// செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா,
வஞ்சகன் கண்ணனடா //

இந்தப் பாட்டைப் பற்றி சுகா என்ன சொல்லப் போகிறாரோ என்று வேகவேகமாக படித்துக் கொண்டே வந்தேன். அருமையான முத்தாய்ப்பு :)
Translate
'அண்ணே, ஒங்களுக்கு விஷயம் தெரியுமா? ஒருவாரமா எல்லா எடத்துலயும் நல்லா ஓடிக்கிட்டிருக்கிற படம் 'கர்ணன்'. DTSல்லாம் பண்ணி புத்தம்புது படம் மாதிரி அசத்திட்டாங்க'.
3
1
ஸ்ரீதர் நாராயணன்'s profile photoVaithees Kumar's profile photoKrishna Moorthy S's profile photoLakshmi Naraayanan's profile photo
18 comments
 
போனவராம்தான் மீண்டும் பார்த்தேன். மிகை நடிப்பு ஆங்காங்கே தூக்காலாய் இருந்தாலும் - சிவாஜி, முத்துராமன், அசோகன் கூட்டணியிருந்தும் கொஞ்சம் கம்மிதான் - பந்துலுவின் விஷன், எம்.எஸ்.வி - டி.கே.ரா இசை, தேவுடுவின் ஸ்க்ரீன் ப்ரேசென்ஸ் என்று அசத்தாலான படம்.
Translate
 
அந்த நாட்களில் சிவாஜியை வைத்து மட்டும் படம் எடுக்கிறவர்கள், எம்ஜியாரை வைத்து மட்டும் படம் எடுப்பவர்கள் என்று இரண்டு பிரிவாக இருந்தார்கள். சிவாஜியை வைத்துப் படமெடுத்துக் கையை சுட்டுக் கொண்டு, எம்ஜியார் பக்கம் ஒதுங்கினவர்களில் கர்ணன் படத்தயாரிப்பாளரும் ஒருவர் என்பதாக நினைவு!
Translate
 
ஆமாம் அதற்க்கு கர்ணன் படம் ஒரு முக்கிய காரணம் :(
Translate
 
// தேவுடுவின் ஸ்க்ரீன் ப்ரேசென்ஸ் // என் டி ஆர் நடித்து நான் பார்த்த ஒரே படம் கர்ணன்தான். அதுவும் முழுவதுமாக அல்ல. செம கரிஸ்மாட்டிக் பர்சனாலிட்டி.

புராண படங்களைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம்தான். அப்படியே ஏபிஎன் படஙக்ளையும் மீள் வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும். :)
Translate
 
// அப்படியே ஏபிஎன் படஙக்ளையும் மீள் வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும்//

ஸ்ரீதர்! உங்களுக்கு நெஞ்சுரம் ஜாஸ்திதான்! :-)))))
Translate
 
ஸ்ரீதர் கண்டிப்பாக நவரத்தினம் என்ற வாத்தியாரின் ஏ.பி.என் படத்தை மீள் வெளியீடு செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள் :))
Translate
 
அட... கிமு சார்... நாகார்ஜுனா நடித்த அன்னமையா படத்தைக் கூட நான் விடாமல் பார்த்திருக்கிறேனாக்கும்.

முகத்தில் ஜிகினா தூள் பளபளக்க சுமனும் பானுப்ரியாவும் உலகை உய்விக்க நந்தகியை அன்னமய்யாவாக அனுப்பி வைக்க, அவரோ வயசு காலத்தில் (50 வயசு நாகார்ஜுனாதான்) தன் இரு அத்தைப் பெண்களோடும் குஷியாய் வலம் வந்து கொண்டிருப்பார். திடீரென தாயார் மானுட ரூபத்தில் வந்து எம்பெருமான் பிரசாதத்துடன் அன்னமய்யாவை தடுத்தாட்க் கொண்டு பக்தி மார்க்கத்தில் திருப்பிவிடுவார்.

ஏபிஎன் -னுக்கு என்ன குறைச்சல்? 'கீறி வாழுவது எங்கள் குலம். சஙக்ரனார்க்கு ஏது குலம்'னு அந்த காலத்திலேயே பஞ்ச் டைலாக் பேசி அசத்தியிருப்பாரே. திருவிளையாடலில் வலைஞனாக சிவாஜி நடந்து வரும் ஸ்டைலே தனி :))

// நவரத்தினம் // 9 ஹீரோயின்களோடு வாத்தியார் நடித்த படம்தானே.... சான்க்ஸ் கிடைச்சா பாக்கனும் :))
Translate
 
ஏ.பி.என் எடுத்த கந்தன் கருணை பாருங்க அப்புறம் தெரியும் கிருஷ்ணமூர்த்தி சொன்னதன் மகிமை. ஒரே காட்சியில் சிவாஜி, சிவகுமார், கே.ஆர்.விஜயா மற்றும் மாண்புமிகு டாக்டர் அம்மா அவர்களும் இணைந்து அசத்தியபோதும் தமிழர்கள் முருகபக்தி இன்னும் குறையாதது கண்டு சமயத்தில் கடவுள் இருக்கிறாரோ என தோன்றும்! :))

நவரத்தினம் கண்டிப்பா பாருங்க ஏ.பி.என் உச்சம் அது.
Translate
 
// கந்தன் கருணை பாருங்க // பாத்திருக்க மாட்டேன்னு எப்படி நினச்சீங்க வைத்தீஸ்? சிவாஜியோட வீரபாகு காஸ்ட்யூம்காகவே பார்க்க வேண்டிய படமல்லவா? :))))

ஏபிஎன் பத்தி வி.கே. ராமசாமி அவரோட பயாக்ரஃபில எழுதியிருப்பார் செம இண்ட்ரெஸ்டிங்கான மனுஷர். :)
Translate
 
ஸ்ரீதர்! அப்படியே சிவாஜி சொந்தமாத் தயாரிச்சு நடிச்ச என்தமிழ் என் மக்கள் படத்தையும் பாத்துடுங்க! சிவாஜி படம்னாலே தெனாலிராமன் பூனை கணக்கா ஓட வைக்கும் படம் அது! :-))))
Translate
 
ஆமாங்க, ஏ.பி.என் மிகவும் திறமையான சுவாரசியமான மனிதர், தில்லானா மோகனாம்பாள் போன்ற ஒரு சிக்கலான பெருங்கதையை சிறு பாத்திரங்கள் கூட இன்றும் நினைவில் இருக்கும் முன்று மணிநேர படமாய் ஆக்க முடியுமா?
Translate
 
நாங்கல்லாம், தர்மராஜா (கராத்தே சாம்பியன்), ரத்த பாசம் (ஸ்பெயினில் matador பைட்), லாரி டிரைவர ராஜகண்ணு, ஊருக்கு ஒரு பிள்ளை(மேஜரின் வாலிப மகன்), கருடா சௌக்கியமா (காட்பாதர்) போன்ற மலாய்பாத்களை குடித்தவர்கள் என் தமிழ் என் மக்கள் ஒரு கோல்ட்க்ளாஸ் மாதிரி :))
Translate
 
+Vaithees Kumar

என்தமிழ் என்மக்கள் மலாய்பாத் பகாலாபாத்களைவிடக் கொடுமையானது! தன்னுடைய அரசியல்ஞானத்தை சிவாஜி வெளிப்படுத்திய படம், ராஜீவ் காந்திக்குக் கட்சியை எப்படி நடத்தவேண்டும் என்று சொல்லிக் கொடுத்த படம் அது!சிவாஜியை நம்பி, அவர் தனியாக ஆரம்பித்த கட்சியின் நிர்வாகியாக சேர்ந்த மேஜர் சுந்தர்ராஜனை ஒன்றுமே இல்லாமலாக்கிப் பழி சுமத்திய அனுபவமும் கூட.
Translate
 
படம் பார்த்திருக்கேங்க 'பேரில் மட்டும் காந்தி இருந்த போதாது' என காமெராவை பார்த்துப்பேசி நொந்துப்போனார் அப்பாலே. மேஜர் மட்டும் சாதாரண ஆளா என்ன, அந்த முறை ஜானகியோடு சேர்ந்து ஆட்சிக்கு வந்தா ஹோம் மினிஸ்டர் ஆகலாம்னு கனவு கண்டவர்தானே - காரணம் எத்தனை படத்தில் போலிசா நடிசிருக்கார் #சீரியஸ்
Translate
 
// போன்ற மலாய்பாத்களை குடித்தவர்கள் // :)))))

சுவையான விவாதத்திற்கு மிக்க நன்றி வைத்தீஸ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி.

சிவாஜியின் படங்கள் பார்ப்பதற்கு என்று ஒரு மனநிலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 'சார்... அளவோடு பண்ணிக்கொடுங்க' என்றால் அவரும் பதமாக முதல்மரியாதை, பெரியத் தேவர் போல பண்ணிக் கொடுத்துவிடுவார். 'ஆடியன்ஸுக்கு புரியாது சார்... இன்னும் எமோஷனலா வேணும்... நல்லா...நல்லா... சூப்பர் சார். மர்லன் பிராண்டோவை மர்டர் பண்ணிட்டீங்க சார்...' என்று ஏத்திவிட்டால் அவர்தான் பாவம் என்ன செய்ய முடியும்...

சில வாரங்கள் முன்னால் 'பலே பாண்டியா' படம் பார்த்தேன். காமெடி செய்கிறேன் என்று இழுத்து இழுத்துப் பேசுவார். 'சாஆஆஆர்... சாஆஆஆர்...சாப்பிட்டு நாலு நாளாவுது சாஆஆஆர்' என்பார். எதிரில் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்கும் எம் ஆர் ராதா 'தெரியுது... தெரியுது... நாலு நாள் சாப்பிடாதவன்னு உடம்பை பாத்தாலே தெரியுது' என்று வாரிவிடுவார் :))

சிவாஜியின் நடிப்பு ஆளுமையைப் பற்றி சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் 'சிதம்பர நினைவுகள்' படிக்க வேண்டும். பிரமாதமாக எழுதியிருப்பார். அக்காலகட்டத்தில் அந்த மிகைநடிப்பின் வீச்சு அளப்பரியதுதான். :)
Translate
 
ஸ்ரீதர் நான் மிகை நடிப்பின் எதிரி அல்ல, மிகை நடிப்பு என்ற பேரில், உடல் மொழியை வைத்துக்கொண்டு பார்பவர்களை படுத்தி எடுக்கும் - நீங்கள் சொன்ன காட்சி ஒரு சோறு பதம்- அந்த கொடுமைதான் பிடிக்கவில்லை.

சிவாஜி என்ற நடிகர் எம்.ஆர்.ராதாவோடு நடித்த முக்கியமான இரண்டு படங்களில் - பாவ மன்னிப்பு, பலே பாண்டியா - இருவரும் இணைந்து வரும் காட்சிகள் போதும் ராதா எப்பேர்பட்ட நடிகர் என தெரியும். இந்த சிங்கத்துக்கு தயிர் சாதம்', 'மிகை நடிப்பை விரும்பிய காலம்' போன்ற புளித்துபோன போன்ற சப்பைகட்டுகளை ஒதுக்கி பார்த்தல், அதே காலகட்டத்தில், எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர், பாலையா, நாகேஷ் போன்று உணர்ச்சிகளை சரியாய் பயன்படுத்திய நடிகர்களை காணமுடியும். உதாரணம் எம்.ஆர்.ராதாவின் பாவமன்னிப்பு; திமிரான உயர்சாதி வெறிகொண்ட பணக்காரர், தவறை மறைக்க எதுவும் செய்யும் குற்றஉணர்வு, மகனை அறிந்தபின் அகங்காரம் அழிந்த நிலை என அத்தனை குணச்சித்திரங்களையும் காண்பிக்கும் மகத்தான நடிகன்.

என்னை பொருத்தவரை சிவாஜி தமிழ் சினிமாவின் சச்சின் டெண்டுல்கர் போல அவரை விட சிறந்தவர் பலர் இருந்தாலும் எல்லோரும் அவர் புகழ் பாடுவது போல. :))
Translate
 
நடிப்பு என்பதே மிகைப்படுத்தல் தானே! எந்த அளவுக்கு என்பதில் தான் கருத்துவேறுபாடுகள் வருகிறது. உதாரணமாக பதிபக்தி படத்தில் சாவித்திரி முன்னால், கொட்டுகிற மழையில் சிவாஜி தரையில் உருண்டு உருண்டு பத்துப் பக்கம் வசனம் பேசுகிற கொடுமையை இன்றைக்கு சகித்துக் கொள்ள முடியுமா?

அன்றைக்கு அதே நிலை தான்! ஜனங்களுக்கும் வேறு சாய்ஸ் இல்லாததால் சகித்துக் கொண்டார்கள்! சிலர் மலைத்துப் போய் இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் சிவாஜி பக்கம் குறையே இல்லை என்பதில்லை! சிவாஜில் நாடக மேடையில் இருந்து திரைக்கு வந்தவர். நாடக மேடையை மறந்து இயல்பாக அவரை நடிக்க வைக்க மிகச் சில இயக்குனர்களாலேயே முடிந்தது என்பது ஒருபக்க உண்மை! நாடக மேடையைத் தாண்டி அவரால் வரமுடியவில்லை என்பது சிவாஜியின்குறை என்றே எனக்குப் படுகிறது
Translate
Add a comment...