிகளின் பங்களிப்பு என்ன?
விரைவில் தரவுகளாக…,
அதிலிருந்து சில…,
தோழர் செல்வராஜ் (குடிதாங்கி வழக்கின் இரண்டாவது குற்றவாளி – A2 )
சொல்கின்றார், 

" நேரடியா ராமதாஸ் வீட்லே போய் பேசியவன் நான். புதுசா காலனிக்காரங்க பிரச்ச னைய கிளப்புறாங்க. FMD ஊர் மேப் எடுத்துக்கிட்டுப் போனேன். விரங்களைச் சொல்லி இது அவுங்க இடம், நம்ம இடம் எங்க இருக்குன்னு விபரமா பேசினேன். அவர் எதுவும் சரியா பேசல,
எங்க தோட்டத்துக்குப் போனிங்களா?
தோட்டம் ஏது – அப்பஏது தோட்டம்!
அப்ப தைலாபுரம் தோட்டமில்லையா?
அப்ப ஏது தோட்டம். திண்டிவனம் வீட்ல உட்கார்ந்து வராண்டாவில் -  இதுபோல ஒரு பெஞ்சிலதான் உட்கார்ந்து பேசினேன். இதேபோல ஒரு வீடு. அதிலே ஒரு பக்கம் ஆஸ்பத்திரி. வீட்டுக்கு வந்திடுங்கன்னாரு பக்கத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குப் போனோம்.
பண்ருட்டியார் சென்னையிலிருந்து வந்துகிட்டு இருக்கார். வந்துடுவாருன்னு காலை 10 ½ வரைக்கும் காக்க வச்சிட்டாரு. அவரு வரல, நாங்க விடிகாலை 5 ½ க்கு அவரு ஆஸ்பத் திரிக்குப் போயிட்டோம். ராமச்சந்திரன் வரல நாங்க திரும்பிட்டோம்.
ஒருவாரம் கழிச்சி சோழபுரம் மீட்டிங்கு இவர் – ராமதாஸ் – வந்துருக்காரு. வந்தவரு நேரா அவங்கத் தெருவுல ( காலனி தெரு ) நைட் 11 மணி வாக்கில போய் அவுங்ககிட்ட, எந்தப் பிரச்சனையும் இருக்கப்படாது. எதுவானாலும் எனக்கு போன் பண்ணுங்க நா வந்து தூக்கிட்டு வற்றேன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு…. "
இன்னும் அவர் தொடர்ந்து பேசுவார்.

இப்போது தோழர், அண்ணன் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின்,
" 120 வன்னியர் வீடுகள், 200 காலனி வீடுகள். முதலில் 120 வீடுகளிலும் பேசுகிறேன். ஆண்கள் ஒத்துக்கொள்கின்றார்கள். பெண்கள் ஒத்துக்கொள்ளவில்லை. எடுத்த உடன் முரண்படாமல் அடிக்கடி பேசத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் பெண்களுக்கும் நம்பிக்கை வந்தது. அண்ணன் சொல்றாருன்னு சிலபேரும், தம்பி சொல்லுதுன்னு சிலபேரும் ஏத்துகிற கருத்து உடன்பாடு வந்துடிச்சி. நான் அவங்களுக்கு ஏற்கனவே இருக்கிற நெருக்கடியை பயன்படுத்திக் கொள்கிறேன்.
என்ன நெருக்கடி?
அவங்க கொடுத்த வழக்கிலே இவங்க ( வன்னியர்கள் ) 80 பேர் மேல வழக்கு,  அவங்க
(சேரித் தோழர்கள்) 30 பேர் மேல வழக்கு. ஆறு மாசம் இவங்ககிட்டேயும், அவங்க கிட்டேயும் தொடர்ந்து பேசுகிறேன். பி.சி.ஆர் கேஸ். கேஸ் நெருக்கடி முக்கிய காரணம். 15 நாளைக்கு ஒருமுறை தஞ்சாவூர் செஷன்ஸ் கோர்ட்ல போய் கையெழுத்துப் போடனும். ஒரு வருசமா இப்படி கையெழுத்துப் போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த நெருக்கடியை நான் பயன்படுத்தினேன். தஞ்சாவூர் செஷன்ஸ் கோர்ட்லே போய் அவங்க கூட நின்னு கிட்டு நீ 80 பேரு 15 நாளைக்கு ஒருதடவ வற்றதுக்கு என்னாச்சி, நீ 30 பேரு உனக்கு என்னாச்சி? என்னாய்யா இது, உங்களுக்கு இது அசிங்கமாப்படலயா? இப்படிப் பேசிப் பேசியே இரண்டுபேரையும் ஒன்னா வச்சி காபி, டீ குடிக்க வச்சி , இப்படியான நடவடிக்கை ஆரம்பிச்ச பிறகுதான் அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு அவர்களை நம்முடைய இடத்திற்கு வரச்சொல்லி பேச ஆரம்பிச்சேன். அப்பறம் நாம மட்டும் இதிலே நின்னு பேசிடக்கூடாது என்று, டி.எம். மணியை உள்ளே கொண்டாந்து – அவர்கிட்டே நானே நேர்ல போய் சொன்னேன். அவர் உடனே, அண்ணே நான் வந்துடு றேன்னு சொல்ல அவரைக் கூட்டிக்கொண்டு முதல்ல வன்னியத் தெருவுக்குப் போய்ட்டு, இவங்கதெருவுக்கு வந்து ஒரு தேதிய FIX பன்னினோம்….."
அண்ணனும் தொடர்ந்து பேசுவார்.
இனி, அண்மையில் மறைந்த தோழர் டி.எம்.மணி…,

" 80 வன்னியர்களை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டு குடிதாங்கி சுடுகாட்டுச் சாலைப் பிரச்சனைக்கு முடிவு கண்ட பிறகு, சட்ட மன்ற உறுப்பினர்கள் குடந்தை ராமநாதன், போளூர் வரதன் போன்றவர்கள் சட்டமன்றத் தில் பா.ம.கவின் முகத்திரையை கிழித்தபிறகு, முதலமைச்சர் ஜெயலலிதா, பொதுச்சாலை வழியே பிணத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்ய உத்தரவிட்ட பிறகு, அரசியல் லாபம் கருதி பிரச்சனையை தான் முடித்ததாகக் காட்ட வேண்டும் என்ற நோக்கோடுதான் குடிதாங்கி வருகிறார் டாக்டர் ராமதாஸ். வன்னியர் சமூகப் பெண்கள் ராமதாசிடம் உங்கள் கட்சிக்காரர்கள்தானே மறித்தார்கள். இப்போது நீங்களே காட்டிக் கொடுப்பது போல சேரி மக்கள் பக்கம் சேருகிறீர்களே என்று கடுமையாக திட்டி, சேரிமக்களோடு அவர் வந்தால் மீண்டும் சாலையை மறிப்போம் என்றார்கள். நான்காண்டு காலம் போராடி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகண்ட எங்கள் மக்களும் ராமதாஸ் வருகையை விரும்ப வில்லை. DSP கந்தசாமியும், RTO பழனிவேலுவும் நீங்க இங்க இருக்காதீங்க, கலவரம் வரும்  போயிடுங்க என்று கட்டாயப்படுத்துகிறார்கள். நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. கும்பகோணத்திற்கு அண்ணன் ஆர்.பி.எஸ். ஸ்டாலினோடு போனில் தொடர்பு கொள்கிறேன்…… "
  
நூலில் இன்னும் பேசுவார் மறைந்தத் தோழர் டி.எம்.மணி என்ற உமர்பாரூக்,
விரைவில் தமிழ் குடிதாங்கிகள்….!

                                                  
PhotoPhotoPhotoPhotoPhoto
2015-08-08
7 Photos - View album
Add a comment...

Post has attachment
**
குடிதாங்கிகள்.... -       பசு.கவுதமன். த மிழ்நாட்டின் இன்றைய தலைப்பு செய்திகளுக்கு ‘ விஷயதானம் ’ செய்து கொண்டிருப் பவர்க ளில் முக்கியமானவர்கள், குறிப்பிடத்தக்கவர்கள் பாட்டாளி மக்கள்
கட்சியின் நிறுவனர் மருத்துவர், இராமதாஸ் அவர்களும், மற்றும் அவரது மகனும்,
20...
தமிழ்ப்பறை
தமிழ்ப்பறை
thamizhpparai.blogspot.com
Add a comment...

Post has shared content
பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடு

அண்ணல் அம்பேத்கரும் தந்தைப் பெரியாரும்  இந்தியநாட்டின் சாதிய இருள் நீக்க வந்த இரட்டைச் சூரியன்கள். பெரியார், அம்பேத்காரை தமிழ்நாட்டில் பரவலாக அறிமுகப்படுத்திக் கொண்டாடிய வரலாறு... 
Photo
Add a comment...

Post has attachment
ஈரோடு, நந்தா கலை அறிவியல் கல்லூரியில் ஜீ.வி.சார்பாக நடைபெற்ற 
“தமிழ் மண்ணே வணக்கம்” என்ற நிகழ்வில் எழுத்தாளர் சு. வெங்கடேசன் பேசியதை – உளறியதை – படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரியாருடைய கடைசி பத்தாண்டுகளில் நடந்ததாக ஒரு சம்பவத்தைச் சொல்கின்றார். பெரியாருக்கு வாயில் புற்றுநோய் வந்த கதையை சொல்லிவிட்டு அதற்காக தான் வீட்டுக்குப்போய் கடன் பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி வைத்துவிட்டு இறந்துபோகிறேன். வாயில் புற்றுநோய் வந்து செத்ததா இருக்க வேண்டாம், இதுவரைக்கும் நான் செய்த பிரச்சாரமெல்லாம் வீனாகிவிடும் என்று சொல்லிவிட்டுப் போன பெரியாரை உடன் வந்தவர் சென்னைக்குப் போய் வேறு ஒரு டாக்டரை பார்க்கலாம் என்று சென்னைக்கு வந்து டாக்டரைப் பார்க்க அவரோ இது சாதாரணப் புண் தான் என்று சிகிச்சை கொடுத்திருக்கிறார். நான் செத்தாலும் பரவாயில்லை. என்னுடைய கொள்கை சாகக் கூடாது என்று அந்த மனிதர் தற்கொலைக்குத் துணிந்தாரே, அந்த உறுதியும், கொள்கையும்தான் நம் எல்லோருக்கும் வேண்டும் என்று எழுத்தாளர் சு.வெங்கடசன் பேசி – உளறி – முடித்தாராம். இது ஜீவியின் நடுப்பக்கத்தில் பதிவாகி உள்ளது. இப்படி ஒரு அபத்தமான செய்தியை தோழர் திருமாவேலன் எப்படித்தான் பதிவு செய்தாரோ?
ஒரு நாடறிந்த “ நல்ல ” எழுத்தாளர், மாணவர்களுக்கு மத்தியில் பேசுகிற போது, அதுவும் பெரியார் பிறந்த ஈரோட்டில், இப்படியான தவறான தகவல் களைக் கொடுக்கலாமா? இப்போதெல்லாம் யாரும் எதையும் படித்துவிட்டு பேசுவதில்லை, எழுதுவதில்லை. அதுவும் பெரியாரைப் பற்றி என்றால் எது வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். “ பெரியபெரிய படிப்புப் படித்த பேராசிரியர்கள், முனைவர்கள் உள்ளிட்ட தமிழ்தேசிய சண்டியர்களிடம் ” தொடங்கிய இந்த “ பெரியார் ஒவ்வாமை ” வியாதி இப்போது “முற்போக்கு எழுத்தாளர்களிடமும்” பரவி விட்டதோ என்று நினைக்க வைக்கின்றது. காம்ரேடுகள் குறைந்தபட்சம் தோழர் ஏ.எஸ்.கேவின் “பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈவெரா” நூலையாவது படிப்பது நல்லது.
தந்தை பெரியாருக்கு புற்றுநோய் வந்தது உண்மை. எப்போது ? 1945களில். அப்போது பெரியார் செயற்கைப் பல் பொருத்தி இருந்தார். அந்தப் பல் உரசிஉரசி நாக்குப் புண்ணாகி விட்டது. அதற்கு, அவரின் அண்ணார் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் சித்த வைத்தியம் பலனளிக்கவில்லை என்பதால் சென்னை பொது மருத்துவமனையில் தங்கி – 16.03.1945 – சிகிச்சை பெறும்போது அவருக்கு நாக்கில் ஏற்பட்டிருப்பது புற்று நோய் என்று கண்டறியப்பட்டு அதுவும் குணப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த சம்பவத்தை புலவர் இமயவரம்பன் அவர்கள் குறிப்பிடும்போது “இதுவே பெரியாரில்லாமல் வேறொருவராக இருந்திருந்தால் தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பார்கள். ஆனால் அவர் பெரியார் அதனால்தான் அவரை ஏச ஆத்திகர்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது” என்ற கருத்துபட 91 வது பிறந்தநாள் விடுதலை மலரில் எழுதியதை படித்த நினைவு. இந்த சம்பவம் குறித்து கவிஞர் கருணானந்தம் அவர்கள் எழுதிய  ’ “தந்தை பெரியார்” வாழ்க்கை வரலாறு நூல் முதல் பதிப்பில் பக்கம் 169,170 களில் பார்க்கலாம், படிக்கலாம். தந்தை பெரியாருக்குத் தற்கொலை எண்ணம் வந்திருந்தால் இந்த மானமும், அறிவுங்கெட்ட தமிழ்ச் சமூகத்திற்காக ஏன் “ இமயமலை, வெயிலில் காய்கிறதே என்று குடை பிடிக்கப் போகின்றார்! ” “ என்னையே எண்ணி இப்பெரும் பணி ஏற்றேன் ” என்று சொல்லாமல் இந்த மானங்கெட்ட, நன்றிகெட்ட தமிழ்ச் சமூகத்திற்கு எள்ளும் தண்ணீரும் தெளித்துவிட்டுப் போயிருக்கலாமே ? 
எழுத்தாளப் பெருமக்களே, பேச்சாளப் பெருமக்களே, நீங்கள் பெரியாரைப் பற்றி பேசுங்கள், எழுதுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. காரணம், உங்கள் வாய், உங்கள் பேனா. ஆனால் உங்களிடம் “அது” இரண்டும் இருப்பதனால் எது வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்று நினைத்தால் அது இரண்டும் இல்லாமல் வேறு சிலவும் எங்களிடம் உண்டு என்பதை இப்போதைக்குச் சொல்லி வைக்கின்றோம். ஒரு தமிழ்தேசியர் கேட்டார், “ பெரியார் என்ன கடவுளா ? விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா ? ” என்று. பெரியார் ஒன்றும் இல்லாத கடவுள் இல்லை! அவர், நம் காலத்தில் நம்மோடு ரத்தமும், சதையுமாக வாழ்ந்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள்.          பெரியாரைப் படியுங்கள். விமர்சியுங்கள், வரவேற்கின்றோம். அதற்காக எவனோ, எப்போதோ எடுத்த வாந்தியை மீண்டும் உங்கள் வாயால் எடுக்காதீர்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. இப்போதைக்கு இதை இத்தோடு ……….., 
Photo
Add a comment...

தஞ்சை இலக்கிய வட்டம்
மற்றும்
ரிவோல்ட்
( கருத்துகளுக்கான களமும், தளமும் )

பசு.கவுதமனின்
ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும்- நிகழ்வுகளும்
பாட்டாளியின்
திராவிடநாடும் தேசிய இனவிடுதலையும்
நூல் ஆய்வரங்கம்

புலம்
பெசண்ட் அரங்கம் , தஞ்சாவூர் 

பொழுது
09.05.2015 -  மாலை 5-30 மணி

தலைமை : பசு.கவுதமன்

பங்கேற்பு :             தோழர். பாட்டாளி, எழுத்தாளர்

தோழர். மீ.தா.பாண்டியன் மத்தியகுழு உறுப்பினர், CP (ML) 

தோழர். கவின்மலர், ஊடவியலாளர்

தோழர். கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

ஒருங்கிணைப்பு

செ.சண்முகசுந்தரம்
,
Add a comment...

Post has attachment
இன்றைய பதிவு - 20.04.2015
-----------------------------------------------------
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
என்பது
மனிதர்களுக்கு மட்டுமல்ல
மரங்களுக்கும்தானோ ?
Photo
Photo
2015-04-20
2 Photos - View album
Add a comment...

Post has attachment
நேற்றைய பதிவு இது - 19.04.2015
---------------------------------------------------------------------------
தஞ்சாவூர்ல தேர்வருதாம் - எத்தினியோ வருசங் கழிச்சி
தேரு வற்றப்ப முட்டிக்காம இருக்க
எத்தினியோ வருசமா இருந்த 
மரத்தயெல்லாம் வெட்டி
மொட்டையா நிக்குது
கிளையுமில்லாம, இலையுமில்லாம.!
ஒத்த வீதியில மட்டுமே இது
மத்த வீதியில மரமே காணல !
வீதியெல்லாம்
வெளிச்சமா, விசாலமா இருக்கு
ஆனா,
தேரு தெனமும் வராதாம்
ஒருநாள் ஒடறதுக்கு
மூணு தலமுற மரமெல்லாம்
ஒடஞ்சி உசிர வுட்டிருச்சி?
அப்பறமா
மரம் வளத்து , மழை பெற
சீர்மிகு தஞ்சையிலே
எங்க ஊரு கலெக்டரு, மந்திரிங்க,
ஊரு பெரிய மனுஷாள்லாம் ஒன்னா கூடி
கும்பலா நின்னு
மரம் நடுவாங்க
புவி வெப்பமயமாதலைத் தடுப்போம்னு
கோஷம் வேற போடுவாங்க
படமா வரும் 
நாங்க பத்திரிகையிலே பாப்போம் !?
Photo
Photo
2015-04-20
2 Photos - View album
Add a comment...
Wait while more posts are being loaded