Profile cover photo
Profile photo
Gopikrishna Kanagalingam
154 followers
154 followers
About
Posts

Post has attachment

Post has attachment
கசாப்புக் கடைக்காரனின் ஜீவகாருண்யப் பேச்சு:
// உலகமெங்கிலும், தேசப்பற்று என்ற ஒன்றைக் கிளறிவிட்டால், தேசியவாதிகள் பலருக்கும் இரத்தம் புரண்டோடத் தொடங்கிவிடும். முட்டாள்தனமான தேசியவாதத்தைப் பின்பற்றாத எவருமே, துரோகிகள் தான். அரசியலிலும் சரி, ஏனைய விடயங்களிலும் சரி, இவ்வாறு துரோகிகள் ஆக்கப்பட்டோர் ஏராளம் ஏராளம். //
Add a comment...

Post has attachment
// சவூதி அரேபியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள் அல்லது இலங்கை போன்ற நாடுகளிலிருந்து செல்வோர், வறுமை காரணமாகவே அங்கு செல்கின்றனர். அவர்களின் வறுமையைப் பயன்படுத்தும் பிரயாண முகவர்கள், அவர்களை ஏமாற்றி அனுப்புவதான செய்திகளை, ஏராளமாகவே பார்த்திருக்கிறோம். இந்நிலையில், சவூதி அரேபியாவின் சட்டம் தொடர்பான விளக்கங்கள், அவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டதா என்பது முக்கியமான கேள்வியாகும். 'ஒரு நாட்டுக்குள் செல்லும்போது, அந்நாட்டின் விதிகளைச் சரியாக அறிய வேண்டியது, அவரவரின் பொறுப்பாகும். இப்போது தான் இணையத்தளங்கள் இருக்கின்றனவே' என்று யாராவது சொன்னால், யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லையென்று அர்த்தம். வீட்டில் மூன்று வேளை அடுப்பெரிய வேண்டுமென்பதற்காக, கொடூரமான நாடொன்றுக்குச் செல்லும் பெண்கள் அல்லது தொழிலாளர்கள், இணையத்தளங்களையோ, இல்லை பத்திரிகைகளையோ பார்ப்பார்கள் என எதிர்பார்ப்பது, முட்டாள்தனமே ஆகும்.//
// உள்ளூர் நபர்களை விட வெளிநாட்டவர்கள் மீதான மரண தண்டனை, அதிகளவில் வழங்குவதாக, தரவுகளுடன் நிரூபிக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, 'வறுமையான பொருளாதாரப் பின்னணியிலிருந்து பெரும்பான்மையாக வரும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது, அளவுக்கொவ்வாத வீதத்தில் மரண தண்டனை வழங்கப்படுவதென்பது, சவூதி அரேபியாவின் நீண்டகாலப் பிரச்சினையாகும்' எனத் தெரிவிப்பதோடு, அப்பணியாளர்களுக்கு, குடும்பங்கள் அங்கு இல்லாமையாலும், அங்குள்ள நாடுகளின் தூதுவரகங்களிலிருந்து குறைந்தளது உதவிகள் கிடைப்பதாகவும் இல்லாவிடில், உதவிகளே கிடைப்பதில்லையெனவும் தெரிவிப்பதோடு, நீதி நடைமுறைகள் அறிவோ அல்லது அரேபிய மொழியறிவோ இல்லாமையும் முக்கியமானது என்கிறது. //
// ல்லெறிந்து கொல்வதை நியாயப்படுத்துவோர், 'அந்நாட்டுச் சட்டம் அப்படித் தான். அதை மதிக்க வேண்டும்' என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், ஒரு காலத்தில், உலகின் பல நாடுகளில், அடிமைத் தொழிலென்பது சட்டபூர்வமானது என்பதை மறந்துவிடுகிறார்கள். ஒரு விடயம், சட்டரீதியாக ஏற்புடையது என்பதற்காக மாத்திரம், அதற்கெதிரான குரலை எழுப்பக்கூடாது என்போர், மனித நாகரிகமடைதலுக்கு எதிரானவர்களே. ஏனெனில், அடிமைப்படுத்தலுக்கு எதிரான குரல்களும் போராட்டங்களும், அக்காலத்தில் சட்டத்துக்கு எதிரான குரல்களே, ஆனால், அவை கொண்டுவந்த மாற்றங்கள், மனித நாகரிமடைதலில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவவில்லையா? //
Add a comment...

Post has attachment
Remember when you were upset when Facebook changed its Timeline view and you were outraged about it? Yes, when you were outraged about it, thousands of children died without food.
Remember when you were angry that a food was not good as it was promised? Hundreds all around the world died because of terrorism.
Remember when you were outraged that someone said something insensitive? Hundreds were dying without proper medical care at that time.
Remember that you are using the Internet to read this now? Billions of children are without the access to basic education.
So, ask me the question again? Why am I outraged about France, not Lebanon?
Add a comment...

Post has attachment
நுட்பமிக்க அணித்தலைமை, ஆக்ரோஷமான அணித்தலைமைப் பாணி, களத்திற்கு வெளியே அமைதியான ஆனால் உறுதியான ஓர் ஆளுமை என்பன மைக்கல் கிளார்க்கினை எதிர்காலத்திற்கு ஞாபகப்படுத்தும். மைக்கல் கிளார்க் என்ற அணித்தலைமை ஆளுமைக்குப் பின்னரே 245 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 44.58 என்ற சராசரியில் 7,981 என்ற ஓட்டங்களைப் பெற்ற அவரது துடுப்பாட்டம் ஞாபகப்படுத்தப்படும் என்பது அவரது அணித்தலைமை எவ்வளவு சிறப்பானது என்பதை வெளிப்படுத்துகிறது.
Add a comment...

Post has attachment
இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு என்பன இலங்கையின் தோல்விக்கான பொறுப்புக்களில் முக்கியமான பொறுப்பை ஏற்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் களத்திற்கு வெளியே எடுக்கப்பட்ட பல முடிவுகள் இலங்கையின் மோசமான பெறுபேறுகளுக்கு மிக முக்கியமான தாக்கங்களை செலுத்தியிருக்கின்றன...
Add a comment...

Post has shared content
The stilt fishermen of Weligama on the south coast of Sri Lanka.

Perched on a stick, they use a simple fishing line to collect the day's catch. A basket on the stick holds what they find until they're ready to go.

It was hard to get a photo on my phone without getting completely wet! I hope this gives you an idea.

#travel #travelphotography #srilanka #tbcasia
Photo
Add a comment...

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded